முட்டை பரிகாரம் !!!


1.)முட்டை பரிகாரம் !!!

எதிர் மறை சக்திகளை விரட்டியடிக்க முட்டை பரிகாரம்
எப்போதும் தடங்கல், எந்த காரியங்களும் முடிவு வரை வந்து பின்பு நடக்காமல் போதல், எப்போதும் மனக்கவலை, தோல்வி பற்றியே எப்போதும் சிந்தனை போன்ற எதிர் மறை சக்திகளை கீழ்க்கண்ட பரிகாரம் மூலம் நம் உடலில் இருந்து விரட்டி அடிக்கலாம். இதை முதல் முதல் ஆரம்பிக்கும் நாள் அமாவாசை நாளாக இருத்தல் நலம். பின்பு தேவைப்படும் போதெல்லாம் செய்து கொள்ளலாம்.
தேவை : 2 கோழி முட்டை

உடைகளை முழுதும் கலைந்து குளியல் அறையில் கிழக்கு நோக்கி நின்று கொள்ளவும். பின்பு 1 முட்டையை எடுத்து அதை ராக் சால்ட் அல்லது கல் உப்பு நீரால் கழுவி கொள்ளவும்.பின்பு சிறிது எலுமிச்சை நீரால் கழுவவும்.
பின்பு கண்களை மூடி கொண்டு பிரபஞ்சத்தை உங்கள் எதிர் மறை சக்திகள் அனைத்தும் விலக வேண்டி கொள்ளவும். பின்பு உச்சந்‌தலையில் ஆரம்பித்து உடல் முழுதும் மெதுவாக ஒரு இடம் விடாமல் முட்டையால் தடவ ஆரம்பிக்கவும். உடலில் உள்ள எதிர் மறை சக்திகள் அனைத்தும் முட்டை சுவீகரித்து கொள்ளும். உடலில் ஒரு இடம் விடாமல் தடவி கொள்ளவும்-ஏதேனும் இடத்தில் வலி இருந்தால் அந்த இடத்தை பிரத்யேகமாக கவனித்து தடவி கொள்ளவும். உள்ளங்கால் வரை தடவ வேண்டும். முக்கியமாக கழுத்தின் பின் புறம், கை கால்களின் முட்டிகளின் பின்புறங்களில் நன்கு தேய்க்கவும் -இந்த இடங்களில் தான் எதிர் மறை சக்திகள் அதிகம் தங்கும். நன்கு தேய்து முடித்ததும் ஒரு பாத்திரத்தில் அதை உடைத்து விட்டு பார்க்கவும்.

முட்டையில் கொப்பளம் அல்லது குமிழ்கள் வரின் எதிர் மறை சக்திகள் எடுக்கப்பட்டு விட்டது என அறிந்து கொள்ளவும். சாரங்களாக வந்தால் மேலும் எடுக்கப்பட வேண்டும் என அர்த்தம். ரத்தம் அல்லது கருப்பு புள்ளிகள் இருப்பின் ஏதோ பெரிய எதிர் மறை சக்தி இருந்தது க விட்டது என அர்த்தம் கொள்க. பின்பு இதை கழிவறையில் கொட்டி அதில் எலுமிச்சை நீர் சிறிது மற்றும் கல் உப்பு போட்டு நீர் விட்டு கழுவி விட்டு, பின்பு நீங்கள் யாம் ஏற்கனவே கூறியுள்ள நம் புற ஒளியை (Aura Cleansing)மிளர செய்யும் குளியல் செய்யலாம் அல்லது ராக் சால்ட் குளியல் செய்யவும். மற்றொரு முட்டையை மூன்று நாட்கள் இரவு தூங்கும் சமயம் ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு அதில் முட்டையை போட்டு,தலை மாட்டில் வைத்து உறங்கி பின்பு காலையில் அந்த நீரை கழிவறையில் கொட்டி விடவும். மூன்று நாட்களும் புதிய நீரை எடுத்து கொள்ளவும். நான்காம் நாள் முட்டையை கழிவரை அல்ல்து தெரு சாக்கடையில் எறிந்து விடலாம்.
மேலை நாடுகளில் பரவலாக கடைபிடிக்கும் பரிகாரம் இது. மிகுந்த சக்தி வாய்ந்தது. செய்து பயன் அடையுங்கள்.

