Posts

பகை நட்சத்திரங்கள்

27 நட்சத்திரங்களுக்கு பகை நட்சத்திரங்கள் ======================== அசுவினி -      -   கேட்டை  பரணி -            -   அனுஷம்  கிருத்திகை -      -  விசாகம்              ரோகிணி '         -   சுவாதி  மிருகசீரிஷம் -    சித்திரை  திருவாதிரை -     திருவோணம்  புனர்பூசம் -       -   உத்ராடம்  பூசம் -               -     பூராடம்  ஆயில்யம் -     -  மூலம்  மகம் -               -   ரேவதி  பூரம்                 -    பூராடம்  உத்திரம் -          -   உத்திரட்டாதி  அஸ்தம் -           -    சதயம்...

ஜோதிட ரகசியம்

“பிரஹத் ஜாதகத்” தின் படி, மேஷ இராசி முதல் மீன இராசி வரை காலபுருஷ தத்துவத்தின்படி ஒவ்வொரு இராசிக்கும், உடலின் ஒவ்வொரு பாகம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அவை முறையே தலை, முகம், மார்பு, இதயம், வயிறு, இடுப்பு, அடி வயிறு, ரகசிய உறுப்புக்கள், தொடைகள், முழங்கால், பட்டக்ஸ் மற்றும் பாதம் ஆகும்.        உதாரணமாக, சந்திரன் மேஷத்தில் இருக்கும் போது மிக்க அவசியம் ஏற்பட்டாலன்றி, மூளை சம்பந்தமான அறுவை சிகிச்சை செய்யக் கூடாது. அதுவே கோசாரச் சந்திரன், ஜனனச் சந்திரனைச் சந்திக்கும் போது, அபாயத்தின் அளவு அதிகமானதாக இருக்கும். இதே போன்று அந்தந்த  பாகத்தை குறிக்கும் இராசிகளில் சந்திரன் இருக்க, அப் பாகத்தில் அறுவை சிகிச்சை செய்வதைத் தவிர்க்க வேண்டும். உடலின்பாகம்           நட்சத்திரங்கள்                   கிழமை தலை                        கார்த்திகை, விசாகம்,                            ...

உங்கள் ஜாதகமும குல தெய்வ தோஷமும்

1. சுக்கிரன், இவரே குலதெய்வ தோஷத்தை சுட்டிக்காட்டும் கிரகம். சற்றே விளக்கமாக பார்த்தால்  சுக்கிரன் ஒரு ஜாதகத்தில் லக்னம்(ஜாதகர் பிறப்பதற்கு சில ஆண்டுகள் முன்னர் குலதெய்வ வழிபாடு தடைபட்டுள்ளது) , 5 ம் பாவகம்(ஜாதகரின் தாத்தா காலத்தில் இருந்து குலதெய்வ வழிபாடு தடைபட்டு உள்ளது), 9 ம் பாவகத்தில்(ஜாதைரின் தந்தை காலத்தில் இருந்து )  குலதெய்வ தோஷம் அல்லது சாபம் உண்டு. ரிஷபம் மற்றும் துலாம் லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு குல தெய்வ தோஷம் உண்டு... மேலும் ரிஷப துலா வீடுகளில் லகன அதிபதியோ, சந்திரனோ நின்றாலும் குலதெய்வ தோஷம் உண்டு... 1,5,9ம் அதிபதிகளின் நட்சத்திர சாரத்தில் சுக்கிரன் அமர்ந்தாலும் குலதெய்வ தோஷம் உண்டு. ஒன்றாம் பாவகம் மற்றும் 7 ம் பாவக தொடர்பு ஏறபட்டாலும் 1ம் அதிபதி 7 ஐ பார்த்தாலும் அல்லது 7ம் அதிபதியின் நட்சத்திர சாரம் பெற்றாலும்  7ம் அதிபதி லக்னத்தை பார்த்தாலும்  அல்லது 7ம் அதிபதியானவர் லக்னாதிபதியின் நட்சத்திர சாரம் பெற்றாலும்  அஸ்வினி, மகம்,மூலம் போன்ற நட்சத்திரங்களில் லக்னமோ, சந்திரனோ அல்லது லக்ன அதிபதியோ நின்றால் குலதெய்வ தோஷம் உண்டு... 7 மற்றும் 9 ம் அதிபதி...

காயகற்பம்

காயகற்பம் என்பது பல்லாயிரம் ஆண்டுக்காலம் உடலினை வாழ வைக்கும் முறையாகும். காயம் என்ற சொல் உடல் என்பதை குறிக்கிறது. அழுகணிச் சித்தர் பாடல்களில் இந்த காயகற்பம் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. பாடல் : வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம் தப்பாமற் சார்வார் தமக்கு இது ஒளவைப் பிராட்டியார் அருளிய கல்பமுறை அடங்கிய செய்யுள். இதனை உலகினர் பின்வருமாறு கருத்துக் கொள்வார்கள். தும்பிக்கையையுடைய விநாயகப் பெருமானின் திருப்பாதங்கைளத் துதிப்பவர்களுக்கு வாக்கு வன்மையும், மனோபலமும், லட்சுமி கடாட்சமும் உண்டாகும். உடலும் வாடாது. ஆனால் இதன் உட்கருத்து வேறு. இச்செய்யுளானது, இந்த உடம்பை நெடுநாள்வரை நரை, திரை, மூப்பு, பிணி என்னும் துன்பங்கள் அணுகாது, என்றும் இளமையாய் இருக்கும் தன்மையைத் தரும் காய கல்ப மூலிகைகளின் விபரத்தைக் கூறுவதாகும். இங்கே பூ என்பது தாமரைப்பூ மேனி என்பது குப்பைமேனி தும்பி என்பது தும்பைச்செடி கையான் என்பது கையான்தகரை (கரிசலாங்கண்ணி, கரிசாலை) பாதம் என்பது செருப்படை மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் ஐந்து மூலிகைகளு...

