காஞ்சி மாமுனிவர் சொல்லிய பரிகாரம் :-

காஞ்சி மாமுனிவர் சொல்லிய பரிகாரம் ஜாதக கட்டத்தை பார்க்காமலேயே பரிகாரம் சொல்லும் மகான் காஞ்சி பெரியவர். பெரியவா சொல்லும் ஒவ்வொரு பரிகாரமும் ஜோதிடத்தோடு ஒத்துப்போகும். இதில் சிலவற்றை மட்டும் பார்ப்போம். ஜாதகப்படி சில யோகமில்லா கிரகங்களின் தசாபுத்தி காலங்களில் மட்டும் தான் பிரச்னை ஏற்படும். ஆனால் சில வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஏதேனும் உடல் நலக் கோளாறுகள் வந்து கொண்டே இருந்தால் அது முன் கடுமையான கர்மா மற்றும் பித்ரு தோஷமாக இருக்கும். இதற்கு அனைவராலும் எல்லா பரிகாரங்களும் செய்ய முடியாது. அதற்கு நம் பெரியவா எளிய பரிகாரமாக கோவிலிலோ அல்லது ஆன்மீக மையங்களிலோ பகல் வேலையில் முழு மஞ்சள் பரங்கிக்காய் (அரசாணிக்காய்) தானம் செய்தால் அந்த குடும்பம் கெட்ட தோஷத்திலிருந்து விடுபடும் என்று வழிகாட்டியிருக்கிறார். இந்த அரசாணிக்காய் மகிமை எல்லா சத்துக்களும் அடங்கும் ஒரு நோய் நிவாரணி. அதனால் தான் பெரியவா பரிகாரமாகச் சொல்லிருக்கிறார் இவற்றின் சக்தியை அனைவரும் பெறவேண்டும் என்பது ஒரு சூட்சமம். நாள் முழுதும் சந்திரனால் ஏற்படும் மன வருத்தம் மற்றும் மன அழுத்தத்தால் ஏற்...