திதியும் பஞ்ச பூதங்களும்:
திதியும் பஞ்ச பூதங்களும்:
பிரதமை என்றால் நிலம்,
துவிதியை என்றால் தண்ணீர்,
திருதியை என்றால் நெருப்பு,
சதுர்த்தி என்றால் காற்று,
பஞ்சமி என்றால் ஆகாயம்,
ஷஷ்டி என்றால் நிலம்,
சப்தமி என்றால் தண்ணீர்,
அஷ்டமி என்றால் நெருப்பு,
நவமி என்றால் காற்று,
தசமி என்றால் ஆகாயம்,
ஏகாதசி என்றால் நிலம்,
துவாதசி என்றால் தண்ணீர்,
திரியோதசி என்றால் நெருப்பு,
சதுர்த்தசி என்றால் காற்று,
பௌர்ணமி என்றால் ஆகாயம்,
அமாவாசை என்றால் பூமி அல்லது மேரு ஆகும்,
________________
நத்தை திதி
பிரதமை, சஷ்டி, ஏகாதசி ஆகிய மூன்று திதிகளும் நத்தை திதி எனப்படுகிறது. இந்த திதி நாட்களில் கட்டடத்தை சுத்தம் செய்வது, திருவிழா நடத்துவது, பாட்டு, நடனம், உள்ளிட்ட கலைகளை கற்கலாம்.
பத்ரை திதி
துவிதியை, சப்தமி, துவாதசி, திதிகள் பத்ரை திதிகள் ஆகும். இந்த திதி நாட்களில் பயணம் செய்யலாம், வண்டி வாகனங்களை வாங்கலாம்.
சபை திதி
திரிதியை, அஷ்டமி, திரையோதசி திதிகள் சபை திதிகள் ஆகும். இந்த நாட்களில் கோவில் திருப்பணிகளை செய்யலாம், கொடிமரம் நாட்டலாம்.
இருத்தை திதி
சதுர்த்தி, நவமி, சதுர்த்தசி ஆகியவை இருத்தை திதிகள் எனப்படும். இந்த நாட்களில் குரூரமான காரியங்களை மட்டும் செய்யலாம். போரிடலாம்,
பூரணை திதி
பஞ்சமி, தசமி, பவுர்ணமி ஆகியவை பூரணை திதிகள் எனப்படும். இந்த நாட்கள் சுபகாரியங்களை செய்ய ஏற்றவை. திருமணம், நிச்சயதார்த்தம், யாத்திரை, சாந்தி ஹோமங்கள், யாகங்களை செய்தல், தவம், தெய்வ வழிபாடுகளை மேற்
கொள்ளுதல் முதலிய நல்ல காரியங்களை செய்ய இத்திதி ஏற்றது.
Comments
Post a Comment