Posts

Showing posts from February, 2018

தேமல்:-

  தேமல் என்பது இன்று பலரையும் தாக்கும் சரும பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது. சந்தைகளில் எந்த சோப்பு அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதனை உடனடியாக வாங்கி பயன்படுத்துவது என்பது தேமல் வருவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது. உடலுக்கு சோப்பை தவிர்த்து கடலை மாவு, பாசிப்பயறு, மஞ்சள் போன்ற இயற்கை பொருட்களை குறைந்தது, வாரத்தில் இரண்டு முறையாவது பயன்படுத்த பழக்கப்படுத்திக் கொள்ளுங்க. இந்த குளியல் பொடியை தினமும் உபயோகித்தாலும் நன்மை தான்… ஆனால், இன்று நறுமணம் தரும் சோப்புகளை அதிகமாக பயன்படுத்த தொடங்கிவிட்டோம். எனவே முடிந்தவரையில் வாரத்தில் இரண்டு தடவைகளாவது சோப்புக்கு பதிலாக இந்த இயற்கை மூலிகைகளை பயன்படுத்துங்கள். மேலும் தினமும் இரவு தூங்கும் போது உடலுக்கு தேங்காய் எண்ணெய் தேய்த்துக் கொண்டு படுக்கும் பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். உடலில் வெப்பம் அதிகரிப்பதும் கூட சரும நோய்கள் வருவதற்கு காரணமாக அமைகிறது. சில மூலிகைகள் உங்களுக்கு எந்தவிதமான பக்கவிளைவுகளும் இன்றி, தேமல் பிரச்சனைக்கு தீர்வு அளிக்கின்றன. அவற்றை நீங்கள் கடைகளில் தான் வாங்க வேண்டும் என்பதில்லை.. உங்கள...

நாட்டு மூலிகைகளின் மருத்துவப் பயன்கள்:-

1.அகத்தி – Sesbania grandiflora – FEBACEAE கீரையை வாரம் ஒருமுறை சமைத்து உண்ண வெயிலில் அலைவதால் மற்றும் கோப்பி தேனீர் குடிப்பதால் ஏற்படும் உடல் வெப்பம் தணியும். இலைச்சாறும், நல்லெண்ணையும் சமஅளவு எடுத்து பதமாகக் காய்ச்சி தலையிலிட்டு வாரம் ஒருமுறைக் குளித்து வர பித்தம் தணிந்து தலைவலி நீங்கும். 2.அசோகு – Saraca asoca – CAESALPINIACEAE அசோகு மரப்பட்டை – 100 கிராம் ஐ சிதைத்து 400 மி.லி. நீர்விட்டுக் காய்ச்சி 100 மி.லியாக வற்ற வைத்து 100 மி.லி. பாலில் கலந்து நாள்தோறும் 2 அல்லது 3 வேளை பருக பெரும்பாடு தீரும். 3.அமுக்கரா – Withania somnifera – SOLANACEAE அமுக்கராக் கிழங்கைப் பொடி செய்து தேனில் குழைத்து காலை, மாலை சாப்பிட உடல் பலவீனம், தளர்ச்சி இவை நீங்கும். அமுக்கரா சூரணத்தைப் பாலில் கலந்துப் பூசி வர படுக்கைப்புண், வீக்கம் ஆகியவை தீரும். 4. அம்மான் பச்சரிசி – Euphorbia hirta – EUPHORBIACEAE இலையை சமைத்து உண்ண உடல் வறட்சி அகலும் வாய், நாக்கு, உதடுவெடிப்பு, புண் தீரும் பாலைத்தடவி வா நகச்சுற்று, முகப்பரு, பால்பரு, மறையும். கால் ஆணியின் வலி குறையும். பூ – 30 கிராம் எடுத்து அரைத்து கொட்டைப் பாக்களவ...