2) _பரிகாரம் !!!

மிக சக்தி வாய்ந்த மிக சுலபமான இந்த பரிகாரம். இதை வாரம் ஒரு முறை செய்யலாம். நல்ல பலன் தெரியும்-நாள், கிழமை,திசை போன்ற எதுவும் பார்க்க தேவை இல்லை. தாந்த்ரீக முறைப்படி சில காரணங்கள் இருப்பினும் அறிவியல் ரீதியாகவும் இதன் பலன் நிச்சயம். ஆகவே செய்து பலன் அடையுங்கள். மேலும் இவை மேலை நாடுகளில் தங்கள் உடலில் புகுந்துள்ள தீய சக்திகள், மற்றவர் கண் பார்வையால் நமக்கு ஏற்படும் அசதி, காரியத்தடை  துரதிர்ஷ்டம் போன்றவைகளை போக்க உபயோகிப்பது வழக்கம்.

டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ் எனப்படும் பெரிய மளிகை கடைகளில்  சைனீஸ் வினீகர் அல்லது ரைஸ் வினீகர் என கேட்டு வாங்கவும். அதை ஒரு பாத்திரத்தில் / வாணலியில் இட்டு நன்கு கொதித்து புகை வர ஆரம்பித்ததும் அந்த புகையை வீட்டின் / வியாபார இடத்தின் அனைத்து மூலைகளில் அறை முழுதும் காட்டி விட்டு பின்பு அந்த அறைகளில் ஒரு நல்லெண்ணெய் விளக்கேற்றி வைத்து அதில் ஒரு டையமன்ட் கற்கண்டு மற்றும் கிராம்பு போட்டு வைக்கவும்.உங்களுக்கு நல்லனவற்றை அளிக்கும் படி பிரபஞ்சத்தை வேண்டி கொள்ளவும் பின்பு
தீபம் எறிந்து முடிந்ததும், விளக்குகளை எடுத்து வைத்து விடலாம்-அவ்வளவே. செய்த நாள் இரவு கொதிக்கும் நீரில் ரைஸ் வினீகர் விட்டு அந்த புகையை சுவாசித்து கொண்டே குளிக்கவும். இந்த முறை உங்கள் உடல் மற்றும் நீங்கள் இருக்கும் வீடு-இரண்டிலுமே உள்ள தீய மற்றும் எதிர் மறை சக்திகளை விரட்டும்-வாரம் ஒரு முறை கூட செய்யலாம். செய்து பயன் அடையுங்கள்.

3,)எல்லோர்க்கும் ஏற்ற எளிய பரிகாரங்கள்
(1) முக்கியமான காரியங்களுக்கு வெளியில் செல்லும் பொழுது சிறிது மஞ்சள் தூள் அல்லது ஒரு மஞ்சள் கட்டை எடுத்து செல்ல, போகிற காரியம் தடையில்லாமல் முடிவடையும்.
(2) புதிய வீடு அல்லது கடைகளுக்கு : முழு மஞ்சள் 7, கொட்டை பாக்குகள் 7, சிறிய வெள்ளி தகடு,உலோகத்தால் ஆன நாகர்-2, இவற்றை எல்லாம் மூடியுடன் கூடிய வெண்கல கலசத்தில் இட்டு மேற்கு புறமாக வைத்திருக்க சகல நன்மைகளும் உண்டாகும்.
(3) வீட்டில் உள்ளவர்க்கு ஏதேனும் தொற்று நோய் வந்து அவதிப்பட்டால்-சிறிய மண் சட்டியில் மஞ்சள் லட்டு,ஒரு முட்டை, 2 நாணயங்கள் மற்றும் சிறிது குங்குமம் வைத்து நோய்வாய்பட்டவரின் தலையை 3 முறை வலமாக மட்டும் சுற்றி 4 ரோடுகள் சேரும் இடத்தில் மதியம் 12 மணிக்கு எறிந்து விட, நோய் விலகும்.
(4) கடன்களால் வெகு காலம் துன்பப்படும் நபர்களுக்கு : ஒன்னேகால் அடி வெள்ளை துணியை எடுத்து அதில் நான்கு பக்கங்களிலும் சிகப்பு ரோஜாவை வைத்து கட்டி, பின்பு நடுவிலும் ஒரு ரோஜாவை வைத்து அதை 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் விட, கடன்கள் அடியோடு அழியும்.
(5) வியாபாரம் செழிக்க, வியாபார போட்டி,வியாபாரத்தில் செய்வினை அகல : ஒரு ஞாயிறு அன்று ஐந்து எலுமிச்சைகளை பாதியாக வெட்டி, அத்துடன் சிறுது வெண்கடுகு மற்றும் மிளகு தூவி பின்பு மூடி விடவும். மறு நாள் திறந்தவுடன், அனைத்தையும் கூட்டி இடத்தை விட்டு சிறிது தூரம் சென்று அனைத்தையும் எரித்து விடவும். எரிப்பதற்க்கு மண்எண்னை அல்லது பெட்ரோல் உபயோகிக்க கூடாது. அனைத்தும் எறிந்ததும் வியாபார இடத்தில் உள்ள அனைத்து எதிர் மறை சக்திகளும் அழிந்து போய், வியாபாரம் செழிக்கும்.
(6) வேலை இண்டெர்வியூ அல்லது ஏதேனும் புதிய தொழில், முயற்சி தொடங்குமுன், சம்பந்தபட்டவரை கிழக்கு முகமாக நிற்க வைத்து மூன்று முறை தலையை வலது புறமாக சிறிது பச்சை பயிரை வைத்து சுற்றி பின்பு அவர் மேல் தூவி விட வேண்டும். அவர் சென்றதும் அவற்றை கூட்டி வெளியில் பறவைகளுக்கு கொட்டி விடலாம். இது செயலில் வெற்றியை தேடித்தரும்.

