கொழுப்புக் கட்டி குறைய:-
தே.பொருட்கள்..
சரக்கொன்றைப் புளி – ½ கிலோ
சுத்தமான பன்னீர் – 1 லிட்டர்
எலுமிச்சைச் சாறு – 200 மி.லி
சுத்தமான தேன் – 2 லிட்டர்
முதலில் சுத்தமான பன்னீரில் சரக்கொன்றைப் புளியை ஊற வைக்கவும். 6 மணி நேரம் ஊறிய பிறகு, அவற்றை நன்கு பிசைந்து பன்னீர் கரைசலை வடிகட்டவும். பின்னர் எலுமிச்சைச் சாறை அதனுடன் சேர்க்கவும்.
தேனை ஒரு பாத்திரத்திலிட்டு கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்து நுரை நீக்கி, முன்னர் தயார் செய்து வைத்துள்ள கரைசலை, தேனுடன் கலந்து கொதிக்க வைக்கவும். நல்ல நூல் பதத்தில் அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.
200 மி.லி குளிர்ந்த நீரில் 50 மி.லி சர்பத்தை கலந்து, தினசரி அதிகாலை மற்றும் மாலை வேளை பருகி வந்தால்… உடல் பருமன், தொப்பை, அதிக கொழுப்புக் கரையும். வயிற்றில் கீரிப்பூச்சி, நாக்குப்புச்சி மற்றும் அமீபியாஸிஸ் தீரும். உடலில் காணப்படும் கொழுப்புக் கட்டி குறையும். மூல நோய், மலச்சிக்கல் குணமாகும். மூக்கில் சதை வளர்ச்சி, தொண்டையில் சதை வளர்ச்சி ஆகியன தீரும்.
Comments
Post a Comment