வாழ்வியல் தத்துவம் மருத்துவம்:-
தமிழன் எது செய்தாலும் அதில் ஒரு வாழ்வியல் தத்துவம் மருத்துவம் இருக்கும் !!!!
வீட்டு வாசலில் தொங்கிக்கொண்டுஇருப்பது திருஷ்டி கயிறு அல்ல.
நம் உயிரை காக்கும்அது முதலுதவி பெட்டகம்.
நம் வீட்டுவாசலில் கருப்பு கயிற்றில் படிகாரம்,எலுமிச்ச்சைபழம்.மிளகாய்.மிளகு.ஈச்சமுள் மற்றும் மஞ்சள்,தேங்காய் உள்ளிட்ட பொருட்கள் கயிற்றில் கட்டி தொங்கவிடப்பட்டுஇருக்கும்.
கண் திருஷ்டிக்காக என நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம் ஆனால் அது நம்முடைய உயிரைகாக்கதான் தொங்கிக்கொண்டு இருக்கிறது !!!
எப்படியென்றால்....
மின் வசதியில்லாத அந்த காலங்களில் நம் வீடுகளீல் இரவில் பொருட்களை தேடுவது மிகுந்த சிரமாம இருந்திருக்கும்.
இரவில் நம்முடைய முன்னோர்கள் வெளியில் சென்று வரும்போது அக்காலத்தில் தெருக்களிலும் மின்சாரம் இருக்காது.
அப்பொழுது ஏதேனும் பூச்சியோஅல்லது பாம்பு மற்ற ஏதேனும் விசபூச்சிகள் கடித்துவிட்டால் என்ன செய்வது?
அந்த சூழ்நிலையில் நம்முடைய பதட்டம் அதிகரிக்கும், முதல் உதவி மிக முக்கியம் அல்லவா?
அதற்காகதான் இந்த பொருட்கள் அடங்கிய பெட்டகத்தை நம் வீட்டுவாசலில் தொங்கவிட்டு இருப்பார்கள்.
கைகளிலோ அல்லது காலிலோ கடிப்பட்டு இருந்தால் விசம் மேலும் பரவாமல் இருக்க #கயிற்றால் கட்டிவிடுவதால் விசம் பரவுவதை தடுக்கலாம்.
கடித்த இடத்தில் எரிச்சல் இருந்தால் #படிகாரத்தை தேய்த்துவிடுவதால் எரிச்சல்குறையும்,
#விசக்கடியாக இருந்தால் #மிளகாய் அல்லது #மிளகு கடித்தால் காரம் இல்லையென்றால் கடுமையான விசக்கடி என்றும் காரம் இருந்தால் பூச்சிக்கடி என்றும் தெரிந்துகொள்வார்கள்.
# கடித்ததால் ஏற்படும் களைப்பை போக்க
#எலுமிச்சை பழத்தை பிழிந்துகொடுப்பார்கள்.
# எந்தமாதிரியான விசக்கடி என்பதை அறிய
#ஈச்சமுள்ளால் அந்த இடத்தை கீரிபார்த்து தெரிந்துகொள்வார்கள்.
#எட்டுகால் பூச்சி போன்றவை கடித்தால்
#தேங்காய் தண்ணிரும் #தேங்காய்கீத்தையும் தின்றால் உடனடி விசமுறிவு ஏற்படும் !!!
.#சாதாரண ரத்தகட்டி வீக்கமாக இருந்தால் #மஞ்சள் தடவி விடுவார்கள்.
இதுதான் நம் முன்னோர்களின் முதலுதவி பெட்டகம்.
நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல !!!
தொங்கிக்கொண்டு இருப்பது மூடநம்ம்பிக்கை சின்னம் அல்ல.
முதலுதவி பெட்டகம் !!!
வாய் நாற்றத்தை போக்கும் படிகாரம் :-
சட்டியில் படிகாரம் போட்டுக் காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.
பல் கோளாறுகள் போக்கும் படிகாரம் :-
துத்திக்கீரையுடன் சிறிது படிகாரம் சேர்த்து அரைத்து, தண்ணீரில் கரைத்து வாய் கொப்பளித்தால் பல்வலி, பல் ஈறுகளில் உண்டாகும் இரத்தம் கசிவு, ஈறு அரிப்பு போன்ற குறைபாடுகள் தீரும்.
குன்மத்திற்கு :-படிகார பூங்காவி
படிகாரம் - 250 கிராம்
பூங்காவி - 150 கிராம்
செய்முறை
இரண்டையும் கடாயிலிட்டு எரிக்க படிகாரம் உருகி சிறிது நேரத்தில் படிகாரம் பூங்காவியோடு சேர்ந்து செந்தூரமாகிவிடும். பிறகு எடுத்து கல்வத்திலிட்டு நெகிழ அரைத்து புட்டியில் அடைக்கவும்.
மேலுள்ள முறையில் செய்த படிகார செந்தூரம் - 10 கிராம்
குங்கிலிய பற்பம் - 10 கிராம்
சுத்தமான நெய் - 300 மில்லி
நெய்யில் படிகார செந்தூரம் + குங்கிலிய பற்பம் கலந்து கொடுக்க வேண்டியது தான்.