கோவிலில் செய்யக் கூடாதவை:-

1. கோவிலில் தூங்க கூடாது. 2. கோவிலுக்கு சென்று விட்டு வெளியே வந்து தர்மம் செய்ய கூடாது. 3. புண்ணிய தீர்த்தங்களில் வந்தவுடன் காலை வைக்கக்கூடாது முதலில் நீரை தலையில் தெளித்துக் கொண்டு கால் அலம்ப வேண்டும். 4. கோயில் குளத்தில் கல்லைப் போடக்கூடாது. 5. கோயிலை வேகமாக வலம் வருதல் கூடாது. 6. தாம்பூலம் தரித்துக் கொண்டு கோயிலுக்குள் செல்லக்கூடாது. 7. சுவாமிக்கு நிவேதனம் ஆகும் போது பார்த்தல் கூடாது. 8. தேவதைகள் பலிபீடத்திற்கு நடுவிலும், லிங்கத்திற்கும் நந்திக்கும் நடுவிலும் செல்லக் கூடாது. 9. எவருடனும் வீண் வார்த்தைகள் கோயிலில் வைத்துப் பேசக் கூடாது. 10. தலையில் துணி ,தொப்பி அணியக் கூடாது. 11. விளக்கு இல்லாமல் (எரியாத பொழுது) வணங்கக் கூடாது (அதாவது கருவறை இருட்டாக இருக்கும் சமயத்தில் இறைவனை வணங்குதல் கூடாது). 12. அபிஷேகம் நடக்கும் பொழுது சுற்றி வரக் கூடாது. 13. குளிக்காமல் கோயிலுக்குள் போகக் கூடாது 14. கையில் விளக்கு ஏந்தி ஆராதனை காட்டக் கூடாது. 15. மனிதர்கள் காலில் விழுந்து தெய்வ சன்னதியின் முன்பு வணங்கக் கூடாது. 16. கோவிலுக்கு சென்று திரும்பிய உடன் கால்களை கழுவக் கூடாது. 17. படிகளில் உட்காரக் கூ...

காயத்ரி மந்திரம்:-

*" காயத்ரி மந்திரம்:- காயத்ரி மந்திரம் – விஞ்ஞானிகளே வியக்கும் வீரிய மந்திரம்… காயத்ரி மந்திரமே! விஞ்ஞானிகளும் மெய்ஞானிகளும் வியந்து போற்றிய காயத்ரி மந்திரம் குறித்த சில தகவல்கள்: காயத்ரி மந்திரத்தினைப்பற்றி சுவாமி விவே கானந்தர் குறிப்பிடும் பொழுது, “மந்திரங்களின் கிரீடம் காயத்ரி மந்திரம்” எனக்குறிப்பிட்டு ள்ளார். ஜே பி எஸ் ஹால் டேன் என்ற பிரபல விஞ்ஞானி ( 1892-1964)காயத்ரி மந்திரத்தினைப்பற்றி குறிப்பிடும்பொழுது காயத்ரி மந்திரம் ஒவ்வொரு இரசாயன கூடங்களின் வாயில் கதவிலும் காயத்ரி மந்திரம் பொறிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.  பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், கீதையில் “நதிகளில் நான் கங்கையாகவும., மலைகளில் நான் விந்திய மலையாக வும், மந்திரங்களில் நான் காயத்ரி மந்திரமாகவும் இருக் கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார். சுவாமி இராமகிருஷ்ண பரமஹமஸர் கூறுகையில் “பெரிய பெரிய கடுந் தவ முயற்சிகளில் மனிதர்கள் ஈடுபடுவதனைக் காட்டிலும்., காயத்ரி மந்திரத்தினை ஜபிப்பது மிகப்பெரிய சாதனையாகும். இது மிக சிறிய மந்திரம்தான். ஆனால், மிக மிக சக்தி வாய்ந்தது” எனக்குறிப்பிட்டுள்ளார். பிரபல மேலை நாட்டு ஞானி ஆர்...

