ஜோதிடத்தில் சனி பகவான் :



★நமது ஜாதகத்தில் சனி பகவானுடன் எந்தெந்த கிரகங்கள் எல்லாம் இணைகின்றதோ அந்த கிரக காரத்துவங்கள் சார்ந்தும் நாம் முன்ஜென்மத்தில் அகங்காரத்திலும் ஆணவத்திலும் ஆடி இருக்கிறோம் என்று அர்த்தம்.

★எந்த ஒரு கிரக காரகத்துவம் சார்ந்த விஷயம் நமக்கு முன் ஜென்மத்தில் அளவுக்கு அதிகமாக கிடைத்து அதன் அருமை புரியாமல் நாம் வாழ்ந்து 
இருக்கின்றோமோ அந்த விஷயங்கள் எல்லாம் இந்த ஜென்மத்தில் சனி பகவான் controlக்கு சென்றுவிடும்.

★இந்த ஜென்மத்தில் சனி பகவானுடன் எந்தெந்த கிரகங்கள் இணைகின்றதோ அந்த கிரக காரகத்துவம் சார்ந்த விஷயங்கள் நமக்கு கிடைப்பதற்கு தாமதப்படுத்துவார்.மற்றும்  அதன் அருமை பெருமை நமக்கு புரிய வைப்பார்.

★சனி பகவானுடன் எந்த எந்த கிரகங்கள் எல்லாம் இணைகின்றதோ அந்த கிரக காரத்துவங்கள் சார்ந்த விஷயங்களை ஒரு போதும் இந்த ஜாதகர் வெளியில் தூக்கி பேசக்கூடாது மற்றும் scene போட கூடாது.

★சனி பகவானுடன் சேர்ந்து இருக்கும் கிரக காரத்துவங்கள் சார்ந்த விஷயங்களை நாம் எவ்வளவுக்கு எவ்வளவு வெளியில் தூக்கி பேசுகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு அடுத்தவர்களின் ஏக்கத்தையும்,வயிறு எரிச்சலையும் பொறாமையையும்,திருஷ்டியையும், ஈர்த்துக் கொண்டே இருப்பார்.

★இதன் காரணமாக அந்த கிரக காரகத்துவம் சார்ந்த விஷயங்கள் நமக்கு கிடைப்பதற்கு தாமதமாகும் இல்லைஎன்றால் கிடைக்காமல் போய்விடும்.

★இந்த சூட்சமம் சனி பகவானுடன்
Orderwiseல் கிரகங்கள்
சேர்ந்திருக்கும்போது எது முன் இருக்கிறது எது பின் இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும்.

★உதாரணமாக துலாத்தில் சுவாதி 4-ஆம் பாதத்தில் சனி பகவானும் சுவாதி 1ஆம் பாதத்தில் செவ்வாயும் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.இப்பொழுது orderwiseல் சனிபகவான் தான் முன் இருக்கிறார்.
இப்பொழுது செவ்வாய் பகவான் தான் சனி பகவானை போய் தொடுகிறது.இப்பொழுது சனியின் தாக்கம் தான் செவ்வாய்க்கு இருக்கும்.இந்த மாதிரி சேர்ந்து இருந்தால் தான் நான் சொன்ன சூட்சமங்கள் இதற்குப் பொருந்தும்.

★அதே மாதிரி சுவாதி 4-ஆம் பாதத்தில் செவ்வாய் பகவானும் சுவாதி 1ஆம் பாதத்தில் சனி பகவானும் இருந்தால் இப்பொழுது சனிபகவான் தான் செவ்வாயை சென்று தொடுகிறது.இப்பொழுது செவ்வாயின் தாக்கம்தான் சனிக்கு இருக்கும்.இப்படி இருந்தால் மேற்கொண்ட சூட்சமங்கள் இதற்கு பொருந்தாது.

★இப்பொழுது சனி பகவானுடன் கிரகங்கள் சேர்ந்தால் என்ன ஆகும் என்பதை ஒவ்வொரு கிரகமாக பார்க்கலாம்.

★1.(சனி,செவ்வாய்)

★சனியும் செவ்வாயும் ஒரு ஜாதகத்தில் சேர்ந்திருந்தால் இந்த ஜாதகருக்கு செவ்வாய் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் கிடைப்பதற்கு தாமதப்படுத்தி கொண்டே இருக்கும்.

★அதாவது வீடு வண்டி வாகனம் சொத்து இது என்று சார்ந்த அனைத்து விஷயங்களும் இவர்களுக்கு கிடைப்பதற்கு சனி பகவான் தாமதப்படுத்தி கொண்டே இருப்பார் அதன் அருமை பெருமை நமக்கு புரிய வைத்து விடுவார்.

