புரட்டாசி மாதத்தில் தலை முடி இறக்கம் செய்யலாமா ???

புரட்டாசி மாதத்தில் தலை முடி இறக்கம் செய்யலாமா ??? 

**************************************************************************

அம்மாவாசை & பௌர்ணமியில் முடி இறக்கம் செய்யலாமா ???

**************************************************************************

கூடாதா ??? ஓர் ஆய்வு !!!!!

**************************************** 

குழந்தைக்கு முடி எடுக்கக்கூடாத காலம் : 

************************************************************* 

கிரக நாடி ------ பாடல் எண் -- 172

-

ஆடி , புரட்டாசி , ஐப்பசி , மார்கழி , 

தேடிய ஞாயிறு ,செவ்வாய் , சனி தனில் , 

கூடிய ரோமம் குறைத்திட வல்லிரேல் , 

மாடு , மக்கள் , மைந்தர் , மாள்வீரே --- 

-

பாடல் விளக்கம் : 

******************************

ஆடி , புரட்டாசி , ஐப்பசி , மார்கழி மாதங்களில் , ஞாயிறு , சனி , செவ்வாய் , கிழமைகளில் , குழந்தைக்கு முதல் முடி எடுத்தால் , மாடும் , மக்களும் ,பிள்ளைகளும் இறந்து விடுவார்கள் என்பதாம் --

பொதுவாகவே இந்த கருத்தை தலைச்சன் குழந்தைக்கு , முதல் முடி எடுக்கும்போது பயன்படுத்திக் கொள்ள வேண்டும் -- 2 வது 3 வது குழந்தைக்கும் முதல் முடி எடுக்க இந்த விதிகளையும் பயன் படுத்துங்கள் --- 

-

2 , 3 , வது மொட்டை அடிக்கும்போது இந்த விதிகள் தேவை இல்லை—பொதுவாகவே ஞாயிறு கிழமைகளில் முடி எடுக்க , சுப காரியங்கள் செய்ய தடைகள் உண்டு --- ஆனால் அனுஸ்டானத்தில் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது -- ஆகவே தான் ஞாயிறு கிழமைகளில் சுப முகூர்த்தம் பஞ்சாங்களில் குறிக்கப் பட்டுள்ளது - 

-

இசை ஞானி இளையராஜா அவர்கள் தமிழ் நாட்டில் தற்போது உயிருடன் உள்ள சித்தர்களை பௌர்ணமியில் நேரில் சந்தித்து ஆசி பெற்று , பௌர்ணமியில் மொட்டை போடுவதை வழக்கமாக கொண்டு இருந்தார் -- இதன் பிறகு தான் அவர் சிம்பொனி இசைத்து உலகப்புகழ் பெற்றார்கள் – 

-

எனக்கு தெரிய சில சித்தர்கள் , அம்மாவசை அல்லது பௌர்ணமியில் முக சவரம் அல்லது மொட்டை அடிப்பதை வழக்கமாக கொண்டு வருகிறனர் – 

-

மருத்துவர்கள் அல்லது நாவிதர்கள் நமது ஊர்களில் சனிக்கிழமைகளில் வார விடுமுறையும் , அம்மாவாசைகளில் , மாத விடுமுறைகளும் விடப்படுகின்றனர் – இது ஊருக்கு ஊர் விடுமுறைகள் மாறுபடும் – 

-

மேலும் புரட்டாசி மாதம் என்பது பெருமாள் மாதம் என்பது ஆகும் -- ஆதி காலம் தொட்டே புரட்டாசி சனிக்கிழமைகளில் பழைய சமையல் மண் பாண்டம எடுத்து விட்டு , புதிய சமையல் மண் பாண்டம் வாங்கி ,சமையல் செய்து , இறைவனுக்கு புரட்டாசி 5 சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு தளுகை , படைத்தது , துளசி தீர்த்தம் சாப்பிட்டுவிட்டு , பெருமாள் கோவிலுக்கு சென்று திருக்கோடி தீபம் ஏற்றி , அன்னதானம் செய்யும் வழக்கம் இன்றும்கூட கிராமங்களில் நடைமுறையில் உள்ளது – அன்று மொட்டை போடுவதும் வழக்கத்தில் உள்ளது – 5 வது கடைசி சனிக்கிழமைகளில் சொந்தம் , பந்தம் , உற்றார் , உறவினர்களையும் , அழைத்து அன்னதானம் செய்யும் வழக்கமும் உள்ளது – 

-

மேலும் புரட்டாசி மாதம் என்பது திருப்பதி பெருமாள் மாதம் ஆகும் – சுமார் 1௦௦ வருடங்களுக்கு முன் புரட்டாசி 1 ஆம் தேதி நடைபயணம் செய்து 1௦ நாட்கள் கழித்து பெருமாளை தரிசனம் செய்து மொட்டை போட்டு , பின் நடை பாதையாக வீடு திரும்பி வந்தனர் , 1 மாதம் முழுவதும் பெருமாள் மாதம் ஆக வழிபட்டு வந்தனர் – ஆன்னால் தற்போது கார் , ரயில் , பஸ் , ஏரோப்ப்லேன் , மூலம் திருப்பதி செல்லுகின்றனர் – ஆனாலும் இன்றும்கூட நடை பாதையாக திருப்பதி சென்று தரிசனம் செய்து , பின் பஸ்ஸில் ஏறி திரும்பி ஊருக்கு போகிறாற்கள்.

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-