சரும வியாதி நீக்கும் அருள்மிகு நாகராஜா திருக்கோயில் :-

சரும வியாதி நீக்கும் அருள்மிகு நாகராஜா திருக்கோயில் :- மனிதர்களுக்கு நாகதோஷம் இருந்தால் திருமணத்தடை, குழந்தை பிறப்பதில் தடை ஏற்படுகிறது. எனவேதான் ஜோதிடர்கள் நாகதோஷம் நீங்க பரிகாரம் கூறுவார்கள். நாகதோஷம் சருமவியாதியைத் தருகிறது. நாகரை நினைத்து வழிபட்டால் சருமவியாதி தீரும் என்பது நம்பிக்கை. நம் நாட்டில் நாகர் வழிபாட்டிற்கு என்று தனியாக அமைந்தக் கோவில் இதுவேயாகும். திருப்பாம்புரம், பாமணி, நாகப்பட்டினம், திருக்காளஹஸ்தி, திரு நாகேஸ்வரம், திருப்பனந்தாள், கீழ்ப்பெரும்பள்ளம், திருநெல்வேலி (கோடகநல்லூர்) போன்ற ஆலயங்களில் எல்லாம் மூலவரான சிவபெருமானை வழிபட்டு நாகங்கள் தங்களது கொடிய தோஷங்களைப் போக்கிக் கொண்டதால் பெருமை மிக்கதாகும். நாகருக்கென்றே தனிக்கோவில், அதாவது நாகர் மூலவராக வீற்றிருக்கும் ஆலயம் நாகர்கோவில் நாகராஜா ஆலயம் ஆகும். இங்கே கருவறையில் நாகமே மூலவராக உள்ளது. #நாகர்கோவில் நாகராஜா :- கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோயில் என்ற ஊருக்கு பெயர்க் காரணமாய் திகழ்வது அருள்மிகு நாகராஜா திருக்கோயில். நாகராஜா திருக்கோயில் நாகர்கோவில் நகரத்தின் மத்தியில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் கிழக்கு பார...

விசக்கடி வைத்தியம்:-

விசக்கடி !!! எந்த பூச்சிக்கடிக்கு என்ன மருந்து கொடுக்கணும் தெரியுமா?? நாட்டு மருத்துவமுறை பெரும்பாலும் கிராமபுறத்தில் மட்டுமே பின்பற்றப்பட்டுவருகிறது.  ஆனால், ஆங்கில மருத்துவ முறையை விட நாட்டு வைத்தியம் எவ்வளவோ சிறப்பானது.  நாட்டு வைத்தியத்தால் குணப்படுத்த முடியாதநோய்களே இல்லை. நாட்டு வைத்தியம் மூலமாக பூச்சிகள் கடித்துவிட்டால் அது எந்த பூச்சி என்பதையும், அதன்நஞ்சை முறிக்கும் முறையையும் நாட்டு வைத்தியம் கூறுகிறது. கடிகளைக் கண்டறிதல்: > இரவில் நச்சுப்பூச்சி ஏதேனும் கடித்து விட்டால், என்ன கடித்தது என்பதை அறியாமல் மருத்துவம் செய்வது கடினம்.  இந்நிலையில் கடிபட்டவருக்கு ஆடு தின்னாப்பாளை என்ற செடியின் வேரைக் கொடுத்துச் சுவைக்கச் சொன்னால், *இனிப்புச் சுவையாக இருந்தால் கடித்தது நல்ல பாம்பு என்றும்.. *புளிப்புச் சுவையாக இருந்தால் கட்டு விரியன் பாம்பு என்றும்… *வாய் வழவழப்பாக இருந்தால் நஞ்சு குறைந்த வழலைப்பாம்பு,  நீர் பிரட்டை போன்றவை என்றும்… *கசப்புச் சுவையாக இருந்தால் பாம்பு வகைகள் அல்லாத வேறு பூச்சிகள் என்றும் அறிந்து உணரலாம்… > தேள் கடி மருந்துகள்: *எலுமிச்சைப் பழ வி...

வாழ்வியல் தத்துவம் மருத்துவம்:-

தமிழன் எது செய்தாலும் அதில் ஒரு வாழ்வியல் தத்துவம் மருத்துவம் இருக்கும் !!!! வீட்டு வாசலில் தொங்கிக்கொண்டுஇருப்பது திருஷ்டி கயிறு அல்ல.  நம் உயிரை காக்கும்அது முதலுதவி பெட்டகம். நம் வீட்டுவாசலில் கருப்பு கயிற்றில் படிகாரம்,எலுமிச்ச்சைபழம்.மிளகாய்.மிளகு.ஈச்சமுள் மற்றும் மஞ்சள்,தேங்காய் உள்ளிட்ட பொருட்கள் கயிற்றில் கட்டி தொங்கவிடப்பட்டுஇருக்கும். கண் திருஷ்டிக்காக என நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம் ஆனால் அது நம்முடைய உயிரைகாக்கதான் தொங்கிக்கொண்டு இருக்கிறது !!! எப்படியென்றால்.... மின் வசதியில்லாத அந்த காலங்களில் நம் வீடுகளீல் இரவில் பொருட்களை தேடுவது மிகுந்த சிரமாம இருந்திருக்கும்.  இரவில் நம்முடைய முன்னோர்கள் வெளியில் சென்று வரும்போது அக்காலத்தில் தெருக்களிலும் மின்சாரம் இருக்காது. அப்பொழுது ஏதேனும் பூச்சியோஅல்லது பாம்பு மற்ற ஏதேனும் விசபூச்சிகள் கடித்துவிட்டால் என்ன செய்வது? அந்த சூழ்நிலையில் நம்முடைய பதட்டம் அதிகரிக்கும், முதல் உதவி மிக முக்கியம் அல்லவா? அதற்காகதான் இந்த பொருட்கள் அடங்கிய பெட்டகத்தை நம் வீட்டுவாசலில் தொங்கவிட்டு இருப்பார்கள். கைகளிலோ அல்லது காலிலோ கடிப்பட்ட...

