பித்ரு தோசம்

பித்ரு தோசம்


தற்போது பித்ரு தோசங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்குக் காரணம் முறையான பித்ரு தர்ப்பணம் மற்றும் பித்ரு வழிபாடுகள் செய்யாததே காரணம்.


பிருகு நந்தி நாடி முறைப்படி ஜாதகத்தில் சூரியனுக்கு 1, 5, 9, 2 இந்த இடங்களில் ராகுவோ கேதுவோ இருந்தால் அது பித்ருதோதோசமாக கருதப்படுகின்றது.

இப்போது சூரியனின் காரகத்துவமாக கடிகாரம், காலண்டர் இவற்றை எடுத்துக்கொள்ளலாம்.


எனவே பித்ருதோசங்கள் இருப்பவர்கள் வீட்டில் பயன்படுத்தாத கடிகாரங்கள்., பழுதடைந்த கடிகாரங்கள்., முறையாக பயன்படுத்தாத காலண்டர்கள்., முறையாக கிழிக்காமல் உள்ள காலண்டர்கள் நிச்சயம் இருக்கும்.


பலரது ஜாதகங்களை ஆய்வு செய்தபோது சூரியன் கேது உள்ளவர்களது வீட்டில் புதியகடிகாரத்தை இயங்கவிடாமல் இவர்களே தடைசெய்து வைத்திருக்கின்றனர்.


சூரியன் ராகு சேர்க்கை உள்ளவர்கள் உடைந்த பழுதடைந்த கடிகாரத்தினை சரிசெய்து பயன்படுத்தலாம் என்று வைத்திருக்கின்றனர்.


சூரியன் கேது புதிய காலண்டர்களை பயன்படுத்தாமல் வைத்திருக்கின்றனர். சிலரது வீட்டில் இரண்டு மூன்று வருட காலண்டர்கள் கூட பயன்படுத்தாமல் வைத்திருக்கின்றனர்.


சூரியன் ராகு சேர்க்கை காலண்டர்களை சரியாக தேதி மாற்றாமல் முறையான பராமரிப்பு இல்லாமல் வைத்திருக்கின்றனர்.


எனவே இவற்றை சரியாக பராமரித்து வரவும். இதை சரிசெய்தபின்னர் ஆத்மார்த்தமாக பித்ரு தர்ப்பணம் மற்றும் பித்ரு வழிபாடுகள் செய்துவந்தால் நிச்சயம் பித்ருதோசம் நிவர்த்தியாகும்.


Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-