உங்கள் ஜாதகமும குல தெய்வ தோஷமும்
1. சுக்கிரன், இவரே குலதெய்வ தோஷத்தை சுட்டிக்காட்டும் கிரகம். சற்றே விளக்கமாக பார்த்தால்
சுக்கிரன் ஒரு ஜாதகத்தில் லக்னம்(ஜாதகர் பிறப்பதற்கு சில ஆண்டுகள் முன்னர் குலதெய்வ வழிபாடு தடைபட்டுள்ளது) , 5 ம் பாவகம்(ஜாதகரின் தாத்தா காலத்தில் இருந்து குலதெய்வ வழிபாடு தடைபட்டு உள்ளது), 9 ம் பாவகத்தில்(ஜாதைரின் தந்தை காலத்தில் இருந்து ) குலதெய்வ தோஷம் அல்லது சாபம் உண்டு.
ரிஷபம் மற்றும் துலாம் லக்னத்தில் பிறந்த ஜாதகருக்கு குல தெய்வ தோஷம் உண்டு...
மேலும் ரிஷப துலா வீடுகளில் லகன அதிபதியோ, சந்திரனோ நின்றாலும் குலதெய்வ தோஷம் உண்டு...
1,5,9ம் அதிபதிகளின் நட்சத்திர சாரத்தில் சுக்கிரன் அமர்ந்தாலும் குலதெய்வ தோஷம் உண்டு.
ஒன்றாம் பாவகம் மற்றும் 7 ம் பாவக தொடர்பு ஏறபட்டாலும்
1ம் அதிபதி 7 ஐ பார்த்தாலும் அல்லது 7ம் அதிபதியின் நட்சத்திர சாரம் பெற்றாலும்
7ம் அதிபதி லக்னத்தை பார்த்தாலும்
அல்லது 7ம் அதிபதியானவர் லக்னாதிபதியின் நட்சத்திர சாரம் பெற்றாலும்
அஸ்வினி, மகம்,மூலம் போன்ற நட்சத்திரங்களில் லக்னமோ, சந்திரனோ அல்லது லக்ன அதிபதியோ நின்றால் குலதெய்வ தோஷம் உண்டு...
7 மற்றும் 9 ம் அதிபதிகளின் தொடர்பு ஏற்பட்டாலும் குலதெய்வ தோஷம் உண்டு...
இதற்கு பரிகாரம் குலதெய்வ வழிபாடு மட்டுமே.
Comments
Post a Comment