அரிய மூலிகை அவுரி:-
அரிய மூலிகை அவுரி:
நாம் சாப்பிடும் மருந்து மாத்திரைகளில் இருக்கும் உலோகங்களை உடல் எடுத்து கொள்ள இயலாத போது Inflammatory Reaction மூலமாக நமக்கு உணர்த்தும் அதன் அறிகுறிகள் உடல் சூடாகுதல்,சிவத்தல்,வீங்குதல், அரித்தல் போன்றவை.நாம் அறிந்த விடயங்கள் தான். நார்மலாக இல்லாமல் அதாவது உடல் செல்கள் தீவிரமாக அதனுடன் வினைபுரிந்து சற்று மாறி இருக்கும் அதனால் உடல் செல்களுக்கு ஆச்சிஜனை ஒழுங்காக கடத்த இயலாமல் pro occident ஆக மாறுபாடு அடைந்து சிறுநீரகம், மண்ணீரல் பழுதாகி விடுகிறது.இந்த உலோகங்கள் உடல் செல்களில் வினைபுரிந்து புரதம் மெம்ரின் போன்றவை சிதைய ஆரம்பிக்கிறது தொடர்ந்து நடைபெறும் போது சங்கிலி சிதைவு ஏற்பட்டு உடல் அவயங்கள் செயல் இழக்க ஆரம்பிக்கிறது உதாரணமாக சர்க்கரை நோய்க்கு தொடர்ந்து எடுத்து கொள்ளும் மருந்து மாத்திரைகளால் செயல் இழந்து விடுகிறது என்பது சிறுநீரகம். அவ்வாறே மண்ணீரல் தான் வெளியே இருந்து வரும் தேவையற்ற மாசுக்களை அழித்து வெளியேற்றம் செய்கிறது நிணநீர்சுரப்பிகள் மூலமாக Spleen cells தான் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாகக்கூடியது இது பாதிப்படைவதை தடுப்பது அவுரியில் இருக்கும் எத்தனால் கலந்த திரவம் தான் உடலில் இருக்கும் மாசுக்களை வெளியேற்றி மண்ணீரலை பாதுகாக்கிறது. அதன் மூலமாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பெருகிறது. இத்தகைய மருந்துகளினால் ஏற்படும் தீய விளைவுகளை அவுரி செடியில் இருந்து எடுக்கப்படும் மருந்து சரி செய்கிறது என்று ஆங்கில மருத்துவம் கூட ஒப்பு கொண்டுள்ளதை நோக்கும் போது நமது தமிழ் மருத்துவம் அவுரிகற்பத்தை பயன்படுத்தி பல உடல்நல குறைபாடுகளை தீர்த்து கொண்டு உள்ளதையும்....
காலங்காலமாக உடலில் உள்ள விசமுறிவுக்கு அவுரி இலை கசாயத்தை பயன்படுத்தி குணபடுத்துவதை அனுபவத்தில் நாம் அறிந்த உண்மையும் பெருமையும் கூட....
அறிவார்ந்த சமூகமான நாம் அவுரியை பசுந்தாள் உரமாக பயன்படுத்தி விச செடிகளினால் ஏற்படும் விசங்களை போக்கி மண்ணை வளபடுத்தும் மாண்பையும் மரபையும் கருத்தில் கொள்வோம் இங்கே.
"சந்தி பதின் முன்னர் சத்தொடித்த வாதமுதலுன்று விசகடியு மோடுங்கான் -மின்னுங் கவுரிநிற முண்டாகுங் காசினியுளேநல்லவுரியிலையா லறி" என்பது அவுரி பற்றிய சித்தர் பாடல்...
அவுரி இலையால் 13வகையான சந்திநோய்களும்,கீல்வாதமும்,பாம்புவிசமும் நீங்கும் இதனை உண்பவர்கள் தேகம் பொண் நிறமாக மாறும் என்பது மேற்கண்ட பாடல் கூறுகிறது.
அவுரி கற்பம் செய்முறை:
அவுரி+கரிசலாங்கண்ணி+குப்பைமேனி+பொண்ணாங்கண்ணி+கொட்டை கரந்தை+செருபடை+மஞ்சள் போன்றவற்றை சம அளவு கலந்து இடித்து பொடி செய்து காலை மாலை ஒரு தேக்கரண்டி அளவு தேனில் கலந்து பயன்படுத்தி வந்தால் தேகம் பொன் நிறமாக மாறுமாம். இது பெண்களுக்கான உதிரகட்டு எனப்படும் மாதவிடாய் கோளாறுகளை சரி செய்யும் மூட்டு வாதமும் குணமாக கூடும் ....
