Posts

வாகனம் வாங்க உகந்த நாட்கள்:-

இந்த பதிவில் வாகனம் வாங்க நல்ல நாளை தேர்ந்தெடுப்பது எப்படி என பார்க்கலாம், பொதுவாக நமது ஜாதகத்தில் பலம் இழந்த கிரகம் மற்றும் வீடுகள் தொடர்பான பிரச்சனைகள் இருந்து கொண்டு தான் இருக்கும், நல்ல முகூர்த்தத்தை தேர்வு செய்வதன் மூலம் பலமிழந்த கிரகம் மற்றும் வீடுகளின் மூலமாகவும் மகிழ்ச்சியை உண்டாக்கலாம் இதுவே முகூர்த்தத்தின் அடிப்படை நோக்கமாகும் முகூர்த்த சாஸ்திரம் கூறும் நட்சத்திரத்தின் வகைகள்  லகு நட்சத்திரம்  உக்கிர நட்சத்திரம்  இயல்பான நட்சத்திரம் நிலையான நட்சத்திரம் மேன்மையான நட்சத்திரம்  சர நட்சத்திரம்  கூர்மையான நட்சத்திரம் இதில் வாகனம் வாங்க லகு நட்சத்திரங்கள் அஸ்வினி பூசம் அஸ்தம் இயல்பான நட்சத்திரங்கள் மிருகசீரிடம் சித்திரை அனுஷம் ரேவதி  சர நட்சத்திரங்கள் புனர்பூசம் சுவாதி திருவோணம் அவிட்டம் சதயம்  இந்த நட்சத்திர நாட்களில் வாகனம் வாங்குவது நல்லது கிழமைகள் திங்கள் புதன் வியாழன் வெள்ளி நல்லது  தவிர்க்க வேண்டிய கிழமை செவ்வாய் தாரா பலன் வண்டி வாங்கும் தினத்தில் உங்கள் ஜென்ம நட்சத்திரம் நல்ல தாராபலன் உள்ள நாளில் வாங்குவது நல்லது, அதாவது உங்கள் நட்சத்த...

ஆண்களுக்கான ஜாதகத்தில்...குருவும் சுக்கிரனும் சேர்ந்திருப்பதற்கான பலன்கள்:-

.    1. ஜாதகர் ஆடம்பரத்தை விரும்புவார்  2. இவரது கலைத் திறமைகள் இருக்கும்.  3. ஜாதகர் எப்போதும் தன்னைச் சுற்றி பெண்கள் இருக்கவே விரும்புவார்.  4. எந்த விதமான நோயிலிருந்தும் ஜாதகர் எளிதில் குணமாக கூடியவர்.  5. இவருக்கு உடல் உழைப்பு பிடிக்காது.  6. ஜாதகர் அதிக பாலுறவு எண்ணங்களைக் கொண்டிருப்பார்.  7. சொந்த முயற்சியால் ஜாதகர் செல்வம் அடைவார்.( வீடு, வாகனம் போன்றவை)  8. ஜாதகர் தன்னை அலங்கரித்துக் கொள்வதில் விருப்பம் கொண்டவர்.   9. ஜாதகர் தனது மனைவியுடன் மிகவும் அன்பான உறவைக் கொண்டிருப்பார்.  10. இந்த சேர்க்கை நல்ல திருமண வாழ்க்கையை உறுதி செய்கிறது.  11. ஜாதகர் அடிக்கடி ஜாலி ட்ரிப் செய்ய விரும்புவார்.  12. ஜாதகர் கவர்ச்சிகரமான வெளிப்புற தோற்றத்தைக் கொண்டிருப்பார்.   13. ஜாதகர் அழகான சூழலில் வாழ்வார்.  14. நறுமணப் பொருட்கள் மீது இவரது விருப்பம் இருக்கும்.  15. ஜாதகர் ஆபரணங்களை விரும்புவார்.  16. இவரது மூக்கு மற்றும் தொடை அழகானது.  17. இவருக்கு சதைப்பற்றான குண்டான கன்னங்கள் உண்டு.  18. இவர...

