ஜோதிடம்
ஒன்பதாமிடம்...
9,மிடம் பிதுர் ஸ்தானம் என்றும் ஜெனனஎந்த ராசியினும் பிதுர் காரகர் சூரியனாகிறார்..
மேஷத்திற்கு.. குரு வும்
ரிசபமிதுனத்திற்கு.. சனியும்
கடகத்திற்கு.. குருவும்
சிம்மத்திற்கு.. செவ்வாயும்
கன்னிக்கு.. சுக்கிரனும்
துலாமிற்கு.. புதனும்
விருச்சிகத்திற்கு.. சந்திரனும்
தனுசுவிற்கு.. சூரியனும்
மகரத்திற்கு.. புதனும்
கும்பத்திற்கு.. சுக்கிரனும்
மீனத்திற்கு.. செவ்வாயும் பிதுர் காரகராவார்கள்...
தந்தையைப்பற்றிய விபரங்களறிய சூரியனாலும் ஒன்பதாமிடத்திற்குறியவனாலும் இயலும்...
ஒன்பதாமதிபன் சுபராயினும் அசுபராயினும் அவர் இருக்கும் நிலைக்குறிய பலாபலனையே தருவார்...
பிதுரஸ்தானாதிபதி பலம் பெற்றாலும் காரகனாகிய சூரியன் வலுவிழந்திருப்பானெனில் பலன் சிறப்பாயிராது...
பிதாஸ்தானத்தை கவனிக்கும்போது,9,திற்கு9,என்றவகையில் ஐந்தாமிடத்தையும் கவனிப்பது நலம்..
5,மிடம் என்பது அம்மான் மற்றும் புத்திரஸ்தானம் ஆயினும் பிதாவைப்பெற்ற ஸ்தானமுமாகும்...
5,வீட்டோனும்,9,ம்வீடடோனும் பிதாகாரகனாகிய சூரியனோடு இணைவதும்
சனிசூரியனும்,5,9,க்குடையவர்களும் ஒரேவீட்டிலிருந்தாலும் அன்றி சனிதவிர மற்ற கிரகங்கள் சேர்ந்து சனியால் பார்க்கப்பட்டாலும் தந்தைக்கு அரிட்டமுண்டாகும்...
இதில் சனி ஆயுள்காரகனாயிற்றே கொல்வானா என்பது கூற்றாயினும்...
அனேக நூல்களில் சனி சேர்ந்தால் நற்பலனும் பார்த்தால் துற்பலனும் உண்டென உரைக்கின்றன...
சனிபார்க்க உடனே மரணமென எண்ணுதலும் தவரே
சனியின் திசையாவது அன்றி அவனிருக்கும் இடத்ததிபதியின் திசையாவது அவன் ஏறியசாராதிபதியின் திசையாவது நடந்தாலே இது நடைபெறும்...
9,மிடத்தில் சனிநின்று,1,4,7,10,ல் செவ்வாய் நிற்க தந்தை க்கு அரிட்டம்.
சூரியனும் செவ்வாயும் சேர்ந்து,8,லிருக்க தந்தைக்கரிட்டம்..
ஜென்மராசிக்கு,9,பாவக்கிரகங்கள் நின்று அந்தராசிக்கு,1,4,7,10,பாவக்கிரகங்கள் இருப்பினும்
சூரியன் நின்ற இராசிக்கு,7,ல் சனி செவ்வாயிருப்பினும்தந்தைக்கரிட்டமே...
சூரியனுடன் ராகு நின்று ஜென்மலக்னத்திற்கு,5,லும் பிதர்ஸ்தானத்திலும் சனி நிற்க அவர்கள் திசாகாலங்களில் தந்தைக்கரிட்டமுண்டு...
ஜெனன காலங்களில் சூரியன் நின்ற இராசிக்கு இருபுறமும் நீச்சம் பகை பெற்ற கிரகங்களிருப்பின் அச்சாதகன் தாயின் கருவிலிருக்கும்போதே தகப்பனுக்கு அரிட்டமாம்..
5,ம்வீட்டுக்குடையவன் பலம்பெற்றிருப்பின் மற்ற கிரகங்கள் எவ்விதமிருப்பினும்
தந்தைக்குறிய அரிட்டமானது நீங்கிவிடும்....
Comments
Post a Comment