இயற்கை ro water :-
"ரெடிமேட் ஆர்கானிக் வாட்டர்"
*தேவையான பொருட்கள்
வெட்டிவேர் - இரண்டு கைப்பிடி,
தேற்றான் கொட்டை - 10,
நன்னாரி வேர் - இரண்டு கைப்பிடி,
துண்டுகளாக நறுக்கிய தர்பை புல்- இரண்டு கைப்பிடி. இவைகளை பருத்தி துணியில் சம அளவில் இரண்டு மூட்டைகளாக கட்டி
இரண்டு மண்பானைகளில் அல்லது செம்பு பாத்திரங்களில் ஒன்றன்பின் ஒன்றாக மாற்றி பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு 20லி தண்ணீரில் போட்டு ஒரு நாள் ஊற வைத்து பயன்படுத்தவும்.
#வெட்டிவேரின்_நன்மைகள்*
நீர் கடுப்பு, சிறுநீர்தாரை எரிச்சல், அழற்சி,
அதிக தாகம், உடலில் அரிப்பு நீக்கிஉடல் சூட்டை தணிக்கும்,சளியை குணப்படுத்தும், நாவறட்சி குணமாகும்,வயிறு சார்ந்த பிரச்சனைகளை சரிசெய்யும், வாந்தி பேதி காய்ச்சல் நீங்கி
உடல் எரிச்சலை குணமாக்கும்
#நன்னாரிவேர்_நன்மைகள்*
இரத்தத்தை சுத்தப்படுத்தும்,
சிறுநீரை பெருக்கி கழிவுகளை வெளியேற்றும்,
தோல் நோய் குணமாகும், மூட்டுவலி குறையும்,
இளநரை, இருமல் போக்கும்,பித்தம் குறையும்,
ஆண்மை அதிகரிக்கும்,பாரிச வாயு குணமாகும்.
#தேற்றான்கொட்டை_நன்மைகள்*
உப்பு நீரை தாதுக்கள் நிறைந்த நல்ல நீராக மாற்றுகிறது, தேறாத உடலையும் தேற்றி
சிறுநீரகத்தை பலப்படுத்தும், சிறுநீர்தாரை எரிச்சல் குணமாகும். நீரழிவை கட்டுக்குள் வைக்கும், கண்களுக்கு நல்லது, அதிக சூட்டை தணிக்கும்,மேக வெட்டையை குணமாகும்.
#தர்பைபுல்_நன்மைகள்.
உடலில் உள்ள தோஷங்கள் நீங்கும்,எதிர்மறை ஆற்றல் அல்லது கதிர்வீச்சுகள் உங்களை தாக்காது, நோய் தொற்று ஏற்படாது,நீரழிவு நோயின் தாக்கம் குறையும்,கல்லீரல், சிறுநீரகம் பலப்படும், வயிற்றுபுண்கள் வாய்புண்கள் ஆறும்,
மன உளைச்சல் நீங்கும், நல்ல உறக்கம் வரும்,
சிறுநீரக கற்கள் உருவாகாது, ரத்தத்தில் தேங்கி உள்ள கழிவுகளை வெளியேற்றும்,வாத பித்த கபத்தை சீராக்கும். இந்த ஆற்றல் மிகுந்த
RO வாட்டர்.
Comments
Post a Comment