அல்சர்:-


அல்சர் நோயை குணப்படுத்தும் திராட்சை :-
திராட்சைப்பழம் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தக்கூடியது. திராட்சையில் பச்சை, கறுப்பு என எந்த பழம் இருந்தாலும் சாப்பிடலாம். குறிப்பாக அல்சர் என்று சொல்லப்படும் வயிற்றுப்புண், குடல்புண், வாய்ப்புண்ணுக்கு திராட்சை அருமையான மருந்தாகும்.
தினமும் காலையில் கண் விழித்ததும் திராட்சைப்பழத்தை சாறு எடுத்து குடித்து வாருங்கள்... வேறு எந்த மருத்துவ சிகிச்சைக்கும் கட்டுப்படாத வயிற்றுப்புண் முழுவதும் குணமாகும். இதேபோல், தலைசுற்றல், மலச்சிக்கல், கை - கால் எரிச்சல் உள்ளவர்களும் திராட்சையை வெறுமனே பழமாகவோ, ஜூஸாகவோ சாப்பிட்டு வந்தால் கைமேல் பலன் கிடைக்கும்.
பொதுவாக பல்வேறு நோய்களுக்கு முக்கிய காரணமாக இருக்கும் மலச்சிக்கலை சரிசெய்ய திராட்சை நல்ல மருந்தாகும். மலச்சிக்கல் உள்ளவர்கள் உலர் திராட்சையை இரவு உறங்கும் முன் ஒரு கைப்பிடி அளவு சாப்பிட்டால் மறுநாள் காலை அதன் பலன் தெரியும்.
இதே பிரச்சனை குழந்தைகளுக்கு இருந்தால், சிறிதளவு தண்ணீரில் உலர் திராட்சையை இரவில் ஊறப்போட்டு காலையில் கண்விழித்ததும் அதை நசுக்கி அதன் சாற்றை மட்டும் குடிக்க கொடுத்தாலே பிரச்சனை சரியாகிவிடும். கர்ப்பிணி பெண்களுக்கு வாய்க்குமட்டல், வாந்தி, வாய்க்கசப்பு இருக்கும். அந்தமாதிரி நேரங்களில் திராட்சை சாப்பிட்டால் பலன் கிடைக்கும்.

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-