★என்னதான் கையில் பணம் இருந்தாலும் இவர்களுக்கு வீடு வாகனம் சொத்து இவற்றை வாங்குவதற்கும் விற்பதற்கும் சனீஸ்வரர் காலதாமதம் செய்ய வைப்பார்.

★மேலும் இவர்களுக்கு வாழ்க்கையில் நடக்க கூடிய எல்லா விஷயங்களும்  lateஆகத்தான் நடக்கும்.என்னதான் risk எடுத்து ஒரு வேலை செய்தாலும் அதனுடைய result என்பது இவர்களுக்கு தாமதமாகத்தான் கிடைக்கும்.

★சனி செவ்வாய் சேர்ந்து இருக்கும் ஜாதகர்கள் எல்லாம் சொன்னா வார்த்தையே சொல்லிக் கொண்டிருப்பார்கள் கேட்ட கேள்வியையே கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.

★2 மாதத்தில் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயத்தை இரண்டு வருடங்கள் கற்றுக் கொள்வார்கள்.
ஒரு மாதத்தில் செய்ய வேண்டிய விஷயத்தை ஒரு வருடமாக செய்வார்கள்.

★இவர்கள் வாழ்க்கையில் இவர்கள் முன்னேறுவதற்கு இவர்கள் எடுக்கும் முயற்சியே சனி பகவான் காலதாமதம் படுத்துவார்.

★அதாவது ஒரு புதிய தொழில் செய்யலாம் என்று இவர்கள் நினைத்தார்கள் என்றால் அந்தத் தொழில் ஆரம்பிப்பதற்கே இவர்களுக்கு இரண்டு வருடங்கள் அல்லது மூன்று வருடங்கள் வரை சனி பகவான் காலதாமதம் படுத்துவார்.

★சனி செவ்வாய் சேர்க்கை இருப்பவர்களுக்கு உத்தியோகம் சார்ந்த பிரச்சினைகள் கண்டிப்பாக இருக்கும் அதாவது இவர்களுக்கு உத்தியோகம் கிடைப்பதற்கு காலதாமதம் ஆகும்.கிடைத்த உத்தியோகம் நினைக்காமல் இருப்பது அல்லது முன்னேறாமல் இருப்பது.

★சனி செவ்வாய் சேர்க்கை இருக்கும் ஜாதகர்கள் இவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் இவர்களுக்கு வந்திருக்கும் அதனைத் தட்டிக் கழித்துவிட்டு இப்பொழுது அந்த வாய்ப்புகள் நம்மை விட்டுப் போய் விட்டதே என்று நினைத்து நினைத்து வருத்தப்படுவார்கள்.மேலும் இவர்களின் வாழ்க்கையே சற்று போராட்டமாக மாறி விடும்.

★உத்தியோகம் சார்ந்த வாய்ப்புகள் இவர்களுக்கு ஒரு முறை வரும்போது அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் இல்லை என்றால் இவர்களுக்கு மறுமுறை உத்தியோகம் கிடைக்க காலதாமதம் ஆகும்.

★மேலும் வீடு வண்டி வாகனம் சொத்து உத்தியோகம் போன்ற விஷயங்களைப் பற்றி ஒரு போதும் இந்த ஜாதகர் மற்றவர்களிடம் தூக்கி பேசுவதோ பெருமை பேசுவதோ வைத்துக் கொள்ளவே கூடாது.மீறி பேசினால் இது சார்ந்த அனைத்து விஷயங்களையும் நாம் இழக்க நேரிடும்.

★2.(சனி புதன்)

★சனி புதன் சேர்க்கை ஒரு ஜாதகத்தில் இருந்தால் இவர்களுக்கு புதன் சம்பந்தப்பட்ட  விஷயங்கள் அனைத்தையும் கிடைப்பதற்கு சனி பகவான் காலதாமதப்படுத்தும்.

★மேலும் இவர்கள் என்றைக்குமே தங்களுடைய திறமைகளை வெளியில் தூக்கி பேசக்கூடாது மற்றும் மற்றவர்களிடம் தங்களின் திறமைகளைப் பற்றியோ,தன்னை பற்றியோ புகழ்ந்து பேசகூடாது.
தங்களுக்கு தெரிந்த வித்தைகளை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.

★எவ்வளவுக்கு எவ்வளவு இவர்கள் தங்களின் திறமைகளை பற்றி வெளியில் தூக்கி பேசுகிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு சனி பகவான் இவர்களை தண்டிக்க செய்வார்.

★சனி புதன் சேர்க்கை இருப்பவர்கள் எல்லாம் ஒரு degree முடிப்பதற்குள் 
இவர்களை சனிபகவான் ஒரு பாடாய் படுத்திவிடும்.படிப்பு சார்ந்த விஷயங்களை தாமதப்படுத்தும்.