1.இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுபடுத்த அவுரிஇலை சாற்றில் வெந்தயத்தை ஊர வைத்து முளைப்பு கட்டிய பின் நிழலில் உலர்த்தி பொடி செய்து காலையில் ஐந்து கிராம் மாலையில் ஐந்து கிராம் சாப்பிட்டு வர சிறப்பான முன்னேற்றம் கிட்டும் இது அனுபவ உண்மை.
2.அவரி இலை+கரிசலாங்கண்ணி+காட்டு கறிவேப்பிலை மூன்றையும் சம அளவு கலந்து தினமும் மூன்று வேலை உட்கொள்ள தலைமுடி கருகருவென நன்கு வளரும் இரத்தத்தில் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை வெகுவாக உயரும்.
3. அவுரி கரிசாலை இலையை அரைத்துப் நெல்லிக்காய் சாறு கலந்து தலைக்கு தேய்த்து குளிக்க இளநரை மாறும் என ஏடுகளில் குறிப்புகள் உள்ளது.நீலி பிரங்காதி தைலம் எனப்படுவது,
நீலி-அவுரி,
பிரிங்கம்-கரிசாலை,
ஆம்லா-நெல்லிக்காய்
இதை கடையில் வாங்குவதை விட நீங்களே செய்து பயன்படுத்துவது சிறப்பாக இருக்கும் பணமும் மீதமாகும்.
4.பாம்பு கடிப்பட்டவர்களுக்கு அவுரி இலை-சிறு தும்பைஇலை இரண்டும் சமளவு கலந்து இதன் எடைக்கு இருபது பங்கில் ஓரு பங்கு மிளகு சேர்த்து அரைத்து மாத்திரையாக்கி நிழலில் உலர்த்தி பாதுகாத்து கொள்ளவும் . மணிக்கு ஒருமுறை இரண்டு மாத்திரை கொடுத்து சூடு தண்ணீர் குடித்து வர மூன்று மணி நேரத்தில் விசம் இறங்கி விடும் இது மிகவும் சிறந்த அனுபவ முறை.
5. இரத்தத்தில் உள்ள அசுத்தம் காரணமாக உருவாகும் தோல் நோய்கள் குணமாக மிளகு அவுரிஇலை தலா ஐந்து வீதம் அரைத்து சாப்பிட்டால் நன்றாக குணமாகும்.
6.அவுரி இலைக்கு மலத்தை இழகசெய்யும் தன்மை உடையது அதற்கு காரணம் இதில் உள்ள Sennocide என்னும் மூலப்பொருள் காரணமாகும் அதனால் தான் சித்த மருத்துவத்தில் இதனை மலமிளக்கியாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.
7.அவுரி இலை வாதநாரயணன் இலை பூண்டு மிளகு அனைத்தையும் சம அளவு எடுத்து அரைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் மூட்டுவலி மூட்டு வாதம் போக்கும் மூட்டுகளில் உள்ள வீக்கமும் குறையும்.
8.அவுரிஇலை+நிலவேம்பு+சோம்பு மூன்றையும் சம அளவு கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட வாத காய்ச்சல் குணமாகும்.
9.பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல் முற்றிலும் குணமாக அவுரி வேர்+யானை நெருஞ்சில் இலைகளை சம அளவு எடுத்து அறைத்து எலுமிச்சை பழம் அளவு மோரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரவும். இதன் மூலமாக வயிற்றில் உள்ள புண்களும் சரியாகும் வாய் நாற்றம் தீரும் .
10.அவுரி இலையை நிழலில் உலர்த்தி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட தேகம் பொன் நிறமாக மாறும் என ஏடுகளில் குறிப்புகள் உள்ளன கவனிக்கவும்.
பற்பம் செந்தூரம் பாசானங்களை மருந்தாக்க செய்முறைகளின் போது மருத்துவர்கள் அதை சாப்பிட்டு விட்டு மருந்து சரியான பக்குவத்திற்கு வரவில்லை என்ற போது உடலில் ஓர்வித ஒவ்வாமை தன்மை ஏற்படும் அதற்கு முறிவு மருந்து இந்த அவுரி இலை சாறு தான் ...
அவுரி ஆங்கில மருத்து மாத்திரைகலால் உடலில் சேர்ந்துள்ள விசஙகளை நீக்குவது மட்டுமன்றி உடலின் நாடி நடை,ஆரோகியத்தை மேம்படுத்தும் சிறந்த மருந்து . அவசியம் பயன்படுத்த முயலுங்கள் செலவில்லாத எளிய வைத்தியம்
Comments
Post a Comment