சந்திர  பலம்  உள்ள  நாட்கள்:-

🌼 சந்திர  பலம்  உள்ள  நாட்கள்🌼 🌼எடுத்த காரியம் வெற்றியுடன் அமைத்துதரும் நட்சத்திரங்களுக்கு உகந்த, நட்சத்திர நாட்கள் 🌼நம் ராசி, நட்சத்திரத்துக்கு உகந்த நேரங்களை பெரும்பாலோர் பார்ப்பதில்லை. இதனால் மேற்கொள்கின்ற முயற்சிகள் தோல்வி அடையும். அந்த காலத்தில் பெரியவர்கள் நாள் செய்யாததை நல்லோர் செய்யார் என்பார்கள். நற்செயல்களை நல்ல நாள் நட்சத்திரத்தில் ஆரம்பித்தால் ஜெயம் உண்டாகும் என்பதற்காக இது சொல்லப்பட்டது. அதன்படி நமக்கு நன்மை செய்கின்ற நட்சத்திரங்கள் வரும் நாளில் முக்கியமான விஷயங்களை ஆரம்பிக்கலாம்.  🌼நல்ல விஷயங்கள் பேசலாம். ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். வங்கி கணக்கு தொடங்கலாம். கம்ப்யூட்டர், செல்போன் போன்ற சாதனங்கள் வாங்கலாம்.  🌼பரிகார பூஜைகள் செய்யலாம். வேலைக்கான முயற்சிகளை தொடங்கலாம். இப்படி செய்வதால் அந்த நட்சத்திர தாரபலம், சந்திர பலம் காரணமாக நம் முயற்சிகளுடன், அதிர்ஷ்டமும் சேர்வதால் காரிய வெற்றி, அனுகூலம் உண்டாகிறது.  🌼நாடி செல்லும் காரியங்கள் கை கூடிவர உங்கள் நட்சத்திரங்களுக்கு நன்மை தரும் நட்சத்திரங்கள...

மருந்து சுத்தி முறைகள்:-

சுத்தி முறைகள் என்பது ஒவ்வொரு மருந்துப் பொருளையும் பயன்படுத்துவதற்கு முன் எவ்வாறு தயார் செய்ய வேண்டும் என்பதாகும். அக்கரகாரம் : ஒன்றிரண்டாய் தட்டிச் சிறுக வறுத்தெடுக்கவும். அசுவகந்தம் : இதனைத் துண்டு துண்டுகளாக நறுக்கி அவியந்திரத்தின் மூலம் பாலில் பிட்டவியல் செய்து கொண்டு மேற்தோலை நீக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். அதிமதுரம் : தண்ணீரில் கழுவி மேல் தோல் நீக்கிச் சிறு துண்டுகளாக்கி வெயிலில் உலர்த்தவும். அதிவிடயம் : மேல் தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கி வெயிலில் உலர்த்துக. அருகம் புல் வேர் : கணுக்களை நீக்கவும். இஞ்சி: மேற்தோலைச் சீவி நீக்கி விட வேண்டும். இஞ்சிச்சாறு : இஞ்சியை அரைத்து நீரில் கலக்கித் தெளிந்தபின் நீரை வடித்தெடுத்துக் கொண்டு கீழே நிற்கும் படிவை அகற்றி விடவும். ஓமம் : சுண்ணாம்புத் தெளிவு நீரில் ஒரு சாமம் ஊறவைத்தெடுத்து உலர்த்தவும். கடுக்காய் : (1) இதனுள்ளிருக்கும் கொட்டையின் பருப்பு நஞ்சு. அதனை நீக்கிவிடல் வேண்டும். (கடுக்காய் அக நஞ்சு) (2) கற்றாழை நீரில் 3 நாட்கள் ஊற வைத்து எடுத்து உலர்த்தவும். கருஞ்சீரகம் : சுண்ணநீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்தெடுக்கவும். சுழற்சிக்காய் :...

