பூவரசு காய கற்ப மூலிகை.:-


பூவரசு:-

பூவரசு காய கற்ப மூலிகை.
செதில் செதிலாக உதிரக்கூடிய சொரியாசிஸ் நோய்க்கு, ஞாபகமறதி நோய்க்கும் , பூவரசம்பட்டை மிக சிறந்த மருந்தாகும்.
முற்றிய மரத்தின் பட்டையை இடித்துச் சாறு எடுத்து அதை வாயில் வைத்துக் கொப்புளித்து உள்ளுக்குள் விழுங்கி வந்தால் உதட்டில் வரக்கூடிய வெண்தேமல் சரியாகும். பூவரசம்பட்டையை நீர் விட்டுக் கொதிக்க வைத்து சூடு ஆறியதும் கழுவி வர சர்க்கரை நோயால் ஏற்ப்பட்ட புண்கள் ஆறும்.
பூவரசு இலைகளை அரைத்து வதக்கி மூட்டுகளில்  கட்ட வீக்கம் குறையும்.
இதன் பழுப்பு இலையை உலர்த்திக் கருக்கித் தேங்காய் எண்ணெயில் கலந்து உடலில் பூசிவர  சொறிசிரங்கு, கரப்பான்,ஊரல், அரிப்பு குணமாகும். பூவரசு பட்டையை எடுத்து பாலில் அவித்து உலர்த்தி அதனுடன் சம அளவு பரங்கிப் பட்டை சேர்த்து செய்த சூரணத்தை 10கிராம் அளவு எடுத்து, பசு வெண்ணெயில் காலை,மாலை இரண்டு வேளை சாப்பிட்டு வர  நாள்பட்ட தொழு நோய் தீரும்.மருந்தை எடுத்துக்கொள்ளும் போது உணவில்  உப்பை நீக்க வேண்டும்.
பூவரசின் முதிர்ந்த பட்டையை இடித்துப் பிழிந்த சாற்றினை அடிக்கடி கொப்பளிக்க வேண்டும். தினமும்  கொப்பளித்து வர வெண்குஷ்ட நோயால் உதட்டில் ஏற்பட்ட வெண்புள்ளிகள் குணமாகும். பூவரசம் பட்டையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை உள்ளுக்குள் குடித்து வர வெள்ளைப் படுதல் குணமாகும்.
பூவரசன் பட்டைத்தூள் 100 கிராம், சீமைக்காசிக்கட்டி 100 கிராம், இந்துப்பு 100 கிராம், சேர்த்து அரைத்து கருத்தடைக்காக இதனைச் சாப்பிட, புதிதாக திருமணமான பெண்கள் மாத விலக்கான நாள் முதல் ஏழு நாள், 10 கிராம் அளவு வெந்நீரில் குடிக்கவும். ஏழு நாளும் பால், மோர், மிளகு ரசம், பருப்புத் துவையல் சாப்பிடவும். நல்லெண்ணெயில் தலை முழுகவும். இதனால் கருப்பை சுருங்கிவிடும். இது நல்ல கருத்தடை முறை. ஒரு வருடம் வரை கருத்தரிக்காது.  கருப்பைக் கோளாறுகளை நீக்கும். ஆண்களுக்கு ஆண்மையை வலுப்படுத்தும். மூலக்கிருமிகளை அழிக்கும்.
பூவரசு மரப்பட்டை 210 கிராம் எடுத்து இடித்து ஒரு சட்டியில் , 1500 மிலி நீர் விட்டு  நன்கு  காய்ச்சி வடிகட்டி, தினமும் இரண்டு வேளை குடித்து வர, உடம்பில் என்ன பூச்சி கடித்ததென்று தெரியாத காணாக்கடி விஷம் விரைவில் குணமாக்கும். இலைகள் விஷத்தை முறிக்கும் வல்லமை இதற்கு உண்டு.
பூவரசம் பட்டையை இடித்து பொடி செய்து சலித்து இதனுடன் சந்தன தூள் அல்லது வில்வ கட்டை தூள் கலந்து உடலில் மீது பூசிவர உடலில் தோன்றும் சொறி, சிரங்கு, கரப்பான் கடி தோல் நோய்கள் குணமாகும். பூவரசங்காயை சாறை பிழிந்து மஞ்சள் நிய சாறு வரும். இந்த சாறை முகத்தில் இருக்கும் கறுப்புகள், கழுத்தில் இருக்கும் கறுப்புகள் உள்ள இடத்தில் தடவி வர கறுப்புகள் மறையும். தோல் நோய்கள் குணமாகும்.
பூவரசங்காய், செம்பருத்திபூ,பூவரசு பழுத்த இலையை சேர்த்துஅரைத்து தலையில் தேய்த்து குளித்து வர பொடுகு நீங்கும்.உடலில் தேய்த்து குளிக்க உடல் பளபளக்கும். கண்கருவளையம் மறையும். காயை இடித்து சாறு பிழியும் போது பால் வரும் இது வெண்மேக நோய்களை குணமாக்ககூடியது. பூவரசு காயிலிருக்கும் மஞ்சள் நிறமுள்ள பாலை தடவி வர எச்சில் தழும்புகள், தேமல் மறையும். படர்தாமரை,கை, கால் மூட்டு வலியும் குனமடையசெய்யும்.
வேர்ப்பட்டையை நீரில் போட்டு கொதிக்க வைத்து 50 மி.லி அளவு எடுத்து 10 மி.லி விளக்கெண்ணெய் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர பேதியாகும். இதனால் தோல் நோய்கள் குணமாகும்.
கொழுந்து இலை, மிளகு பத்து சேர்த்து அரைத்து மோரில் ஒரு மூடி அளவு கலந்து தினமும் மூன்று வேளை குடித்து வர மஞ்சள் காமாலை குணமாகும்.

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-