குளிகை நேரமும் சிறப்பும்
குளிகை நேரமும் சிறப்பும் பஞ்சாங்கத்தில் முக்கிய நேரங்களான நல்ல நேரம், எமகண்டம், ராகு காலம், குளிகை காலம் இவைகளில் குளிகை காலமானது ஒன்றை விரிவுபடுத்தி தரக்கூடியதாகும். இதற்கு காரிய விரித்தி நேரமாக கருதப்படுகிறது. சனியின் புதல்வரான மாந்தியின் காலமே குளிகை காலமாக கருதப்படுகிறது. இத்தகைய இந்த குளிகை காலமானது செய்யும் காரியத்தில் அதிஷ்டத்தையும் விரிவையும் தரக்கூடியது என்பது ஐதீகம். காரிய அனுகூலம் சார்ந்த விடயங்களை ஆரம்பிக்கவும் லாபகரமான விடயங்களை தொடங்கவும் குளிகையை பயன்படுத்த வேண்டும். சுமார் 3¾ நாழிகை (1½ மணிநேரம்) கொண்டது இந்த குளிகை காலம் ஆகும். வார நாட்களில் குளிகை நேர விபரம் வருமாறு. (சூரிய உதயத்திற்கு ஏற்ப வித்தியாசப்படும்.) ஞாயிறு - 3 - 4:30 மாலை திங்கள் - 1:30 - 3 மதியம் செவ்வாய் - 12 - 1:30 பகல் புதன் - 10:30 - 12 பகல் வியாழன் - 9 - 10:30 காலை வெள்ளி - 7:30 - 9 காலை சனி - 6 - 7:30 காலை இத்தகைய குளிகை காலம் வரும் நேரத்தில் மேற் கொள்ள கூடிய காரியங்களாக, * நகை வாங்குவது, * காணி வாங்குவது, * சொத்துக்கள் வாங்குவது, * கடனில் ஒரு பங்கு கொடுப்பது, * வங்கி கணக்...