வாழ்வில் வசந்தம் சேர்க்கும் வளமான பரிகாரங்கள்
காலையில் கண் விழித்ததும் உங்கள் உள்ளங்கைகளை பார்த்து மூன்று முறை முத்தமிடவும். சனிக்கிழமைகளில் இதை ஆரம்பிக்கவும். இது பற்றி வேறு எவரிடமும் கூறக்கூடாது. வாழ் நாள் முழுதும் செய்யலாம். அதிர்ஷ்டத்தை வரவேற்கும் முறை இது.
திடீர் பண வரவு தேவைப்படின் நல்ல வாசனையுள்ள (மல்லிகை) ஊதுவத்திகளை அடிக்கடி மஹாலக்ஷ்மி கோவிலுக்கு தானம் செய்யவும்.
குழந்தைகளின் நலம், படிப்பு, உடல் நிலை கவலையளித்து கொண்டே இருந்தால் அவர்களை அதிர்வு மிக்க கோவிலுக்கு கூட்டி சென்று அங்குள்ள அனைத்து கடவுள் விக்கிரகங்களுக்கும் உடை அளிக்கவும்.
சிலருக்கு வாயு கோளாறு வாழ் நாள் முழுதும் கஷ்டப்படுத்தும்..அப்படிப்பட்டவர்கள் செவ்வாய்,சனி அல்லது ஞாயிறு அன்று குதிரைகளில் அணிந்திருந்த பழைய லாடம் எடுத்து கைகளில் வலையமாக செய்து அணிந்து கொண்டால் வாயு தொல்லை நீங்கு. பழைய படகின் மேல் உள்ள ஆணியை எடுத்து தன்னோடு வைத்திருந்தாலும் பலன் உண்டு.
கடன்கள் தீராமல் வாட்டி கொண்டே இருந்தால் இடுகாட்டில் இருக்கும் நீரை 6 சனிக்கிழமைகள் அரச மரத்திற்க்கு ஊற்றி வர கடன் தீர வழி கிடைக்கும்.
கடன்கள் தீர அசோக மரம் வளர்த்தும் வரலாம்.

