சனி தசா தரும் பலன்கள் :-
🎱 சனி தசா தரும் பலன்களும்
🌚சனி தரும் தொழில்களும்
நாம் முன் ஜன்மத்தில் செய்த பாவ புண்ணிய செயல்களின் படியும்,
நம் முன்னோர்கள் செய்த பாவ புண்ணிய செயலுக்கு ஏற்பவும்
இந்த ஜன்மத்தில் நாம் இன்பங்களையும்,துன்பங்களையும் அனுபவிக்கிறோம்.
முன்னோர்களின் நகல்களே நாம் அவர்களின் சொத்தில் நமக்கு மட்டும் உரிமை இல்லாமல் நமது வாரிசுகளுக்கும் உரிமை உள்ளதைப் போன்று அவர்களின் பாவபுண்ணியத்தில் நமக்கும்,நமது வாரிசுகளுக்கும் பங்கு உண்டு.
இதை கர்மா என்கிறோம். இதை கண்காணிக்கவும் , பாரபட்சம் இன்றி செயல் படுத்தவும் 7 1/2 சனியாகவும், (மங்குசனி,பொங்குசனி,மரணசனி),
அட்டம சனியாகவும், கண்டசனியாகவும்,
அர்தாஷ்டமசனியாகவும் வலம் வந்து தசாபுத்திக்கு ஏற்ப தனது கடமையை கர்மகாரணான சனி செவ்வனே செய்து வருகிறார்.
மிக மெதுவாக சூரியனை 30வருட காலத்தில் சுற்றி வருகிறார் சனி பகவான்.
அதனால் தான் 30வருடம் வாழ்ந்தவரும் இல்லை 30வருடம் தாழ்ந்தவரும் இல்லை என்று பழமொழி உள்ளது.
கர்மக்காரனாக செயல்படும் சனி பூசம்,அனுஷம்,உத்திரட்டாதி ஆகிய நட்சந்திரங்களுக்கு அதிபதியாகவும்,
மகர,கும்ப ராசிகளில் ஆட்சி பெற்றும்
துலாம் ராசியில் உச்சம் பெற்றும்
மேஷராசியில் வலு இழந்து நீசம் அடைகிறார்.
சனி தான் இருக்கும் இடத்தை கெடுப்பது மட்டும் அல்லாமல் தான்
பார்க்கும் 3,7,10 இடத்தை பாழ் செய்வார்.
நீதிதவறாமல் பாகுபாடு இன்றி தண்டனை வழங்க கடமைபட்ட சனி யின் பார்வை பலனை கீழே காண்போம்
⚽சனி சூரியனை பார்த்தால் கஷ்ட ஜீவனம்.
⚽சனி சந்திரன் தொடர்பு இருந்தால் புனர்பூதோஷம் ஏற்பட்டு சுபகாரிய தடை
⚽சனி சுக்கிரனை பார்வை செய்தால் இல்வாழ்வில் நிம்மதி இன்மை
⚽சனி செவ்வாயை பார்த்தால் வீடு, மனையில் பிரச்சனை,விபத்து
⚽சனி புதனை பார்வையிட்டால் கல்வியில் தடை
♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠
⚽ சாதகத்தில் ஆறாம் இடத்தில் அமர்ந்தாலோ,
ஆறாம் இடத்து அதிபதியை சனி பார்வை
செய்தாலோ
ஆறாம் இடத்து கெடுபலனான கடன்,நோய்,பகையை அழித்து நம்மை காப்பார்.
அதாவது
சனி நல்ல இடத்தை பார்வை செய்தால் நன்மை கிடைக்க தாமதபடுத்துவார்.
கெட்ட இடத்தை பார்த்தால் அந்த கெடுபலனை தடுத்து நிறுத்துவார்.
♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠
↘மற்ற லக்னக்காரர்களை காட்டிலும் கோச்சாரசனியால்அதிகம் பாதிப்பு அடைபவர்கள்:
விருட்சிக ராசியினருக்கு கோச்சாரத்தில்(71/2 சனி)
உச்சம் பெற்ற விரைய சனியாக மிகப் பெரிய விரய செலவையும்,
கும்ப ராசியினருக்கு
விரையாதிபதியாக உள்ள சனி பகவான் கோச்சாரத்தில்
(7 1/2சனி) பலம் பெற்று
விரைய சனியாக விரையங்களை வழங்குவார்.
