நில சம்மந்தப்பட்ட தகராறு யாருக்கு ஏற்படும்?

நில சம்மந்தப்பட்ட தகராறு யாருக்கு ஏற்படும்?
--------------------------------------
பிருகு நந்தி நாடி முறையில், கிரக காரகங்களை வைத்துப் பலன் ஆராயப்படுகிறது. 
புதன் = அளவிடப்பட்ட நிலத்தை குறிக்கும்
செவ்வாய் = கரடு, முரடான நிலப்பகுதியை குறிக்கும் 
கேது = சிக்கல்கள், வழக்குகள், தகராறு, பிரிவினை, கருத்துவேறுபாடு போன்றவற்றை ஏற்படுத்தும் கிரகம்
பரஸ்பர எதிரி கிரகங்கள் 
---------------------
# பொதுவாக, ராகு மற்றும் கேது அனைத்து கிரகங்களுக்கும் எதிரி
# சனி, செவ்வாய்
# புதன், செவ்வாய் 
ராசிக்கட்டத்தில் புதன், செவ்வாய் நின்ற ராசிக்கு 1-5-9 அல்லது 2ல் கேது நின்றால், அது புதன் + கேது / செவ்வாய் + கேது சேர்க்கை ஆகும்.
ராசிக்கட்டத்தில் புதன் நின்ற ராசிக்கு 1-5-9 அல்லது 2ல் செவ்வாய் நின்றால், அது செவ்வாய் + புதன் சேர்க்கை ஆகும்.
ராசிக்கட்டத்தில் செவ்வாய் நின்ற ராசிக்கு 1-5-9 அல்லது 2ல் சனி நின்றால், அது  சனி + செவ்வாய் சேர்க்கை ஆகும்.
மேற்கூறிய கிரகங்கள் சேர்க்கை இருப்பின் நிலம் சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு
புதன் + கேது = அளவிடப்பட்ட நிலத்தினால் வழக்குகள்  ஏற்படும். பாகப்பிரிவினை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் 
செவ்வாய் + கேது = சமன்படாத நிலப்பரப்பு பகுதி சம்மந்தப்பட்ட பிரச்சினை / சிக்கல்கள் / வழக்குகள் ஏற்படுதல்
செவ்வாய் + புதன் = நிலம் சம்மந்தப்பட்ட கட்டப்பஞ்சாயத்து போன்ற பிரச்சினை ஏற்படுதல்
சனி + செவ்வாய் = சகோதரர் உறவுமுறையில் பிரச்சினை ஏற்படுதல். பலர் முன்னிலையில் பஞ்சாயத்து ஏற்பட்டு பிரச்சினை உண்டாகுதல்
அதுபோல, 
# செவ்வாய்யானவர்(தந்தை வழி உறவுமுறையை குறிக்கும்) புதனை(தாய் வழி உறவுமுறையை குறிக்கும்) நோக்கி சென்றால்[செவ்வாய் -> புதன்],  தாய் வழி உறவுகளால் தந்தை வழி உறவுகளுக்கு பிரச்சினை
 
# புதனானவர்(தாய் வழி உறவுமுறையை குறிக்கும்) செவ்வாயை(தாய் வழி உறவுமுறையை குறிக்கும்) நோக்கி சென்றால்[புதன் -> செவ்வாய்],  தந்தை வழி உறவுகளால் தாய் வழி உறவுகளுக்கு பிரச்சினை 
 
பரிகாரம் - 
----------
பிள்ளையார் / ஹனுமான் வழிபாடு.
* பிள்ளையாருக்கு அருகம்புல் மாலை 1 மண்டலம் சாற்றுதல் 
* ஹனுமானுக்கு வெற்றிலை மாலை 1 மண்டலம் சாற்றுதல் 
* முருகனுக்கு வேல் சாற்றுதல்.

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-