பல் சொத்தை ஏற்படுவதற்கான காரணங்களும் அதற்கு இயற்கை முறையில் தீர்வும்:-
பல் சொத்தை ஏற்படுவதற்கான காரணங்களும் அதற்கு இயற்கை முறையில் தீர்வும்::: 👉🏼பல் சொத்தையை சரியாகக் கவனிக்காவிட்டால், அது அதிகமாகி, மற்ற பற்களிலும் பரவிவிடும். நாளடைவில் இது ஆழமாகி, பற்களின் வேர்களையும் தாக்கும். ஈறுகளுக்கும் பாதுகாக்க வழிமுறைகள். 👉🏼சிறிதளவு துளசி இலைகள், உப்பு மற்றும் மிளகு ஆகியவற்றை வலி உள்ள இடத்தில் வைத்துத் தேய்க்கவேண்டும். இவ்வாறு செய்தால் பல் வலி குணமாகும். சொத்தையான பல்லில் கிராம்பை வைத்து சிறிது நேரம் அழுத்திப் பிடித்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும் பொழுது சிறிது நேரத்தில் பல் வலி சரியாகிவிடும். 👉🏼மிதமான சுடுநீரில் கல் உப்பைக் கலந்து கொள்ள வேண்டும். தினமும் ஒரு வேளை இந்த நீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கிருமிகள் கொல்லப்படும். பல் சொத்தையில் இருந்து விடுபடலாம். 👉🏼மஞ்சள் ஒரு சிறந்த கிருமி நாசினி. பல் சொத்தையான இடத்தில் மஞ்சளைத் தடவிக்கொள்ள வேண்டும். சில நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் வாய் கொப்பளித்துக் கொள்ளுதல் அவசியம். இதைத் தினமும் செய்து வர பல் சொத்தை குணமாகும். 👉🏼 வேம்பு மற்றும் ஆல விழுது சாற்றைப் பல் சொத்தை...