புனர்பு தோஷம்:
புனர்பு தோஷம்:
சனி+சந்திரன்=புனர்ப்பு தோஷம்(இருக்கு ஆனால் இல்லை)
இச்சேர்க்கை உள்ள ஜாதகனுக்கு அங்கீகாரம் கிடைக்காது,வாய்ப்புககளை அடுத்தவர்கள் தட்டி பறிப்பார்கள்,ஜாதகனை அனைவரும் உதாசீனபடுத்துவார்கள்.
சொந்த தொழில் அமையாது,அமைந்தாலும் நிரந்தமாக தொழில் நடக்காது,இவர்களிடம் நிரந்தரமாக ஊழியர்கள் பணிபுரிய மாட்டார்கள்.
அடிக்கடி தொழில் மாற்றம்,அலையும் தொழில்,தொழில் நிமித்தம் அடிககடி பயணம் மேற்கொள்ளுதல்,போக்குவரத்து,
ஓட்டுநர்பணி,இரவுநேர பணி, நேரத்திற்க்கு உணவு உண்ணமுடியாது,சூடுகுறைந்த உணவு கிடைக்கும்,சாலையோர உணவகங்களில் நடந்துகொண்டே உணவு பழக்கம் இருக்கும் .சுத்தமான குடிநீர் ஜாதகனுக்கு பணியின் போது கிடைக்காது.
அம்மாவின் உடல்நிலையும் வாழ்கையும் ஏற்றம் இறக்கத்துடன் இருக்கும்
அன்னை குடும்ப சுமைகளை சுமக்க வேலைக்கு செல்பராக இருப்பார்.
அன்னைக்கு கால்மூட்டில் நீர்கோர்த்து அதன் மூலம் கால் பாதிப்பில் இருப்பார்.
ஜாதகனுக்கு அஜீரண கோளாறு வயிறு உப்பிசம்,சிறுநீரக கோளாறு,கண்கள் பாதிப்பு,பசியின்மை, ரத்த ஓட்டம் சீராக இருக்காது.
இதற்க்கு பரிகாரமாக
அன்னை மற்றும் மூத்த சகோரிகளை அன்புடன் அவர்களின் தேவையான கடமைகளை நிறைவேற்றுவது,நல்ல தோல் காலணிகளை பரிசளிப்பது.
அன்னையின் பாதங்களை நீரால் சுத்தம் செய்து அவர்களிடம் ஆசி பெறுவது,வீட்டில் உள்ள அனைவருக்கும் ஜாதகனே உணவு பரிமாரி பிறகு உணவு உண்பது.
தனது உடமைகளை தானே சுததம் செய்து கொள்வது.
முதியோர் அனாதை ஆசிரமங்களுககு இயன்றவரை அன்னதானம் செய்வது,பிச்சைகாரர்கள்,ஊனமுற்றோர்களுக்கு தன்னால் முடிந்த தானத்தை அன்புடன் அளிப்பது.
துப்புரவு தொழிலாளரகளுக்கு திங்கள் கிழமைகளில் சனி ஓரையில் தயிர் சாதம் தானம் அளிப்பது,
அம்பிகையின் ஆலயத்தை சுத்தம் செய்து தருவது
சனி+சந்திரன் சேரக்கைக்கு பரிகாரமாகும்.
இயலாமையில் உள்ளவர்களுக்கு
இயன்றளவு செய்யும் உதவி
ஈசனை சென்றடையும்.
கர்மகாரகனின் காரகங்களை
முறையாக கவனித்தாலே
புனர்பு தோஷம்
பூஜ்யமாகிவிடும்.
Comments
Post a Comment