4.)சிறந்த பரிகாரம்

1) ஆரத்தி எடுக்கும்போது பயன்படுத்தப்படும் குங்குமம் கலந்த நீர், வெற்றிலை மீது எரியும் கற்பூரம் ஆகியவற்றுக்கு தீய சக்திகளை (கண் திருஷ்டி)விரட்டும் ஆற்றல் உண்டு. 2) வாழைமரத்தை வாசலில் கட்டுவார்கள். இதற்கு காரணம் வாழைக்கு திருஷ்டி தோஷங்களை ஈர்த்துக் கொள்ளும் குணம் உண்டு என்பதுதான்.
3) கெட்ட எண்ணங்களை, குரூர சிந்தனைகளை திசை திருப்புவதற்கு பெரிய முகம் பார்க்கும் கண்ணாடியை வரவேற்பறையில் அல்லது வீட்டின் உள்வாசலில் வைக்கலாம். மீன் தொட்டி வைத்து அதில் கருப்பு, சிகப்பு மீன்களை வளர்க்கலாம். கண் திருஷ்டி கணபதி படம் வைக்கலாம்

4) வாசலில் கற்றாழை, சப்பாத்தி கள்ளி, முள் அதிகம் உள்ள செடிகள், மஞ்சள் ரோஜா செடி ஆகியவற்றை வளர்க்கலாம். ஆகாச கருடன் என்று ஒரு வகை கிழங்கு உள்ளது. அதை வாங்கி மஞ்சள், சந்தனம், குங்குமம் வைத்து கருப்பு கம்பளி கயிற்றில் கட்டி வீட்டின் வாசலில் தொங்க விடலாம்.
5) உப்புக்குளியல்: வாரம் ஒருமுறை கல் உப்பை குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்து வர திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி, சோம்பல் நீங்கும். குறிப்பாக அவரவர் பிறந்த கிழமை அல்லது செவ்வாய்க்கிழமையில் இவ்வாறு குளிக்கலா
6) எலுமிச்சம்பழம்: வியாபாரத் தலங்களில் திருஷ்டி நீங்க எலுமிச்சம்பழத்தை அறுத்து ஒரு பகுதியில் குங்குமத்தை தடவியும், மற்றொரு பகுதியில் மஞ்சள் பொடியைத் தடவியும் வைக்கலாம். இதை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை செய்வது நலம் தரும். பழத்தை மாற்றும்போது முதலில் வைத்த பழத்தை மூன்று முறை கடையை சுற்றி தெருவில் வீசிவிடவும்.
7) திதிகள்: அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காலை, மாலை இருவேளையும் சாம்பிராணி பொடியுடன், கருவேலம்பட்டை பொடி, வெண் கடுகுத்தூள் ஆகியவற்றை கலந்து வீடு, கடை அலுவலகத்தில் தூப, தீப, புகை காட்ட திருஷ்டியும், தீய சக்திகளும் வெளியேறும்
8) முடக்கற்றான், பச்சை கற்பூரம், கஸ்தூரி மஞ்சள், ஜவ்வாது, ஆகியவைகளைக் கூட்டி அரைத்து அந்தப் பொடியை பசு கோமியத்தில் கரைத்து வீட்டிலோ, வியாபார ஸ்தலத்திலோ, தெளிக்க தீய சத்திகள்,கண் திருஷ்டி,நீங்கி செல்வ செழிப்பு பெறலாம்.
#######################################################
நன்றாக படிக்கும் குழந்தைகள் திடீர் என்று படிப்பில் ஆர்வம் குறையும். அதேபோல பெரியோர்களுக்கு கடன் தொல்லை போன்றவை இருந்தால், விநாயகரின் ஆலயத்தில் அவர்களின் பெயரில் அர்ச்சனை செய்து, தேங்காய் எண்ணையையும், தன் குலத்தை காக்கும் குலதெய்வத்திற்கு பிடித்தமான விளக்கெண்னையும் ஒன்றாக கலந்து, அர்ச்சனை செய்த தேங்காயில் ஊற்றி தீபம் ஏற்றினால் பிரச்சனைகள் விலகும். நம்முடைய முன்னேற்றம் தேங்காமல் விருத்தியாகும்.
############################################################
கடல் நீர்: வளர்பிறையில் வரும் செவ்வாய், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்குச் சென்று கடல் நீரை எடுத்து வந்து அதில் மஞ்சள் பொடியை கலந்து கடை, அலுவலகம், வீடு ஆகியவற்றில் தெளிப்பது சிறந்த பரிகாரம். கடல் தண்ணிரில் குளித்தால் உடலில் இருக்கும் அந்த ஏழு சக்கரங்களும் பலம் பெறும்.

