முன்னோர்கள் சொன்ன பழ தயிர் சாதம் உணவே மருந்து
முன்னோர்கள் சொன்ன பழ தயிர் சாதம் உணவே மருந்து:-
தேவையானப் பொருள்கள்:
அரிசி சாதம் – அரை கப்,
தயிர் – 2 கப்,
பச்சை மிளகாய் – 1,
கேரட்- 1,
மாங்காய் – 1,
மாதுளை – கால் கப்,
திராட்சை – 20,
ஆப்பிள் – 1,
கொத்தமல்லி – சிறிதளவு.
செய்முறை:
பச்சை மிளகாயை சிறியதாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
கேரட் மற்றும் மாங்காயை துருவிக் கொள்ள வேண்டும்.
ஆப்பிளை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
தயிருடன் தேவையான அளவு உப்பு சேர்த்து அதனை வேக வைத்த அரிசி சாதத்துடன் கலந்து வைக்க வேண்டும்.
பின்பு அதனுடன் சிறிதளவு கொத்தமல்லி மற்றும் நறுக்கிய பழ வகைகள் சேர்த்து நன்கு கிண்ட வேண்டும்.
இப்போது சூடான பழ தயிர் சாதம் தயார்.
மருத்துவக் குணங்கள்:
தயிரில் கால்சியம் மற்றும் புரோட்டின் சத்து அதிகம் நிறைந்துள்ளது,இதில் பழ வகைகள் சேர்ப்பதால் வைட்டமின் சத்தும் நிறைந்துள்ளது.
இவற்றில் புரோட்டின் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் இவை ஜீரண சக்தியை அதிகம் பெற்றுள்ளது.
தயிர் நன்மை தரும் பாக்டீரியாக்களை உண்டாக்குகின்றன.
நன்மை தரும் பாக்டீயாக்களை உண்டாக்குவதால் உடலில் உள்ள நோய்க்கிருமிகளை அழிக்கின்றன.
இவை வயிற்றுப் போக்கைக் குணப்படுத்தும் ஒரு அருமருந்தாகும்.
இவை நம் உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.
மேலும் இவற்றை ஒரு குளிர்பானமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இத்தகைய நன்மைகள் நிறைந்த தயிரை நாம் அனைவரும் பருகுவோம்.
”100 டிகிரி வெயில் அதில் 0 டிகிரி குளிர் பழ தயிர் சாதம்” எனபதை உணர்ந்து
வெயிலிருந்து நம்மை நாமே காப்பாற்றிக் கொண்டு நோயின்றி வாழ்வோம்;
வாழ்வில் வளம் பெறுவோம்.
Comments
Post a Comment