Posts

ஆண்களுக்கான ஜாதகத்தில்...குருவும் சுக்கிரனும் சேர்ந்திருப்பதற்கான பலன்கள்:-

.    1. ஜாதகர் ஆடம்பரத்தை விரும்புவார்  2. இவரது கலைத் திறமைகள் இருக்கும்.  3. ஜாதகர் எப்போதும் தன்னைச் சுற்றி பெண்கள் இருக்கவே விரும்புவார்.  4. எந்த விதமான நோயிலிருந்தும் ஜாதகர் எளிதில் குணமாக கூடியவர்.  5. இவருக்கு உடல் உழைப்பு பிடிக்காது.  6. ஜாதகர் அதிக பாலுறவு எண்ணங்களைக் கொண்டிருப்பார்.  7. சொந்த முயற்சியால் ஜாதகர் செல்வம் அடைவார்.( வீடு, வாகனம் போன்றவை)  8. ஜாதகர் தன்னை அலங்கரித்துக் கொள்வதில் விருப்பம் கொண்டவர்.   9. ஜாதகர் தனது மனைவியுடன் மிகவும் அன்பான உறவைக் கொண்டிருப்பார்.  10. இந்த சேர்க்கை நல்ல திருமண வாழ்க்கையை உறுதி செய்கிறது.  11. ஜாதகர் அடிக்கடி ஜாலி ட்ரிப் செய்ய விரும்புவார்.  12. ஜாதகர் கவர்ச்சிகரமான வெளிப்புற தோற்றத்தைக் கொண்டிருப்பார்.   13. ஜாதகர் அழகான சூழலில் வாழ்வார்.  14. நறுமணப் பொருட்கள் மீது இவரது விருப்பம் இருக்கும்.  15. ஜாதகர் ஆபரணங்களை விரும்புவார்.  16. இவரது மூக்கு மற்றும் தொடை அழகானது.  17. இவருக்கு சதைப்பற்றான குண்டான கன்னங்கள் உண்டு.  18. இவர...

♦•சந்திரன் + ராகு •♦•சந்திரன் + கேது சேர்ந்தால் பரிகாரம் !!!!!

ஜெனன ஜாதகத்தில் சந்திரனுடன் ராகு இணைந்து 3, 9, 10 ஆகிய இடங்களில் ராகு சஞ்சரித்தால் அரச யோகமும், பதவியும் அனுபவிப்பார். முதிய வயதிலும் மாறாத இளமை உண்டு. அதே சமயம், இவர்கள் தீய வழியில் செல்வம் சேர்ப்பார்கள். வரி ஏய்ப்பு, கள்ளக்கடத்தல் போன்ற முகாந்திரம் உண்டாகும். சந்திரனுக்கு 6, 12 ஆகிய ஸ்தானங்களில் ராகு நிற்க பிறந்தவர். ஊராளும் உயர் பதவி பெறுபவர். பொன், பொருள் சேர்க்கை என தனலாபங்கள் உண்டாகும். சந்திரனுக்கு 4, 5, 10 ஆகிய இடங்களில் ராகு நிற்க பிறந்தவர். புத்திர தோஷம், எதிர்பாராத கண்டம் இருக்கும். இதற்கு பரிகாரங்கள் செய்து நற்பலன் பெறலாம்! ராகு, கேது ஆகிய இரு கிரகங்களுக்கும் நடுவில் மற்ற கிரகங்களுக்கும், லக்னம், ராசி ஆகிய அனைத்தும் இருக்கப்பெற்ற ஜாதக அமைப்பை காலசர்ப்ப தோஷம், காலசர்ப்ப யோகம் என குறிப்பிடலாம். இந்த அமைப்பில் இளமையில் வறுமை, கஷ்டம், கடின உழைப்பு என இருக்கும்.  30 வயதுக்கு மேல் அனைத்து விஷயங்களும் யோகமாக மாறி நல்ல பலன்களை வழங்கி, ஜாதகருக்கு பின்யோகத்தை அளிக்கும் அளவில் இருக்கும். இந்த காலசர்ப்ப தோஷ அமைப்பு இருந்தால், அதே அமைப்பு உள்ள ஜாதகரை திருமணம் செய்வது சிறப்பு. காளஹஸ...

