ஜென்ம நட்சத்திரம் :-
ஒருவர் தனது ஜென்ம நட்சத்திர வடிவத்தை நோய் ஆட்கொண்டிருக்கும்போதோ அல்லது மனதில் அதிக பயம் ஏற்படும் போதோ அல்லது எதிரியை தாக்கவோ பயன்படுத்தலாம்.
எனக்கு கேட்டை - கேட்டை வடிவம் ஈட்டி
கிருஷ்ணரின் நட்சத்திரம் ரோகினி. ரோகிணியின் வடிவம் சக்கரம். கிருஷ்ணர் எதிரியை அழிக்க பயன்படுத்தியது சுதர்சன சக்கரமாகும்
அஸ்வினி - குதிரைத்தலை
பரணி - சங்கு / முக்கோணம்
கார்த்திகை - வாள்
ரோகினி - சக்கரம்
மிருகசீரிடம் - மான் தலை
திருவாதிரை - ஸ்படிகமாலை
புனர்பூசம் - வில்
பூசம் - முருக வேல்
ஆயில்யம் - படம் எடுத்து நகரும் பாம்பு
மகம் - மகுடம், கோவில் கோபுரம்
பூரம் - கதாயுதம்
உத்திரம் - கோல் / குச்சி
ஹஸ்தம் - உள்ளங்கை வடிவம்
சித்திரை - ஸ்வஸ்திகா
ஸ்வாதி - தீப்பந்தம்
விசாகம் - கோடாரி
அனுஷம் - தாமரை
கேட்டை - ஈட்டி
மூலம் - அங்குசம்
பூராடம் - கதாயுதம்
உத்திராடம் - யானை தந்தம்
திருவோணம் - அம்பு
அவிட்டம் - உடுக்கை
சதயம் - பூங்கொத்து
பூரட்டாதி - கட்டில் கால் (கதாயுதம்)
உத்திரட்டாதி - காமதேனு
ரேவதி - மீன்
____________________________________
சித்திரை நட்சத்திர வடிவம் - ஸ்வஸ்திகா
==========================================
ஸ்வஸ்திகா என்பது சித்திரை நட்சத்திர வடிவம் ஆகும். ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்த விநாயகருக்கு அவரது கையில் (ஹஸ்தத்தில்) ஸ்வஸ்திகா வடிவம் வரையப்படுகிறது. ஹஸ்தம் என்றல் சமஸ்கிருதத்தில் உள்ளங்கை என்று பொருள். சித்திரை நட்சத்திரத்தின் வானியல் பெயர் Spica ஆகும். இந்த நட்சத்திரம் சுபர்சவநாதர் என்ற சமண சமயத்தின்மதபோதகர் பின்பற்றியது என்ற கூற்றும் உண்டு. இவர் ஏழாவது சமண சமய அருகன் (தீர்த்தங்கரர்) ஆவார். சமண சமய சின்னங்களில் ஸ்வஸ்திகா வடிவத்திறக்கு தனி இடம் உண்டு.
சுபர்சவநாதர் என்ற அருகன் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர். இவரது நட்சத்திரத்தின் சாதக நட்சத்திரங்கள் பின்வருமாறு கேட்டையின் ஆறாவது நட்சத்திரம் அவிட்டம், பதினைந்தாவது நட்சத்திரம் மிருகசீரிடம் மற்றும் இருபத்துநான்காவது நட்சத்திரம் சித்திரை ஆகும். ஸ்வஸ்திகா என்ற சித்திரை நட்சத்திர வடிவத்தை இந்த சமண சமய அருகன் பயன்படுத்தி புகழ் பெற்றார். ஏற்கனவே கூறியது போல் சம்பத்து அல்லது பரம மித்திர நட்சத்திர வடிவம் தான் அருகில் இயற்கையாக அமையப்பெறாதவர்கள், சாதக நட்சத்திரம் பயன்படுத்தி நலம் பெறலாம்.
ஹிட்லர் பூராடம் நட்சத்திரம் அவரது நட்சத்திரத்திற்கு செம நட்சத்திரம் சித்திரை ஆகும். எனவே இவருக்கு இந்த சித்திரை நட்சத்திர ஸ்வஸ்திகா வடிவம் பல வெற்றியை பெற்று கொடுத்தது.
ஸ்வஸ்திகா நலம் தரும் நட்சத்திரங்கள்
=========================================
ஹஸ்தம், திருவோணம், ரோஹிணி - வளம் தரும்
சித்திரை, அவிட்டம், மிருகசீரிடம் - தைரியம் தரும்
கேட்டை, ஆயில்யம், ரேவதி - சாதக சூழல் தரும்
பூராடம், பூரம், பரணி - நலம் தரும்
ஸ்வாதி, திருவாதிரை, சதயம் - வழிகாட்டியாய் அமையும்
Comments
Post a Comment