5.)ராகு திசை
அன்பர்கள் பலர் ராகு திசையில் பெரும் துன்பத்தில் ஆழ்ந்து கொண்டு இருப்பதை காண்கிறேன். சோம்பல், தீயவர்கள் சேர்க்கை, போதை பழக்கங்களுக்கு அடிமையாதல், எல்லோரிடமும் எறிந்து விழுதல், எதையும் ஆழ்ந்து சிந்தித்து செயல் பட முடியாத நிலை போன்றவை நேரும். அதுவும் சனி புத்தி பலருக்கு மிக கடினமானதாக இருக்கும். இவற்றிற்கு-கீழே மிக சக்தி வாய்ந்த பொது பரிகாரங்கள் கொடுத்திருக்கிறேன். தனிப்பட்ட ஜாதகத்தை பார்கையில் மேலும் சில சக்தி வாய்ந்த பரிகாரங்கள் கொடுக்கலாம். ஆனால் நூற்றில் 70 நபர்கள் இந்த திசையில் கொடுக்கும் பரிகாரங்களை தொடர்ந்து செய்யமாட்டார்கள். செய்ய முடியாமல் தடை வரும். அனுபவித்து வருவோருக்கு என் கூற்றில் உள்ள உண்மை புரியும்.
பரிகாரங்கள் :

(1) ஒவ்வொரு அமாவாசையிலும் 4 தேங்காய்கள் கோவிலின் மடப்பள்ளிக்கு தானம் செய்யவும்.
(2) ராகு சனி இணைப்பிற்க்கு அனுமனை வழிபடுவதும் சுந்தர காண்ட பாராயணம் மற்றும் மிருதியுஞ்ச ஜெபம் பாராயணம் மட்டுமே தீர்வு. ராகுவுக்கும் சனிக்கும் உரிய கற்கள் (நீலி+ஆமீதிஸ்ட் பலன் தரும்) அணியலாம்.
(3) இந்த காலத்தில் மிகுந்த பயம், கோபம் போன்றவை அடிக்கடி ஏற்பட்டு கொண்டே இருந்தால் நீல கயிற்றில் சின்ன வெள்ளை சந்தனக்கட்டை துண்டு கட்டி கழுத்தில் அணிந்து கொள்ளவும்.
(4) தினசரி குளிக்கும் பொழுது அசோக மரத்து இலைகள் 4 போட்டு சிறிது சந்தன எண்னை விட்டு அந்த நீரில் குளிக்கவும்.
(5) திசை முடியும் வரை மீந்த உணவுகள் எதையும் உண்ணாமல் புதிதாக செய்த உணவுகளை மட்டும் உண்ணவும்.
(6) அசல் சந்தன சர்பத் சில இடங்களில் கிடைக்கும். வாங்கி காலை வெறும் வயிற்றில் குடித்து வரவும்.
(7) மீன்களை இந்த கால கட்டத்தில் உன்ன கூடாது. மீன்களுக்கு உதவிகள் (உணவு, தொட்டி மீன்களை வாங்கி நீரூற்றுகளில் விடுதல் போன்றவை) செய்ய செய்ய, நமக்கு உதவிகள் தேடி வரும்.
(8) தேங்காய்களை தானம் செய்தல்
(9) அதிகமாக தேங்காய்களை உண்ணுதல் (சட்னி மற்றும் தேங்காய் சாதம் போன்று) அடிக்கடி இளநீர் குடித்தல்
(10) போதை பொருட்கள் எதையும் தொடாமல் இருத்தல், மேலும் இரவு உணவை சூரிய அஸ்தமணத்திற்க்கு ஒரு மணி நேரம் முடிந்தவுடன் உணவருந்துதல், இரவு சீக்கிரம் தூங்குதல்
மிக சக்தி வாய்ந்த பரிகாரங்கள் மேலே கொடுத்துள்ளவை. செய்து பயன் பெறுங்கள். முடிந்த அளவு "ஓம் ரங் ராஹூவே நமஹ்" என்ற மந்திரத்தை கூறி வரவும். ராஹூவின் படத்தை வைத்து பூஜிக்கும் பரிகார முறையையும் ராஹூவின் கிடைத்தற்கரிய படத்தையும் வைத்து. பூஜிக்கவும்.

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-