தேமல்...! சுலபமா குணமாக்க :-
தேமல்...! சுலபமா குணமாக்க வழி இதோ!
தேமல் வலி இல்லாத நோய் தான் என்றாலும் அழகை கெடுத்து தன்னம்பிக்கையை குறைத்துவிடும். அதனை போக்க இலகுவான வழி உள்ளது.
தொட்டால் சுருங்கி இலையை அரைத்து துணியினுள் இட்டு அதனை நன்கு பிளிந்து வரும் சாற்றை தினமும் காலையும் மலையும் தேமலின் மீது பூசி வர ஐந்து நாட்களில் தேமல் மறையும்.
தினமும் புதிய இலைகளை பிளிந்து பயன்படுத்துதல் நல்லது. சாற்றை பிளிந்து அதனை சேமித்து மறுநாள் பாவிப்பதை தவிர்ப்பது நல்லது.
தொட்டால் சினுங்கி பற்றி ஓர் குறிப்பு
உலகத்தில் முதல் முதலில் இந்த தொட்டா சிணுங்கி தாவரம் South America and Central America, ஆகிய நாடுகளில் காணப்பட்டது . தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சில மருந்து வகை மூலிகைகளில் இந்த தாவரமும் ஒரு மிகப்பெரிய இடத்தை பிடித்து இருக்கிறது
தேமல் மறைய இன்னும் சில குறிப்புகள்...!!!
· முகம் மற்றும் உடலெங்கும் தேமல் பரவியிருப்பவர்கள் பூவரசங்காயை எலுமிச்சம் பழச்சாறு விட்டு அரைத்து தேமல் உள்ள பகுதியில் பூசிவந்தால் தேமல் மறைந்து முகம் மற்றும் சருமம் பொலிவுறும்.
· பூவரச மரத்தின் பழுப்பு (முற்றிய) இலைகளை எடுத்து காயவைத்து பொடியாக்கி அதை தேங்காய் எண்ணெயில் குழைத்து தேமல் மீது பூசினால் தேமல் விரைவில் மறையும்.
· நாயுருவி இலைச் சாற்றில் ஜாதிக்காயை உரைத்து தேமல் மற்றும் மங்கு உள்ள இடத்தில் தடவி வந்தால் தேமல் மறையும்.
· குமட்டிக் காயை இரண்டாக நறுக்கி தேமல் மேல் தேய்த்து வந்தால் தேமல் விரைவில் மறையும்.
· கற்றாழையை மேல் தோல் நீக்கி அதன் சோற்றை, தேமல் உள்ள பகுதிகளில் பூசி வந்தால் தேமல் மறையும்.
· பூவரசங் காயை உடைத்தால் அதில் மஞ்சள் நிறமான திரவம் வெளிவரும். இதனை படர்தாமரை, தேமல் மீது தடவினால் தேமல், படர்தாமரை குணமாகும்.
·துளசியிலையை உப்புடன் சேர்த்து அரைத்து தேமல் உள்ள பகுதிகளில் தடவி வந்தால் தேமல் மெல்ல மெல்ல மறையும்
சரக்கொன்றை வேரின் பட்டையை பசுவின் பால் விட்டு அரைத்து தேமல் உள்ள இடத்தில் தடவினால் நாள்பட்ட தேமல் மறையும்.
Comments
Post a Comment