தாந்திரீக சாஸ்திரம்:-
1. விபூதியை ஊற்று நீர்¸ ஆற்று நீரால் குளிர்ந்த நீரிலேயே குழைக்க வேண்டும். உப்பு நீர்¸ வெந்நீர் பழைய நீர்¸ பாசி¸ குமிழி¸ நுரை¸ கலங்கள்¸ புழு முதலியவை உள்ள அசுத்த நீரில் குழைப்பது ஆகாது. விபூதியை பெறுங்கால் வந்தன உபசாரத்துடன் இரண்டு கைகளாலும் பெறுதல் வேண்டும். விபூதியை சதுரமாகவோ பொட்டாகவோ தரித்தல்கூடாது. முக்கோடாகக் கிழக்கு நோக்கி பூசுதல் வேண்டும்.
2. தேசாந்திரம் போனவர்கள் பற்றிய செய்தி 12 வருசம் வரை தெரியாவிட்டால் அவர்கள் இறந்து போயிருப்பார் என்று நம்பி தர்பையைக் கட்டி தகனம் செய்து பிறகு 3 நாட்களில் மற்ற கர்மாக்களைச் செய்ய வேண்டும். திதி தெரியாததால் தேய்பிறை அஷ்டமி¸ ஏகாதசி¸ அமாவாசை¸ முதலியவற்றையும்¸ மாதத்திற்கு ஆடி¸ புரட்டாசி¸ மாசி ஆகியவற்றையும் வைத்துக்கொள்ளலாம். தாய்¸ தகப்பன் விசயத்தில் 16வது வருஷத்தில் இதனை செய்யவேண்டும்.
3. பெண்களின் வலது பக்கத்தில் சரஸ்வதியும்¸ இடது பக்கத்தில் லட்சுமியும்¸ வாசம் புரிகின்றனர். எனவே¸ பெண்கள் முதன் முதலில் வலது பக்கத்தில் குழந்தைகளுக்கு பால் கொடுக்க வேண்டும். வலது பாகம் சரஸ்வதி பாகமென்பதால் குழந்தைகள் அறிவும் ஆற்றலும் ஞானமும் அடையும்
4. கன்னியை கனவில் கண்டால் செல்வம்¸ ஆரோக்கியம் உண்டாகும்.
5. நீங்கள் அழுது கதறுவதாகக்க கனவு கண்டால் அதிர்ஷ்டம் தேடிவரும்.
6. ஒருவரது வீட்டில் உள்ள நாய் கண்ணீர் விட்டு கொண்டே உணவு உண்டால் துன்பம் வரும். வெளியே சென்றுகொண்டிருக்கும் ஒரு நாயானது வீட்டுக்கு வெளியே நின்று கொண்டு தன் தலையை மட்டும் வீட்டுக்குள் நீட்டிக் குரைத்தால் அந்த வீட்டிலுள்ளோருக்கு நோய்கள் வரும். நாய் வீட்டுச் சுவரைக் கீறினால் நஷ்டங்கள் வரும்.
7. கர்ப்பமான பெண்கள் 2வது மாதத்தில் இரட்டைப் பிளையார் வைத்து வணங்கவும்¸ 3வது மாதத்தில் சூலம் வரைந்து வணங்கவும்¸ 4வது மாதத்தில் நாகம் வரைந்து வங்கவும்¸ 5வது மாதத்தில் பரமசிவனை பூஜிக்கவும்¸¸ 6வது மாதத்தில் ஆறுமுகனையும்¸ 7வது மாதத்தில் ஏழு வகை அம்மனையும்¸ 8வது மாதத்தில் விஷ்ணுவையும்¸ 9வது மாதத்தில் நவகிரகங்களையும்¸ 10வது மாதத்தில் இஷ்ட தேவதையையும் பூஜிக்கவும். இதனால் பிறக்கின்ற குழந்தை அறிவு அதிஷ்டம்¸ கொண்டதாக இருக்கும்.
8. ரோஜாக்களில் பல வகை உள்ளது. பெண்கள் வெள்ளை ரோஜாவை சூடினால் வலுச்சண்டை வரும்.
9. சிகப்பு ரோஜாவை ஒற்றையாக வைக்கக்கூடாது. ஒன்றிற்கு மேற்பட்டதாக வைக்க வேண்டும். இல்லையென்றால் ஏமாற்றங்கள் உண்டாகும்.
10. ஒருவன் பணிப்பெண்ணை நெருங்கினால் நல்ல சுபாவமும் குடும்பப் பெயரும் கெடும். விலை மாதரை நாடினால் செல்வமும் செல்வாக்கும் நாசமாகும். விதவையோடு சேர்ந்தால் பலமும்¸ ஆயுளும் குறையும்.