தினமும் 1 முதல் 2 தேக்கரண்டி வரை, அந்தி சந்தி
உணவுக்கு முன்.
பயன்கள் : குன்மம், சீத பேதி, பெரும்பாடு, வெள்ளை, வெட்டை, நீர்க்கட்டு மேலும் பல நோய்கள் தீரும்.
முடி உதிர்தலை தடுக்கும் படிகாரம் !!!
இன்றைய காலத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் பிரச்னையாக இருப்பது முடி உதிர்தல் தான்.
இதனை தடுக்க இயற்கையான வழிமுறைகள் பல உள்ளன. இதில் கற்றாழையை பயன்படுத்தி எளிய முறையில் முடி உதிர்வதை தடுக்க முடியும்.
செய்முறை:
தேவையான பொருட்கள்:
சோற்றுக்கற்றாழை.
படிகாரம்
நல்லெண்ணெய்அல்லது தேங்காய் எண்ணெய்.
செய்முறை:
சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையை எடுத்து அதிலுள்ள சதைப்பகுதியை ஒரு பாத்திரத்தில் வைத்து அதன் மீது சிறிது படிகாரப் பொடியை தூவி வைத்திருக்க வேண்டும். இப்பொழுது சோற்றுப் பகுதியிலுள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இவ்வாறு பிரிந்த நீருக்கு சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை கலந்து சுண்டக் காய்ச்ச வேண்டும். காய்ச்சிய அந்த தைலத்தை தினசரி தலையில் தேய்த்து வந்தால் தலை முடி நன்றாக வளரும்.
கார லவண பற்பம் :-
படிகாரம் - 1 பலம்
வெடியுப்பு - 1 பலம்
வெங்காரம் - 1 பலம்
படிகாரத்தை பொடித்து ஒரு அகன்ற மண் பானையில் பரப்பி அதன் மீது வெடியுப்பை பொடித்து போட்டு, முடிவில் வெங்காரத்தை பொடித்து போட்டு அடுப்பிலேற்றி சிறு தீயாக எரிக்கவும். சிறிது நேரத்தில் எல்லாம் உருகும், தொடர்ந்து எரிக்க நீர் சுண்டி பூத்துவிடும். பிறகு கீழிறக்கி ஆறவிட்டு கல்வத்தில் நன்றாக அரைத்து புட்டியில் அடைக்கவும்.
அளவு : 1/2 கிராம் முதல் 2 கிராம் வரை (உடல் வன்மை பொருத்து)
அனுபானம் : இளநீர், முள்ளங்கி சாறு
வேளை : காலை இரவு
தீரும் நோய்கள் : இது உடம்பிலுள்ள நீர் கோவையை சிறுநீர் மூலமாக வெளிபடுத்துவதில் சிறந்தது. நீர்சுருக்கு, நீர்கட்டு, வெள்ளை, வெட்டை, கல்லடைப்பு மற்றும் அனேக நோய்கள் தீரும்.
இது ஒரு அற்புதமான மருந்து.
ஆண்மையெழுச்சிக்கு வெள்ளை குண்டுமணி தைலம்.
பெருட்கள்:
வெள்ளை குண்டுமணி-350கிராம்
படிகாரம் -70 கிராம்
நெல்லிகெந்தகம்-10 கிராம்
தாளகம் -70 கிராம்
குண்டுமணியை தோலுரித்து ஆட்டுப்பாலில் 7 நாட்கள் ஊரவைத்து நிழலில் உலர்த்தவும்.
மற்ற 3சரக்குகளை சுத்தி செய்வும்
௸ பருப்புடன் மற்ற சரக்குகளை கோழிமுட்டை மஞ்சள் கருவிட்டு அரைத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி நிழலில் உலர்த்தவும் .
பின்பு தடிமனான கண்ணாடிக்குடுவையில் அடைத்து அதன்மேல் ஓடு மூடி பொத்தலிட்டு வொள்ளி தங்கக் கம்பி சொருகி 7 மண் சீலைசெய்து உலர்த்தி குழித்தைலம் எடுக்கவும்.
இத்தைலத்தை தாதுபுஷ்டி லேகியம் அல்லது அஸ்வகெந்தி,வெல்லப்பாகில் இரவு உணவுக்கு முன் பாலில் சாப்பிட வேண்டும். வீரியமான எழுச்சி உண்டாகும் மற்றும் 2 அல்லது 3 நாட்களுக்கு வேலைசெய்யும்.
தித்திப்பு நிரைய உண்ணவேண்டும்.
மறுநாளில் இருந்து 2 நாட்களுக்கு கஜபலா சூரணத்தை பாலில்சாப்பிட்டால் உடல்சோர்வு அடையாது.மீண்டும் 2 நாட்கள் கழித்து தைலத்தை உண்ணலாம். 100 சதவீதம் பக்கவிளைவுகள் அற்றது.
Comments
Post a Comment