திருமண தோஷம் விவரம் :-

 திருமணம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்விலும் மிகவும் இன்றியமையாதது. குறிப்பிட்ட பருவ வயதை அடைந்தவுடன் ஆண், பெண் இருவருக்கும் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவது கடமை மட்டும் அல்லாமல் இயற்கை நியதியும்கூட. மண வாழ்க்கை சிலருக்கு எளிதாக கூடி வந்துவிடும். சிலருக்கு அதிக முயற்சிக்கு பிறகு கூடிவரும். ஒரு சிலருக்கு கிரக தோஷ அமைப்பின் காரணமாக தடைகள், இடையூறுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். திருமணம் என்றவுடன் பிள்ளையார் சுழி போடுவதுபோல முதலில் நிற்பது ஜாதகம்தான். திருமண பேச்சை எடுத்ததுமே, ஜாதகம் பார்த்தாச்சா? ஜாதகம் எப்படி இருக்கு? தோஷம் இருக்கா? பரிகாரம் செஞ்சீங்களா? உற்றார், உறவினர், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் மாறிமாறி கேட்பார்கள். திருமண விஷயத்தில் ஜாதக கிரக அமைப்புகளுக்கு முக்கிய பங்கு உண்டு. சில கிரக சேர்க்கைகள், திசா, புக்திகள் கோச்சார நிலை போன்றவைகளால் திருமணம் தாமதமாகிறது. இவை காரணமாக திருமணம் தாமதமானால் என்ன செய்வது? அதற்கு ஏதேனும் பரிகாரம் உண்டா? இது பலருக்கும் வரும் சந்தேகம். தோஷங்கள் பற்றி சொல்லும் ஜோதிட சாஸ்திரம் அவற்றுக்கான பரிகாரங்களையும் சொல்லியிருக்கிறது. ஜாதக தோஷங்கள் எ...

வீட்டோடு மாப்பிள்ளை யார்?

1. ஆண் ஜாதகத்தில் குருவும் ,சுக்கிரனும் இணைந்து சுக்கிரனின் வீடுகளான ரிசபம் அல்லது துலாத்தில் இருந்தால் நிச்சயம் ஜாதகன் வீட்டோடு மாப்பிள்ளையாய் மனைவி வீட்டில் தங்கிவிடுவான்.  2. ஆண் ஜாதகத்தில் சுக்கிரனின் வீடுகளான ரிசபம் அல்லது துலாத்தில் குரு தனித்து இருந்தாலும் ஜாதகன் மனைவி வழி ஆட்களுடன் மட்டும் அதிகம் தொடர்பில் இருப்பான். 3. ஆண் ஜாதகத்தில் சுக்கிரனின் வீடுகளான ரிசபம் அல்லது துலாத்தில் சுக்கிரன் தனித்து ஆட்சி பெற்று இருந்தால் ஜாதகரின் மனைவி தன் தாய் விட்டில் இருப்பதையே பெரிதும் விரும்புவாள். பெரும்பாலும் தாய் வீட்டிலேயே காலத்தை கழிப்பாள்.  4.பெண் ஜாதகத்தில் செவ்வாயும் ,சுக்கிரனும் இணைந்து சுக்கிரனின் வீடுகளான ரிசபம் அல்லது துலாத்தில் இருந்தால் ஜாதகியின் கணவன் வீட்டோடு மாப்பிள்ளையாய் ஜாதகி வீட்டில் தங்கிவிடுவான்.  5. பெண் ஜாதகத்தில் சுக்கிரனின் வீடுகளான ரிசபம் அல்லது துலாத்தில் செவ்வாய் தனித்து இருந்தாலும் ஜாதகியின் கணவன் ஜாதகி வழி ஆட்களுடன் மட்டும் அதிகம் தொடர்பில் இருப்பான். 6. பெண் ஜாதகத்தில் சுக்கிரனின் வீடுகளான ரிசபம் அல்லது துலாத்தில் சுக்கிரன் தனித்து ஆட்சி பெற்...

நவகிரகங்களின் சிறப்பு :-

*1.சூரியன்.* காசியப முனிவரின் குமாரர். ஒளிப்பிழம்பானவர். நவக்ரகங்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர். சிம்மராசிக்கு அதிபதி. நவகிரகங்களில் நடுவில் அமர்ந்திருப்பவர். திக்கு - கிழக்கு அதிதேவதை - அக்னி ப்ரத்யதி தேவதை - ருத்திரன் தலம் - சூரியனார் கோவில் நிறம் - சிவப்பு வாகனம் - ஏழு குதிரைகள் பூட்டிய ரதம் தானியம் - கோதுமை மலர் - செந்தாமரை , எருக்கு வஸ்திரம் - சிவப்பு ரத்தினம் - மாணிக்கம் அன்னம் - கோதுமை, ரவா, சர்க்கரைப் பொங்கல் *2.சந்திரன்.* பாற்கடலில் தோன்றியவர். தண்ணொளி உடையவர் . வளர்பிறையில் சுபராகவும், தேய்பிறையில் பாபராகவும் விளங்குபவர். கடக ராசிக்கு அதிபதி. திக்கு -தென்கிழக்கு அதிதேவதை - ஜலம் ப்ரத்யதி தேவதை - கௌரி தலம் - திருப்பதி நிறம் - வெள்ளை வாகனம் - வெள்ளைக் குதிரை தானியம் - நெல் மலர் - வெள்ளை அரளி வஸ்திரம் - வெள்ளாடை ரத்தினம் - முத்து அன்னம் - தயிர் சாதம். *3 . அங்காரகன் (செவ்வாய்)* இவர் வீரபத்திரர் அம்சம். சுப்ரமணியரை தெய்வமாகக் கொண்ட இவர், பாவ பலனைக் கொடுக்கும் குரூரர். மேஷம் , விருச்சிக ராசிகளுக்கு அதிபதி. திக்கு -தெற்கு அதிதேவதை - நிலமகள் ப்ரத்யதி தேவதை - க்ஷேத்திரபாலகர் தலம் - வை...

