அனுபவ வீட்டு மருத்துவக் குறிப்புகள்..!!!

எளிய அனுபவ வீட்டு மருத்துவக் குறிப்புகள்..!!!

உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் நீங்க
வெந்தயம்   ...   மூன்று தேக்கரண்டி
ஓமம்    .  ...   மூன்று தேக்கரண்டி
மிளகு      ...........  ஒரு தேக்கரண்டி
சுக்கு   ................   மூன்று துண்டுகள் (சுத்தி செய்தது )
எண்ணெய் விடாமல் வெறும் வாணலியில் ஒவ்வொரு பொருளையும் தனித்தனியே பொன்னிறமாக வறுத்து எடுத்து ஒன்றாகச் சேர்த்து அரைத்து சூரணமாக்கவும்
நூறு மில்லி நீரைக் கொதிக்க வைத்து இறக்கி அதில் கால் தேக்கரண்டி சூரணம் சரத்துக் கலந்து மிதமான சூட்டில் இரவு உணவுக்குப் பின் அரை மணி நேரம் கழித்து குடிக்க வேண்டும்
பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை இந்த தீநீரைக் குடித்தால் போதுமானது தினமும் குடிக்கத்தேவை இல்லை
இவ்வாறு குடித்து வர உடலில் தங்கியுள நச்சுக்கள் நீங்கி இரத்தம் தூய்மை அடையும் .உடல் பூரிப்படையும்
இது ஒரு அனுபவ எளிய வீட்டு மருத்துவம் ஆகும் .

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-