உடனடி வைத்தியம்

உடனடி வைத்தியம்!  * சுக்கு, மிளகு, திப்பிலி, …….. சித்தரத்தை இவற்றை சம அளவு எடுத்து நசுக்கி பனை வெல்லம் சேர்த்துக் கஷாயமாக்கிக் குடியுங்கள். உடம்பு வலி போகும். வாயுவும் அகலும். * பப்பாளி இலைச்சாறை உடலில் படர்தாமரை உள்ள இடத்தில் காலை, மாலை தொடர்ந்து ஒருவாரம் தடவிவர படர்தாமரை மறைந்துவிடும். * நான்கு சின்ன வெங்காயத்தை நன்றாகமென்று சாப்பிட்டுவிட்டு ஒரு டம்ளர் வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் நீங்கிவிடும். * ஜவ்வரிசியை சாதம் போல் வேக வைத்து மோரில் கரைத்து உப்பு போட்டுச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொறுமல் குறையும். * எலுமிச்சைச் சாற்றை வெந்நீரில் கலந்து வாய் கொப்பளிக்க வாய் துர்நாற்றம், பல்வலி, ஈறுகளில் ரத்தம் வடிதல் போன்ற பாதிப்புகள் குறையும். * முருங்கை இலைக் காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதை இடிக்கவும். இஞ்சி, மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றை இடித்து அதனுடன் சேர்க்கவும். இதில் தண்ணீர், சிறிது உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு, பாதியாக்கி வடிகட்டி சூப் போன்று குடித்து வந்தால் உடல் வலி போயே போக்கும்.

ஆண்மிக சிந்தனைகள்

குதிரைகள் குடிக்கும் நீர் நிலைகளில் இருந்து நீர் அருந்துங்கள்.  குதிரை ஒருபோதும் கெட்ட தண்ணீரை குடிக்காது.   பூனை தூங்கும் இடத்தில் உங்கள் படுக்கையை இடுங்கள். அமைதி தராத இடத்தில் பூனை உறங்காது.   புழு துளைத்த கனிகளை உண்ணுங்கள். நச்சுக் கனிகளை புழு துளைக்காது.   பூச்சிகள் உட்கார்ந்திருக்கும் காளானை தைரியமாக உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். விஷக் காளான்கள் மீது பூச்சிகள் உட்காராது.   முயல்கள் குழி பறிக்கும் இடத்தில் மரத்தை நடலாம். மரம் செழிப்பாக வளரும். பறவைகள் வெப்பத்தை தவிர்க்க ஓய்வெடுக்கும் இடத்தில் உங்களுக்கான நீர் ஊற்றினை தோண்டுங்கள்.   பறவைகள் தூங்கப் போகும் நேரத்தில் தூங்கச் சென்று, அவை விழிக்கும் நேரத்தில் எழுந்திருங்கள். நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும்.   அதிகம் இயற்கையான உணவுகளை உண்ணுங்கள். வலுவான கால்களையும், துணிச்சல் மிக்க இதயத்தையும் பெறுவீர்கள்.   மீன்களைப்போல அடிக்கடி நீரில் நீந்துங்கள். நீங்கள் பூமியில் நடக்கும்போது கூட மீன்களைப் போலவே உணர்வீர்கள்.   அடிக்கடி வானத்தைப் பாருங்கள். உங்கள் எண்ணங்களில் வெளிச்சமும், தெளிவும் பிறக்கும்....

ஜோதிடத்தில் மாந்தி

ஜோதிடத்தில் மாந்தி ************************ மாந்தி பிறப்பு ஜாதகத்தில் 1,7 ஆம் வீடுகளில் அமைந்தால் மனநல பாதிப்பு,திருமணவாழ்வில் சிக்கல் ஏற்படும்    2)2,6,11ம் பாவத்தில் மாந்தி தொடர்பு குடும்பத்தில் அமைதி இல்லை    3) 3,8ஆம் பாவத்தில் தொடர்பு கொண்டால் மரண பயம்,தாய் அரவணைப்பு கிடைக்காமல் போவது,மன ஏக்கம்,பயம் ஏற்படும்    4) 4,9ல் மாந்தி தந்தையின் பொருளாதார நிலை ,ஆயுள் பாதிப்பு உண்டாகும்.   5) 3,5,8இல் மாந்தி தொடர்பு செய்வினை,மந்திரங்களால் பாதிப்பு இவற்றில் பிரமை ஏற்பட்டு அதிக பொருள் இழப்பு உண்டாகும்   6) 2,10இல் மாந்தி தொடர்பு தொழில் உயர்வு மற்றும் மேன்மை உண்டாகும்.