♦•சந்திரன் + ராகு •♦•சந்திரன் + கேது சேர்ந்தால் பரிகாரம் !!!!!

ஜெனன ஜாதகத்தில் சந்திரனுடன் ராகு இணைந்து 3, 9, 10 ஆகிய இடங்களில் ராகு சஞ்சரித்தால் அரச யோகமும், பதவியும் அனுபவிப்பார். முதிய வயதிலும் மாறாத இளமை உண்டு. அதே சமயம், இவர்கள் தீய வழியில் செல்வம் சேர்ப்பார்கள். வரி ஏய்ப்பு, கள்ளக்கடத்தல் போன்ற முகாந்திரம் உண்டாகும். சந்திரனுக்கு 6, 12 ஆகிய ஸ்தானங்களில் ராகு நிற்க பிறந்தவர். ஊராளும் உயர் பதவி பெறுபவர். பொன், பொருள் சேர்க்கை என தனலாபங்கள் உண்டாகும். சந்திரனுக்கு 4, 5, 10 ஆகிய இடங்களில் ராகு நிற்க பிறந்தவர். புத்திர தோஷம், எதிர்பாராத கண்டம் இருக்கும். இதற்கு பரிகாரங்கள் செய்து நற்பலன் பெறலாம்! ராகு, கேது ஆகிய இரு கிரகங்களுக்கும் நடுவில் மற்ற கிரகங்களுக்கும், லக்னம், ராசி ஆகிய அனைத்தும் இருக்கப்பெற்ற ஜாதக அமைப்பை காலசர்ப்ப தோஷம், காலசர்ப்ப யோகம் என குறிப்பிடலாம். இந்த அமைப்பில் இளமையில் வறுமை, கஷ்டம், கடின உழைப்பு என இருக்கும்.  30 வயதுக்கு மேல் அனைத்து விஷயங்களும் யோகமாக மாறி நல்ல பலன்களை வழங்கி, ஜாதகருக்கு பின்யோகத்தை அளிக்கும் அளவில் இருக்கும். இந்த காலசர்ப்ப தோஷ அமைப்பு இருந்தால், அதே அமைப்பு உள்ள ஜாதகரை திருமணம் செய்வது சிறப்பு. காளஹஸ...

திருமண தோஷம் விவரம் :-

 திருமணம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்விலும் மிகவும் இன்றியமையாதது. குறிப்பிட்ட பருவ வயதை அடைந்தவுடன் ஆண், பெண் இருவருக்கும் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவது கடமை மட்டும் அல்லாமல் இயற்கை நியதியும்கூட. மண வாழ்க்கை சிலருக்கு எளிதாக கூடி வந்துவிடும். சிலருக்கு அதிக முயற்சிக்கு பிறகு கூடிவரும். ஒரு சிலருக்கு கிரக தோஷ அமைப்பின் காரணமாக தடைகள், இடையூறுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். திருமணம் என்றவுடன் பிள்ளையார் சுழி போடுவதுபோல முதலில் நிற்பது ஜாதகம்தான். திருமண பேச்சை எடுத்ததுமே, ஜாதகம் பார்த்தாச்சா? ஜாதகம் எப்படி இருக்கு? தோஷம் இருக்கா? பரிகாரம் செஞ்சீங்களா? உற்றார், உறவினர், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் மாறிமாறி கேட்பார்கள். திருமண விஷயத்தில் ஜாதக கிரக அமைப்புகளுக்கு முக்கிய பங்கு உண்டு. சில கிரக சேர்க்கைகள், திசா, புக்திகள் கோச்சார நிலை போன்றவைகளால் திருமணம் தாமதமாகிறது. இவை காரணமாக திருமணம் தாமதமானால் என்ன செய்வது? அதற்கு ஏதேனும் பரிகாரம் உண்டா? இது பலருக்கும் வரும் சந்தேகம். தோஷங்கள் பற்றி சொல்லும் ஜோதிட சாஸ்திரம் அவற்றுக்கான பரிகாரங்களையும் சொல்லியிருக்கிறது. ஜாதக தோஷங்கள் எ...

வீட்டோடு மாப்பிள்ளை யார்?