11. வேறு காரணத்தால் சிரார்த்தம் (திவசம்) உரிய திதியில் செய்ய முடியாவிடினும்¸ திதி இன்னதென்று தெரியாவிடினும் தேய்பிறை ஊகாதசியிலாவது அமாவாசையிலாவது செய்ய வேண்டும்.
12. சுமங்கலிப் பெண்கள் குளிக்காமல் சமைத்தல்¸ பூஜை செய்தல்¸ திருநீறு அணிதல் கூடாது. உடுத்த துணியை துவைக்காமல் வைத்துவிட்டு குளித்த பின் மீண்டும் துவைத்தல் கூடாது.
13. பெண்கள் பகலில் உறங்கக்கூடாது. (கர்ப்பினிகளைத் தவிர). பகலில் பெண்கள் உறங்கினால் எவ்வளவு செல்வாக்கு வந்தாலும் அது இருந்த இடம் தெரியாமல் சிறிது சிறிதாக தொலைந்துவிடும். வருவதும் தெரியாது போவதும் தெரியாது.
14. வியாதிகள் எல்லாம் முற்பிறவியில் செய்த பாவத்தால் வரக்கூடியது. கோபத்தால் பழங்கள்¸ காய்கறிகளை வீசியெறிவது¸ அலட்சியத்தினாலும் சோமபலினாலும் சேனைக்கிழங்கு போன்ற கிழங்குகளை காலால் எத்துவது ஆகிய இவையெல்லாம் பாவச் செயலாகும். இச்செயலை சென்ற பறவியில் செய்தவர்களுக்கு கால்களில் வீக்கமும் மிகுந்த வாதநோய் உண்டாகும். இதற்கு மணி¸ மந்திர ஒளஷதம் ஆகிய மூன்று முறைகளிலும் முயற்சித்து ரோக பரிகாரமும் தேட வேண்டும்.
15. தேய்பிறையில் கடைசி ஐந்து திதிகளும்¸ வளர்பிறையில் முதல் ஐந்து திதிகளும் குருட்டுத் திதிகள் எனப்படும். எனவெ¸ இந்த பத்து தினங்களிலும் சுபகாரியங்கள் செய்தல் கூடாது.
16. பெண்கள் காதின் மேல்¸ கீழ் பகுதியின் இடைப்பட்ட இடைவெளி பின்னந் தலையில்தான் பூ வைக்க வேண்டும். பூவினை தொங்கும்படி வைக்கக்கூடாது. உச்சந்தலையிலும் வைக்கக்கூடாது. தளர்வாக பின்னிப் பூவினை கழுத்து அருகில் வைப்பதும் தவறு.
17. நாம் வைத்த உணவை காக்கை கிழக்கு திசையில் எடுத்தால் செல்வம் உண்டாகும். தென்புறம் எடுத்தால் நோய் வரும்¸ மேற்குப்புறம் எடத்தால் வெளியூர் செல்வோம்¸ வடபுறம் எடுத்தால் ஆயுள் விருத்தியாகும்¸ காக்கை உணவு எடுக்காமல் இருந்தால் குடும்பத்திற்கு துன்பம் உண்டாகும்.
18. ஒரு வீட்டில் இரண்டு சிவலிங்கங்களையும்¸ இரண்டு விஷ்ணு சக்கரங்களையும்¸ மூன்று சுப்பிரமணியர் வேல்களையும் வைத்து வணங்குதல் கூடாது. இதனால் செல்வ விருத்தி உண்டாகாது.
19. கருத்தரித்த குழந்தை கலைந்தால் தீட்டு. கரு எத்தனை மாதமோ அத்தனை நாட்கள் தீட்டு. மாணவத் தோழன் இறந்தால் ஒரு நாள் தீட்டு.
20. நிதியில் எப்போதும் பிரவாகத்திற்கு (நீரோட்டத்திற்கு) எதிராகவும்¸ குளங்களில் பகலில் சூரியனை நோக்கியும்¸ இரவில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கியும் நீராட வேண்டும்.
21. எவ்விஷயத்திலும் குழந்தைகள் கவனத்தை 60 நிமிடம் சேர்ந்தாற்போல் ஈர்ப்பதற்கு இதுவரை செய்த முயற்சிகள் பயன் அளித்ததில்லை. மதத்தில் பற்றுள்ளவர்கள் எந்த புதிய விஷயத்தையும் புதிய முகூர்த்தத்திலே ஆரம்பிக்க வேண்டுமென்று விதித்திருக்கிறார்கள். முகூர்த்தம் என்பது 48 நிமிடம். இம்முடிவின்படி 45 நிமிட கால அளவே பள்ளிகளில் பாடமணி என்று ஏற்பாடாகி இருக்கிறது.
Comments
Post a Comment