வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் சதுர் திரிகோணங்கள் :-
வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் சதுர் திரிகோணங்கள்
==================================================
கால புருஷ தத்துவ படி, நான்கு வெவ்வேறு திரிகோணங்கள் கூறப்பட்டு உள்ளது.
தர்ம திரிகோணம் - 1, 5, 9 (மேஷம், சிம்மம், தனுசு
கர்ம திரிகோணம்- 2, 6, 10 (ரிஷபம், கன்னி, மகரம்)
காம திரிகோணம்- 3, 7, 11 (மிதுனம், துலாம், கும்பம்)
மோட்ச திரிகோணம் - 4, 8, 12 (கடகம், விருச்சகம், மீனம்)
மேலே சொன்ன திரிகோண புள்ளிகளை.லக்னமாக கொண்டவர்கள், கீழ் கண்ட குணங்கள் கொண்டவர்களாக இருப்பார்கள்:
தர்ம திரிகோணம் லக்னமாக அமைந்தால் - தர்மவான்கள், தலைமை பண்பு கொண்டவர்கள், தீர்க்க சிந்தனை, செயல் திறன் மிக்கவர்கள், தயாள குணம் கொண்டவர்கள், இலக்கிய ஆர்வம் அதிகம் கொண்டவர்கள்.
கர்ம திரிகோணம் லக்னமாக அமைந்தால் - காரியவாதிகள், கடமை உணர்ச்சி மிக்கவர்கள், தொழிலை கடவுளாக கொண்டவர்கள், அதிக லாபம் பெறுவதில் நாட்டம் கொண்டவர்கள். காமத்திலும் கடமையிலும் சம அளவு நாட்டமிருக்கும்
காம திரிகோணம் லக்னமாக அமைந்தால் - காதல் உணர்வு அதிகம் உள்ளவர்கள், போகத்தை விரும்புவர்கள், நகைசுவை உணர்வு கொண்டவர்கள், அதிக நண்பர்கள் கொண்டவர்கள், குடும்பத்தை கோவிலாக ஏற்பவர்கள், அதிக பயணம் செய்பவர்கள்.
மோட்ச திரிகோணம் லக்னமாக அமைந்தால் - கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்டவர்கள், அரசியல் செய்வதில் வல்லவர்கள், பண்புடன் அதிகாரம் செய்பவர்கள், சித்தர்கள் பற்றிய சிந்தனை அதிகமிருக்கும், தியான பயிற்சி செய்பவர்கள், ஆசாரம் மிக்கவர்கள், அதிக ஆன்மீக செற்பொழிவு மற்றும் பயன்கள் அதிகம் செய்வார்கள்.
Comments
Post a Comment