பஞ்ச கல்பம்:-

இக்காலத்தில் பல இளம் குழந்தைகளும் கண்ணுக்கு கண்ணாடி அணிந்து கொண்டும்,பல பெரியவர்கள் வயதானால் கண்ணாடி அணிந்து கொள்வதையும், கண்ணில் அறுவை சிகிச்சை செய்து கொள்வதையும் கண்டால் சித்தர் கண்ட தத்துவங்கள் எவ்வளவு வீணடிக்கப்படுகின்றன என்று வருந்தியிருக்கிறேன். கண்ணில் அறுவை சிகிச்சை செய்வதால் பிராணன் உலவும் இடமான கண்ணில் உள்ள பிராண சக்தி வீணடிக்கப்பட்டு ஆயுள் குறைகிறது.மாறாக கண்ணுக்கு வலிமை அளிக்கும் சித்த மருந்துகளைக் கையாள்வதால் கண்ணில் உள்ள பிராணன் வலுவாவதுடன் ஆயுளும் நீட்டிக்கப்படும். கண் பிராணன் நின்று உலவும் இடம்,மேலும் இடது கண்ணில் தச(பத்து) நாடிகளில் ஒன்றான காந்தாரி என்ற நாடியும், வலது கண்ணில் புருடன் என்ற நாடியும் நின்றியங்குகிறது.நம் உடலை தச தேசம் என்று கூறுவார்கள்.ஏனெனில் இது தச நாடிகளால் இயங்குவது.உயிர் இறப்பிற்கு பின்னும் இயங்கும் விதத்தைப் பற்றி வராகி மாலை,தச தேச விசால சுவடி இவற்றுள் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,நம் உடலில் உள்ள எழுபத்திரண்டாயிரம் நாடிகளில், இரண்டு கண்களிலும் கண்ணுக்கு இரண்டாயிரம் நாடிகள் வீதம் நான்காயிரம் நாடிகள் ஓடுகின்றன.கண்களில் போடும் மருந்து கண்ணிலுள்ள நாடிக...

மாசி மகத்தின் சிறப்புகள்:-

மாசி மகத்தின் சிறப்புகள். 1. மகாவிஷ்ணுவாக      அவதாரம் எடுத்தது     மாசி மகத்திருநாளில் தான். 2. மாசி மாதத்து    சங்கடஹர சதுர்த்தி     மிக விசேஷம்.      அந் நாளில் விரதம் இருப்பவர்கள்    எல்லாவித தோஷங்களிலிருந்தும்       விடுபடுவர். 3. மாசி மாதத்தன்று தான் பார்வதிதேவி காளிந்தி நதியில்         ஒரு தாமரை மலரில்     வலம்புரிச் சங்காகத் தோன்றினாள். 4. சிவபெருமான்    திரு விளையாடல்கள்     பல புரிந்தது     மாசிமாதத்தில் தான். 5. மாசி மாதத்தன்று    மந்திர உபதேசம் பெறுவது சிறந்ததாகத் கருதப்படுகிறது. 6. குலசேகர ஆழ்வார்    மாசி மாதம் புனர்பூச நட்சத்திர நாளில் தான் அவதரித்தார்.   அந்த நாளில்தான்   மயிலை மல்லீஸ்வரருக்கு  கும்பாபிஷேக தினவிழா   திருக்கல்யாண விழா  வெகு விமரிசையாய் நடைபெறும். 7. அன்னதானத்தின் பெருமைகளை உணர்த்துவது     மாசி மகம் தான். 8. மாசி மாத பூச நட்சத...