★என்னதான் புதன் சார்ந்த ஆவணங்களை இவர்கள் முன்கூட்டியே apply செய்தாலும் அது இவர்களுக்கு வருவதற்கு சனி பகவான் காலதாமதம் படுத்துவார்
degree certificate forms,licence forms,
certificates forms,any documentation forms,இது சார்ந்த விஷயங்கள் இவர்களுக்கு கிடைப்பதற்கு சனி பகவான் காலதாமதம்.

★கடன் சீட்டு loan போன்ற விஷயங்கள் இவர்களுக்கு கிடைப்பதற்கும் அதனை வாங்குவதற்கும் apply செய்வதற்கும் சனி பகவான் நம்மை காலதாமதம் செய்ய வைப்பார் .

★3.(சனி, குரு)

★சனி குரு சேர்க்கை ஒரு ஜாதகத்தில் இருந்தால் வருமானத்திற்காகவும்,
பணத்திற்காகவும் நம்மை ஏக்கமடைய வைக்கும்.

★இந்த ஜென்மத்தில் சனி பகவான் நமக்கு பணத்தின் அருமையை புரிய வைப்பார்.அதாவது இவர்கள் என்றைக்கும் தங்களுடைய வருமானத்தைப் பற்றி வெளியில் தூக்கி பேசுவதோ பெருமை பேசுவதோ வைத்துக் கொள்ளக் கூடாது.

★சனி குரு சேர்க்கை இருக்கும் ஜாதகர்களுக்கு எல்லாம் குழந்தைகள் மூலம் கிடைக்கக்கூடிய அங்கீகாரம் மரியாதை அயன சயன போகம் அங்கீகாரம் இது அனைத்தும் கிடைப்பதற்கு சனி பகவான் காலதாமதம் செய்வார் அல்லது கிடைக்காமல் செய்வார்.

★4.(சனி,சுக்கிரன்)

★சனி சுக்கிரன் சேர்க்கை ஒரு ஜாதகத்தில் இருந்தால் இவர்களுக்கு திருமணத்தைத் தாமதப் படுத்தும்.

★இல்லையென்றால் திருமண வாழ்க்கையில் ஒரு பயத்தையும் பாதுகாப்பற்ற ஒரு மனோபாவத்தையும் சனி பகவான் இவர்களுக்கு கொடுத்துவிடுவார்.

★இவர்களுக்கு மனைவி மூலம் கிடைக்கக்கூடிய அயன, சயன, போகம் அங்கீகாரம் ஆதாயம் மரியாதை,உதவிகள் கிடைப்பதற்கு சனி பகவான் காலதாமதம் செய்வார் அல்லது கிடைக்காமல் செய்வார்.
மனைவி மூலம் இவர்களுக்கு எந்த ஒரு பிரயோஜனமும் இல்லாதவாறு சனி பகவான் செய்வார்.

★மேலும் இவர்களுக்கு மனைவியிடம் இருந்து ஒரு பாதுகாப்பற்ற உணர்வும்,மனைவி நம்மை விட்டு பிரிந்து விடுவாளோ என்ற ஒரு தவறான எண்ணத்தையும் சனி பகவான் இவர்களுக்கு உண்டாக்குவார்.

★சனி சுக்கிரன் சேர்க்கை இருப்பவர்கள் என்றைக்குமே தங்களுடைய காதலி பற்றியும் மனைவி பற்றியும் மற்றவர்களிடம் வெளியில் தூக்கி பேசுவதோ பெருமை பேசுவதோ போன்றவைகள் வைத்துக் கொள்ளக் கூடாது.மீறி பேசினால் சனி பகவான் இவர்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்திவிடுவார்.

★5.(சனி, சூரியன்)

★சனி சூரியன் சேர்க்கை யார் யார் ஜாதகத்தில் எல்லாம் இருக்கிறதோ அவர்கள் முன் ஜென்மத்தில் தந்தைக்கு ஒழுங்காக செய்ய வேண்டியதை செய்யவில்லை என்று அர்த்தம்.

★இந்த ஜென்மத்தில் தந்தை மூலம் இவர்களுக்கு கிடைக்கக்கூடிய அயன சயன போகம் அங்கீகாரம் ஆதாயம் உதவிகள் இவற்றையெல்லாம் சனி பகவான் தடுத்து விடுவார்.அல்லது காலதாமதம் செய்வார்.அதன் அருமை பெருமையை நமக்கு புரிய வைப்பார்.

★இவர்கள் என்றைக்கும் தங்களின் தந்தை பற்றியும் தந்தை வழி சொத்தை பற்றியும் யாரிடமும் வெளியில் தூக்கி பேசுவதும் scene போடுவதும் வைத்துக்கொள்ள கூடாது.

★மேலும் இவர்களுக்கு அரசாங்கம் மூலம் கிடைக்கக்கூடிய அங்கீகாரமும் பயனும் இவர்களுக்கு கிடைப்பதற்கு சனி பகவான் காலதாமதம் செய்வார் .

