உடனடி வைத்தியம்

உடனடி வைத்தியம்! 

* சுக்கு, மிளகு, திப்பிலி, …….. சித்தரத்தை இவற்றை சம அளவு எடுத்து நசுக்கி பனை வெல்லம் சேர்த்துக் கஷாயமாக்கிக் குடியுங்கள். உடம்பு வலி போகும். வாயுவும் அகலும்.

* பப்பாளி இலைச்சாறை உடலில் படர்தாமரை உள்ள இடத்தில் காலை, மாலை தொடர்ந்து ஒருவாரம் தடவிவர படர்தாமரை மறைந்துவிடும்.

* நான்கு சின்ன வெங்காயத்தை நன்றாகமென்று சாப்பிட்டுவிட்டு ஒரு டம்ளர் வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் நீங்கிவிடும்.

* ஜவ்வரிசியை சாதம் போல் வேக வைத்து மோரில் கரைத்து உப்பு போட்டுச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொறுமல் குறையும்.

* எலுமிச்சைச் சாற்றை வெந்நீரில் கலந்து வாய் கொப்பளிக்க வாய் துர்நாற்றம், பல்வலி, ஈறுகளில் ரத்தம் வடிதல் போன்ற பாதிப்புகள் குறையும்.

* முருங்கை இலைக் காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதை இடிக்கவும். இஞ்சி, மிளகு, சீரகம், பூண்டு ஆகியவற்றை இடித்து அதனுடன் சேர்க்கவும். இதில் தண்ணீர், சிறிது உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு, பாதியாக்கி வடிகட்டி சூப் போன்று குடித்து வந்தால் உடல் வலி போயே போக்கும்.

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-