தாந்திரீக சாஸ்திரம்:-
1. விபூதியை ஊற்று நீர்¸ ஆற்று நீரால் குளிர்ந்த நீரிலேயே குழைக்க வேண்டும். உப்பு நீர்¸ வெந்நீர் பழைய நீர்¸ பாசி¸ குமிழி¸ நுரை¸ கலங்கள்¸ புழு முதலியவை உள்ள அசுத்த நீரில் குழைப்பது ஆகாது. விபூதியை பெறுங்கால் வந்தன உபசாரத்துடன் இரண்டு கைகளாலும் பெறுதல் வேண்டும். விபூதியை சதுரமாகவோ பொட்டாகவோ தரித்தல்கூடாது. முக்கோடாகக் கிழக்கு நோக்கி பூசுதல் வேண்டும். 2. தேசாந்திரம் போனவர்கள் பற்றிய செய்தி 12 வருசம் வரை தெரியாவிட்டால் அவர்கள் இறந்து போயிருப்பார் என்று நம்பி தர்பையைக் கட்டி தகனம் செய்து பிறகு 3 நாட்களில் மற்ற கர்மாக்களைச் செய்ய வேண்டும். திதி தெரியாததால் தேய்பிறை அஷ்டமி¸ ஏகாதசி¸ அமாவாசை¸ முதலியவற்றையும்¸ மாதத்திற்கு ஆடி¸ புரட்டாசி¸ மாசி ஆகியவற்றையும் வைத்துக்கொள்ளலாம். தாய்¸ தகப்பன் விசயத்தில் 16வது வருஷத்தில் இதனை செய்யவேண்டும். 3. பெண்களின் வலது பக்கத்தில் சரஸ்வதியும்¸ இடது பக்கத்தில் லட்சுமியும்¸ வாசம் புரிகின்றனர். எனவே¸ பெண்கள் முதன் முதலில் வலது பக்கத்தில் குழந்தைகளுக்கு பால் கொடுக்க வேண்டும். வலது பாகம் சரஸ்வதி பாகமென்பத...