வாகனம் வாங்கும் கிழமை -நட்சத்திரம்-திதி :

ஞாயிறு, திங்கள், புதன், வியாழன் இந்த கிழமைகளில் வரும், மகம், சித்திரை, ரோகிணி, உத்திரம், உத்ராடம், உத்ரட்டாதி, புனர்பூசம், திருவோணம், ரேவதி ஆகிய நட்சத்திரங்களோடு, திதிகளான பஞ்சமி,தசமி, ஏகாதசி, இவைகளும் கூட, மிதுனம், கடகம், கன்னி,தனுசு, மீனம் இலக்கினக் காலங்களும் கூடி வரும் காலமே நாம் வாகனத்தை வாங்கி முதன்முதலாக பயணத்தைத் துவங்க வேண்டும் ________________________________ ஜோதிட முத்துக்கள் : 1. 1ல் சுக்கரன் –காமம் அதிகம் உண்டு. 2. 2ல் சுக்கரன் கள்ளத் தொடர்பு கட்டாயம் இருக்கும். 3. 4ல் சந்திரன் நல்ல வீடு உண்டு, தாயாரால் பிரச்சினை. 4. 5ல் சனி(வக்கரம்) வேலைக்காரகளால் தொந்தரவு, மாமன் இல்லை. பிரகார தெய்வ வழிபாடு. 5. 6ல் செவ்வாய் கணவனை மதியாள். எதிரிகள் அதிகம். 6. 4க்கு கேந்திரத்தில் சூரியன் தாகப்பன் சொத்து இல்லை. 7. 10ல் சுக்கிரன் பணக்கார வாழ்வு பின்னாளில் உண்டு. 8. செவ்வாய், சந்திரன் நல்ல நிலையில் விவசாய நிலம் உண்டு. 9. புதன் உச்சம் காலி மனைகள் காலி இடங்கள் உண்டு. கணவன் மனைவினிடையே அன்யோன்யம், மிக்க கேளிக்கையுடன் சந்தோஷம். 10. சுக்ரன் சனி நல்ல பொருளாதாரம் உண்டு. 11. சந்திரன் சனி ராகு வெளிநாடு...

12 ராசிகளும் உடல் பாகங்களும்:-

ஜோதிடத்தின் படி 12 இராசிகள் உள்ளன அவைகளே நம் வாழ்க்கையை வழிநடத்துகின்றன. இதில் ஒவ்வொரு இராசியும் நம் உடல் பாகங்களை குறிப்பிடுகின்றன, இது பொதுவான விதியே. மேஷம் – தலை ரிஷபம் – முகம் மிதுனம் – கழுத்து / மார்பு கடகம் – இதயம் சிம்மம் – வயிறு கன்னி – இடுப்பு துலாம் – அடிவயிறு.மர்மஉறுப்பு விருச்சிகம் – மர்ம உறுப்பு தனுசு – தொடை மகரம் – முழங்கால் கும்பம் – கணுக்கால் மீனம் – பாதம் 12 பாவம் உடல் உறுப்புகள் 1 ஆம் பாவம் தலை ,முகம் ,மூளை ,ரோமம், பருமன் தோற்றம் 2 ஆம் பாவம் முகம், கண்கள், பற்கள், தொண்டை மூக்கு, குரல்வளம் 3 ஆம் பாவம் காதுகள், கழுத்து பகுதி, தோள்பட்டை கைகள், கைவிரல்கள், மூச்சு குழாய் 4 ஆம் பாவம் இருதயம், மார்பகம், நுரையீரல், உணவுக்குழாய் 5 ஆம் பாவம் இருதயம், கல்லீரல், மண்ணீரல், கணையம், சிறுகுடல், பித்தப்பை 6 ஆம் பாவம் கிட்னி மற்றும் குடல் பகுதி 7 ஆம் பாவம் கர்ப்பப்பை, கர்ப்பப்பை குழாய் மலக்குடல், கருமுட்டை, அடிவயிறு, சிறுநீர்க்குழாய், 8 ஆம் பாவம் ஜனன உறுப்புகள், ஆசன வாய் மலத்துவாரம், ஆணுறுப்பு மற்றும் பெண்ணுறுப்பு 9 ஆம் பாவம் இடுப்புப்பகுதி, தொடைப்பகுதி 10 ஆம் பாவம் முழங்கால், மூட்டு ப...