1. ஆண் ஜாதகத்தில் குருவும் ,சுக்கிரனும் இணைந்து சுக்கிரனின் வீடுகளான ரிசபம் அல்லது துலாத்தில் இருந்தால் நிச்சயம் ஜாதகன் வீட்டோடு மாப்பிள்ளையாய் மனைவி வீட்டில் தங்கிவிடுவான்.  2. ஆண் ஜாதகத்தில் சுக்கிரனின் வீடுகளான ரிசபம் அல்லது துலாத்தில் குரு தனித்து இருந்தாலும் ஜாதகன் மனைவி வழி ஆட்களுடன் மட்டும் அதிகம் தொடர்பில் இருப்பான். 3. ஆண் ஜாதகத்தில் சுக்கிரனின் வீடுகளான ரிசபம் அல்லது துலாத்தில் சுக்கிரன் தனித்து ஆட்சி பெற்று இருந்தால் ஜாதகரின் மனைவி தன் தாய் விட்டில் இருப்பதையே பெரிதும் விரும்புவாள். பெரும்பாலும் தாய் வீட்டிலேயே காலத்தை கழிப்பாள்.  4.பெண் ஜாதகத்தில் செவ்வாயும் ,சுக்கிரனும் இணைந்து சுக்கிரனின் வீடுகளான ரிசபம் அல்லது துலாத்தில் இருந்தால் ஜாதகியின் கணவன் வீட்டோடு மாப்பிள்ளையாய் ஜாதகி வீட்டில் தங்கிவிடுவான்.  5. பெண் ஜாதகத்தில் சுக்கிரனின் வீடுகளான ரிசபம் அல்லது துலாத்தில் செவ்வாய் தனித்து இருந்தாலும் ஜாதகியின் கணவன் ஜாதகி வழி ஆட்களுடன் மட்டும் அதிகம் தொடர்பில் இருப்பான். 6. பெண் ஜாதகத்தில் சுக்கிரனின் வீடுகளான ரிசபம் அல்லது துலாத்தில் சுக்கிரன் தனித்து ஆட்சி பெற்...

நவகிரகங்களின் சிறப்பு :-

*1.சூரியன்.* காசியப முனிவரின் குமாரர். ஒளிப்பிழம்பானவர். நவக்ரகங்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர். சிம்மராசிக்கு அதிபதி. நவகிரகங்களில் நடுவில் அமர்ந்திருப்பவர். திக்கு - கிழக்கு அதிதேவதை - அக்னி ப்ரத்யதி தேவதை - ருத்திரன் தலம் - சூரியனார் கோவில் நிறம் - சிவப்பு வாகனம் - ஏழு குதிரைகள் பூட்டிய ரதம் தானியம் - கோதுமை மலர் - செந்தாமரை , எருக்கு வஸ்திரம் - சிவப்பு ரத்தினம் - மாணிக்கம் அன்னம் - கோதுமை, ரவா, சர்க்கரைப் பொங்கல் *2.சந்திரன்.* பாற்கடலில் தோன்றியவர். தண்ணொளி உடையவர் . வளர்பிறையில் சுபராகவும், தேய்பிறையில் பாபராகவும் விளங்குபவர். கடக ராசிக்கு அதிபதி. திக்கு -தென்கிழக்கு அதிதேவதை - ஜலம் ப்ரத்யதி தேவதை - கௌரி தலம் - திருப்பதி நிறம் - வெள்ளை வாகனம் - வெள்ளைக் குதிரை தானியம் - நெல் மலர் - வெள்ளை அரளி வஸ்திரம் - வெள்ளாடை ரத்தினம் - முத்து அன்னம் - தயிர் சாதம். *3 . அங்காரகன் (செவ்வாய்)* இவர் வீரபத்திரர் அம்சம். சுப்ரமணியரை தெய்வமாகக் கொண்ட இவர், பாவ பலனைக் கொடுக்கும் குரூரர். மேஷம் , விருச்சிக ராசிகளுக்கு அதிபதி. திக்கு -தெற்கு அதிதேவதை - நிலமகள் ப்ரத்யதி தேவதை - க்ஷேத்திரபாலகர் தலம் - வை...