வாழ்வை வளமாக்கும் தெய்வீக ரகசியங்கள் :-
வாழ்வை வளமாக்கும் தெய்வீக ரகசியங்கள்
திடீரென இழந்த வேலை, சரிந்த தொழில், உடல் நிலை கவலைக்கிடம், மனக்குழப்பம், மிகுந்த பயம் போன்றவற்றை சரியாக்க
சனிக்கிழமையன்று காலை 6:15 முதல் 7 மணிக்குள் அல்லது மதியம் 1:15 முதல் 2 மணிக்குள் அல்லது இரவு 8:15 முதல் 9 மணிக்குள் 12 பாதாம் பருப்புகளை ஒரு கருப்பு துணியில் முடிந்து ஒரு சிறிய இரும்பு பெட்டியில் வைத்து மூடி, வெளிச்சம் வராத கருமை படர்ந்துள்ள இடத்தில் வைத்துவிட, மேற்கண்ட தாக்கங்கள் குறையும். மேற்கு பகுதியில் வைத்தால் பலன் விரைவில் கிடைக்கும்.
தங்க நகையை அடமானம் வைக்க கூடாத நாட்கள்
கிருத்திகை, மகம், ஹஸ்தம், அனுஷம், மூலம், சதயம்
ஆகிய நட்சத்திரம் கூடிய நாட்களில் தங்கத்தை அடமானம் வைத்தவர்கள் தரித்தர நிலையை அடைகிறார்கள் அடமானம் வாங்கியவர்கள் செல்வந்தர்கள் நிலையில் இருந்து கொஞ்சம் கூட குறையாமல் மென்மேலும் முன்னேற்றத்தை அடைகிறார்கள்
பண வரவிற்கு
ஆபிஸ் கடை மற்றும் வீட்டின் வரவேரற்பறை ஆகிய இடங்களில் படத்தில் காட்டியது போல் ஒரு கண்ணாடி டம்பளர் அல்லது கண்ணாடி பவுலில் ஒரு ருபாய் 5 ருபாய் நாணயங்களை போட்டு தண்ணீர் ஊற்றி அதில் மஞ்சள் நிற பூவை போட்டு வைத்து தினமும் பார்த்து வந்தால் பணவரவு மிகுதியாகும் ஆபிஸ் கடை வைத்துள்ளவர்கள் கல்லா பெட்டியின் மேல் வைத்துக்கொள்ளவும் தினமும் பூவையும் தண்ணீரையும் மாற்றவும்
செவ்வாய் கிழமை அன்று முக்கோண வடிவமுள்ள சிவப்பு கொடியில் ‘ராம்’ என்று எழுதி, அனுமனுக்கு அதை வைத்து படைத்து வணங்கி, அந்த கொடியை வாகனங்களின் முன் மாட்டிக் கொண்டால், விபத்து ஏற்படுவது தடுக்கப்படும்
50 ஏலக்காய் கோர்த்து பச்சை கலர் நூலில் கட்டி மாலையாகவும் ஒரு தேன் பாட்டிலும் புதபகவானுக்கு புதன் கிழமையில் போடவும். நன்றாக படிப்பு வரும்
குழந்தைகள் அடிகடி கீழே விழுந்துக் கொண்டே இருந்தால், செங்கலால் திருஷ்டி சுற்றி, பிறகு அந்த திருஷ்டி கழித்த செங்கல்லை போட்டு உடைத்து அந்த மண்ணை பூமிதாயை மனதில் நினைத்து கொண்டு, செங்கல் மண்ணை குழந்தையின் நெற்றியில் வைத்தால் அந்த குந்தைகளுக்கு திருஷ்டியால் உண்டாகும் பாதிப்பு குறையும்.
Comments
Post a Comment