ப்யோ என்சைம் லீக்விட் :
ப்யோ என்சைம் லீக்விட் :
ஒரு பங்கு நாட்டு சர்க்கரை (அ) வெல்லம், மூன்று எலுமிச்சை,1 லிட்டர் தண்ணீர் (1:3:10 ).எலுமிச்சையை தோலுடன் அரைத்து நாட்டுச் சர்க்கரையுடன் தண்ணீரில் கலந்து பிளஸ்டிக் பாட்டிலில் ஊற்றி மூடி வைக்கவும், சிறிது இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.தினமும் ஒரு முறை 10 நாட்களுக்கு கலந்து இருட்டான இடத்தில் மூடி வைக்கவும்.90 நாட்களுக்கு பின் உபயோகப்படுத்தலாம். yeastயை சிறிதளவு சேர்த்தல் 30 நாட்களில் தயார்.
இதை துணி துவைக்க, பாத்திரம் கழுவ, காய்கறிகள், பழங்களை கழுவ, வீடு துடைக்க, அடுப்பு, ஜன்னல், கதவு,கார் துடைக்க பயன்படுத்தலாம்.
குளிக்க,ஷாம்புக்கு பதில் உபயோகிக்கலாம் கூட பூந்திக்காய் 4, சீயக்காய் 2 சேர்த்தால் போதும். தலை முடிக்கு மிக சிறந்த கண்டிஷ்னர்.
shoe விலுள்ள துர்நாற்றம் நீங்க, சாக்கடையில் சிறிது ஊற்றினால் நாற்றமில்லாமல் இருக்கும்.
பூச்சி விரட்டியாக பயன்படுத்தலாம். இதுவொரு Multi Purpose Liquid.
முற்றிலும் இயற்கையானது, பாதுகாப்பானது. இந்த ஒரு பொருள் போதும் அனைத்துக்கும்,இதை தயார் செய்து உபயோகப்படுத்துங்கள் நம் வருங்கால செல்வங்களுக்காக ப்ளிஸ்....
Comments
Post a Comment