★சனி சூரியன் சேர்க்கை இருக்கும் ஜாதகர்கள் எல்லாம் என்றைக்குமே இவர்கள் அடுத்தவர்களிடம் ஆணவதிலும் அகங்காரதிலும் ஆடவே கூடாது.அடுத்தவர்களை இவர்கள் அதிகாரம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் சனி பகவான் இவர்களுக்கு தகுந்த பாடத்தை புகட்டி விடுவார்.

★6.(சனி, சந்திரன்)

★சனி சந்திரன் சேர்க்கை இருக்கும் ஜாதகர்கள் எல்லாம் வேகமாக இருக்க வேண்டிய இடத்தில் மெதுவாகவும் மெதுவாக நடந்து கொள்ள வேண்டிய இடத்தில் வேகமாகவும் நடந்து கொள்வார்கள்.

★இவர்கள் எங்கு சென்றாலும் இவர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறையும் உணவு பற்றாக்குறையையும் சனி பகவான் ஏற்படுத்திக் கொண்டே இருப்பார்.

★இவர்கள் கையில் எவ்வளவுதான் பணம் இருந்தாலும் இவர்கள் ஆசைப்பட்ட உணவை சாப்பிட முடியாத நிலையை சனி பகவான் உருவாக்குவார்.அதாவது நினைத்த உணவை  அதிகமாக சாப்பிட முடியாது.

★(சனி சந்திரன்) சேர்க்கை யார் யார் ஜாதகத்தில் எல்லாம் இருக்கிறதோ அவர்கள் முன் ஜென்மத்தில் தாய்க்கு ஒழுங்காக செய்ய வேண்டியதை செய்யவில்லை என்று அர்த்தம்.

★இந்த ஜென்மத்தில் தாய் மூலம் இவர்களுக்கு கிடைக்கக்கூடிய அயன சயன போகம் அங்கீகாரம் ஆதாயம் உதவிகள் இவற்றையெல்லாம் சனி பகவான் தடுத்து விடுவார்.அல்லது காலதாமதம் செய்வார்.அதன் அருமை பெருமையை நமக்கு புரிய வைப்பார்.

★ராகு கேதுவுடன் சனி பகவான் இணைந்தால் அதற்கு இந்த சூட்சமம் வேறு மாதிரி வேலை செய்யும்.

★7.(சனி,ராகு)

★யாருடைய ஜாதகத்தில் எல்லாம் சனி ராகு சேர்க்கை இருக்கிறதோ இவர்களால் ஒரு தொழிலை உருப்படியாக செய்ய முடியாது.
இவர்களுடைய வாழ்க்கை முழுவதும் இவர்களால் ஒரு தொழிலை நிரந்தரமாக செய்யவே முடியாது.

★ கடமை கண்ணியம்
கட்டுப்பாடுடனும்,நேர்மையுடனும் வாழ்பவர்கள்.யாரையும் ஏமாற்றி சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இவர்களுக்கு இருக்காது.

★தனக்கு கொடுக்கப்பட்ட வேலை மற்றும் கடமையை முடிக்கும் வரை இவர்களால் தூங்க முடியாது.வாழ்நாள் முழுவதும் தனக்கு கொடுக்கப்பட்ட வேலைகள் கடமைகள் மற்றும் தொழிலில் இருந்து இவர்களால் வெளியே வர அல்லது விடுபடவே முடியாது.

★வாழ்நாள் முழுவதும் இவர்களுக்கு கடமைகள் (commitments),இருந்து கொண்டே இருக்கும்.தொழில் சார்ந்த விஷயத்தில் இவர்களுக்கு ஆசைகள் அதிகமாக இருக்கும்.

★8.(சனி,கேது)

★சனி கேது சேர்க்கை ஒரு ஜாதகத்தில் இருந்தால் இவர்களுக்கு தொழில் செய்ய விருப்பம் இருக்காது வேறு வழியே இல்லாமல் கடனுக்காகவே அல்லது கடமைக்காகவே தொழில் செய்ய வேண்டும் என்று செய்வார்கள்.

★தொழில் சார்ந்து இவர்கள் மற்றவர்களுக்கு என்ன தான் உதவி செய்தாலும் அதற்கான அங்கீகாரமும் மரியாதையும் பலனும் இவர்களுக்கு கிடைக்கவே கிடைக்காது.

★மேற்கொண்ட இந்த சூட்சுமத்தை ஜாதகத்தில் check செய்து பாருங்கள் நான் சொல்வது உங்களுக்கு புரியும்.

★குரு இருக்கும் பாவத்தைப் பற்றியும் குரு பகவானுடன் சேரும் கிரகத்தைப் பற்றியும் அடுத்த பதிவில் பார்க்கலாம்.

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-