மகா சுதர்சன மாத்திரை :-

தொடர் மழையால் சிறு குழந்தைகள், முதியவர்கள், நாள்பட்ட நோயாளர்கள், கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சத்து குறைவாக உள்ளவர்கள், உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்படுவார்கள். சிறு தலைவலிக்காக மருத்துவமனை சென்றால்கூட, குறைந்தது இருநூறு ரூபாய் ஒரு நாளைக்குத் தேவைப்படுகிறது. காய்ச்சலாக இருந்தால் ஒரு வாரத்துக்கு ஆயிரத்து ஐநூறு ரூபாய் செலவாகிறது. மலிவு விலை மருந்து தினசரிக் கூலித் தொழிலாளர்கள் என்ன செய்ய முடியும்? அதுவும் தொடர் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அனைத்து உடைமைகளையும் இழந்து தவிக்கும் மக்களுக்குத் தொற்றுநோய் ஏற்பட்டாலோ, விஷக் காய்ச்சல் வந்தாலோ என்ன செய்வார்கள்? எப்படி நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வார்கள்? பயப்படத் தேவையில்லை. இதற்கு மிக மலிவான சித்த மருந்து உள்ளது. தொற்று நோய்கள் தாக்காமலும், விஷக் காய்ச்சல், மர்மக் காய்ச்சல் வராமலும், டெங்கு, சிக்குன் குன்யாவை விரட்டவும், சளி, இருமல், தும்மலைத் தடுக்க இருக்கவே இருக்கிறது மகா சுதர்சன சித்த மாத்திரை. இந்த மாத்திரையில் 45 வகை மூலிகைகள் மற்றும் படிகாரம் கலந்துள்ளது. தீரும் நோய்கள் அனைத்து வகை காய்ச்சல்...

இயற்கை மருந்து!

எல்ல நோய்களுக்கும் நம் முன்னோர்கள் கண்டுபிடித்த ஓர் இயற்கை மருந்து! மருத்துவரிடம் சென்றால் ஒவ்வொரு பிரச்னைக்கும் நிறைய மருந்துகள் கொடுப்பார்கள். ஆனால் நம்முடைய முன்னோரோ இயற்கையான வழியில், எல்லா நோயையும் தீர்க்கும் ஒரு மருந்தை பரிசீலிக்கிறார்கள். அதென்ன அப்படி ஓர் அதிசய மருந்து. வெந்தயம். – 250 gm ஓமம் – 100 gm கருஞ்சீரகம் – 50 gm மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனியாக கருகாமல் வறுத்து, தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும். இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும்,இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது. தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது. தேவையான கொழும்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு நீக்கப்படுகிறது,இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது. இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்படுகிறது,இருதயம் சீராக இயங்குகிறது,சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீக்கப்படுக...

அரிய மூலிகை அவுரி:-

Image
அரிய மூலிகை அவுரி: நாம் சாப்பிடும் மருந்து மாத்திரைகளில் இருக்கும் உலோகங்களை உடல் எடுத்து கொள்ள இயலாத போது Inflammatory Reaction மூலமாக நமக்கு உணர்த்தும் அதன் அறிகுறிகள் உடல் சூடாகுதல்,சிவத்தல்,வீங்குதல், அரித்தல் போன்றவை.நாம் அறிந்த விடயங்கள் தான். நார்மலாக இல்லாமல் அதாவது உடல் செல்கள் தீவிரமாக அதனுடன் வினைபுரிந்து சற்று மாறி இருக்கும் அதனால் உடல் செல்களுக்கு ஆச்சிஜனை ஒழுங்காக கடத்த இயலாமல் pro occident ஆக மாறுபாடு அடைந்து சிறுநீரகம், மண்ணீரல் பழுதாகி விடுகிறது.இந்த உலோகங்கள் உடல் செல்களில் வினைபுரிந்து புரதம் மெம்ரின் போன்றவை சிதைய ஆரம்பிக்கிறது தொடர்ந்து நடைபெறும் போது சங்கிலி சிதைவு ஏற்பட்டு உடல் அவயங்கள் செயல் இழக்க ஆரம்பிக்கிறது உதாரணமாக சர்க்கரை நோய்க்கு தொடர்ந்து எடுத்து கொள்ளும் மருந்து மாத்திரைகளால் செயல் இழந்து விடுகிறது என்பது சிறுநீரகம். அவ்வாறே மண்ணீரல் தான் வெளியே இருந்து வரும் தேவையற்ற மாசுக்களை அழித்து வெளியேற்றம் செய்கிறது நிணநீர்சுரப்பிகள் மூலமாக Spleen cells தான்  உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாகக்கூடியது இது பாதிப்படைவதை தடுப்பது அவுரியில் இருக்கும் எத்தனால...

வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் சதுர் திரிகோணங்கள் :-

வாழ்க்கையை நிர்ணயம் செய்யும் சதுர் திரிகோணங்கள்  ================================================== கால புருஷ தத்துவ படி, நான்கு வெவ்வேறு திரிகோணங்கள் கூறப்பட்டு உள்ளது. தர்ம திரிகோணம் - 1, 5, 9 (மேஷம், சிம்மம், தனுசு  கர்ம திரிகோணம்- 2, 6, 10 (ரிஷபம், கன்னி, மகரம்) காம திரிகோணம்- 3, 7, 11 (மிதுனம், துலாம், கும்பம்) மோட்ச திரிகோணம் - 4, 8, 12 (கடகம், விருச்சகம், மீனம்) மேலே சொன்ன திரிகோண புள்ளிகளை.லக்னமாக கொண்டவர்கள், கீழ் கண்ட குணங்கள் கொண்டவர்களாக இருப்பார்கள்: தர்ம திரிகோணம் லக்னமாக அமைந்தால் - தர்மவான்கள், தலைமை பண்பு கொண்டவர்கள், தீர்க்க சிந்தனை, செயல் திறன் மிக்கவர்கள், தயாள குணம் கொண்டவர்கள், இலக்கிய ஆர்வம் அதிகம் கொண்டவர்கள்.  கர்ம திரிகோணம் லக்னமாக அமைந்தால் - காரியவாதிகள், கடமை உணர்ச்சி மிக்கவர்கள், தொழிலை கடவுளாக கொண்டவர்கள், அதிக லாபம் பெறுவதில் நாட்டம் கொண்டவர்கள். காமத்திலும் கடமையிலும் சம அளவு நாட்டமிருக்கும்  காம திரிகோணம் லக்னமாக அமைந்தால் - காதல் உணர்வு அதிகம் உள்ளவர்கள், போகத்தை விரும்புவர்கள், நகைசுவை உணர்வு கொண்டவர்கள், அதிக நண்பர்கள் கொண்டவர்கள்...

சென்னையில் இருக்கும் ஜீவசமாதிகளின் பட்டியலும்,இருப்பிடமும் :-

சென்னையில் இருக்கும் ஜீவசமாதிகளின் பட்டியலும்,இருப்பிடமும் திருவொற்றியூர்: பட்டினத்தார்= கடற்கரையை ஒட்டி பட்டினத்தார் கோவில் வீதி.ஆவணி மாதத்தில் வரும் உத்ராடம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை. பாடகச்சேரி ராமலிங்கசாமிகள்= பட்டினத்தார் கோவில் வீதியில் இவரது பெயருள்ள மடம் ஐகோர்ட் சாமி என்ற அப்புடுசாமி= பாடகச்சேரி ராமலிங்க சாமிகள் மடத்துள் இருக்கிறது. அருள்மிகு யோகீஸ்வரர் சாமி=வடிவுடையம்மன் கோவில் அருகில் தட்சிணாமூர்த்தி ஆலயம் ஸ்தாபித்தவர். பரஞ்சோதி மகான்= டோல்கேட் பஸ் ஸ்டாப் அருகில் 4,தங்கம் மாளிகை அருகில். ஞானப்பிரகாச சாமிகள்= வடக்கு மாடவீதி 145/30 இல் சிவாமிர்த ஞான ஆசிரமத்தில் பஞ்சலோக சிலை பிரதிஷ்டை. மவுன குரு சாமிகள்= கடற்கரையோரம் சமாதி கோவில். முத்துக்கிருஷ்ண பிரம்மம்=ஆஞ்சநேயர் கோவில் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவில் எதிரே சமாதி; கார்த்திகை மாத சதயம் நட்சத்திரத்தன்று குரு பூஜை; ஞானசுந்தர பிரம்மம்= முத்துக்கிருஷ்ண பிரம்மம் சமாதி அருகில் ஞான சுந்தர பிரம்மம் சமாதி.சித்திரை மாத உத்திராடம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை!! ராயபுரம்: குணங்குடி மஸ்தான் சாயபு= காய்கறி...