கடக ராசி லக்னத்தினருக்கு அட்டம சனியின் போது கெடுபலனை செய்வார். (கோச்சாரத்தில் சனி சுபத்துவம் அடையாமல் இருந்தால்)
சிம்ம ராசியினருக்கு கண்டக சனியின் போது கெடுபலனை செய்வார்
(கோச்சாரத்தில் சனி சுபத்துவம் அடையாமல் இருந்தால்)
♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠
💩சனியின் காரகங்கள்:
🌑சோம்பல்
🌑சந்தேக உணர்வு
🌑விஷமபுத்தி
🌑அடிமைத்தனம்
🌑கலகம்
🌑ஆயுள்
🌑அடித்தட்டு மக்கள்
🌑வறுமை
🌑ஏமாற்றம்
🌑மலட்டு தன்மை
🌑விதவை
🌑ஊடல் ஊனம்
🌑சிறு திருட்டு
🌑தாழ்வு மனப்பான்மை
ஆயுளை தவிர வேறு நல்ல காரகங்களை சனி செயல் படுத்தாததால்
மிகப் பெரிய பாவ கிரகமாக உள்ளது.
♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠
⬆சனி தசா யாருக்கு யோகம்
⬇ கடகம்,சிம்மம்,மேஷம்,விருச்சிக லக்னதார்களுக்கு யோகம் அளிக்கமாட்டார்
➡தனுசு,மீன லக்னதாரர்களுக்கு மிதமான யோகம் தருவார்.
🔝மகரம்,ரிஷபம்,துலாம்,கும்பம், மிதுனம்,கன்னி லக்னகார்களுக்கு யோகம் அளிப்பார்.
⬆ ஜனன ஜாதகத்தில் 3,6,11இடங்களில் அமர்ந்த சனி தான் நன்மை அளிக்க கூடிய லக்னதாருக்கு யோகம் செய்வார்.
மேலும் அதிகமான கெடுபலனை தரும் சனி ஜனன ஜாதகத்தில் நேரடியாக வலுபெற கூடாது.
அதாவது ஆட்சி, உச்சம் பெறாமல் மறைமுக வலு பெற வேண்டும்.
மறைமுக வலு என்பது
சனி உச்சம் பெற்று வக்கரம் அடைந்து வலு இழத்தல்,
சுபர் பார்வை,சேர்க்கை,
நீசம் பெற்ற சனியை சுபர் பார்வையிடல்,
வர்கோத்தமம் அடைதல்
போன்ற நிலைகளில் சனி தனது சுய பாவத்தன்மையை இழப்பார்.
சனி வலு பெற்று ஒருவருக்கு தசா நடத்தினால்
காலில் அடிபட்டு நடக்க முடியாத நிலை, கணவனை இழத்தல்,
வறுமை,
கொத்தடிமை நிலை
அரசு தண்டனை
போன்ற சனியின் காரகத்துவங்கள் நிகழ
வாய்ப்பு உள்ளது.
♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠♠
🏭சனி தரும் தொழில்கள்
🌒பெட்ரோல்
🌒இரும்பு
🌒உரம்
🌒பழைய உபகமற்ற பொருட்கள்
🌒கழிவு
🌒சுரங்க வேலை
🌒கல் உடைத்தல்
🌒செருப்பு தைத்தல்
🌒சித்தாள்,கொத்தனார், பெயிண்டர்
🌒மெக்கானிக்
🌒அடிமட்ட பணி(பியூன்)
🌒அடிமைத் தொழில்
🌒முன்னேற்றம் தரா கைத் தொழில்
🌒கசாப்பு தொழில்
🌒மயானத் தொழில்
🌒 மது பார்களில் தொழிலாளி
சனி சுப வலுபெற்று சுயதொழில் செய்யும் அமைப்பு உடையவர் முதலாளியாகவும், அடிமைத் தொழில் செய்யும் அமைப்பு உடையவர் தொழிலாளியாகவும் பணிபுரிவார்கள்
இதில் கழிவு என்றால் கழிவு நீர் ஊர்தி,கழிவறை பொருட்கள் தயாரித்தல்,விற்பனை செய்தல்,துப்பரவு பணியாளர்கள், கழிவறை குத்தகை... என்று விரிவாக்கி கொள்ள வேண்டும்.
Comments
Post a Comment