பிரம்மாண்ட புத்தி யோகம் - பிருகு நந்தி நாடி

பிரம்மாண்ட புத்தி யோகம் - பிருகு நந்தி நாடி 
------------------------------------------------------------------ 
பிருகு நந்தி நாடி முறையில், கிரக காரகங்களை வைத்துப் பலன் ஆராயப்படுகிறது. 
யோகம் என்பது கிரகங்களின் சேர்க்கை / ஒரு கிரகமும் மற்றொரு கிரஹத்திற்கும் உள்ள சேர்க்கையை குறிக்கும். யோகம் என்பது நல்ல பலன்களை மட்டுமே கொடுக்கும் என்று எடுத்துக்கொள்ளல் ஆகாது. 

ராசிக்கட்டத்தில் புதன் நின்ற ராசிக்கு 1-5-9 அல்லது 2ல் ராகு நின்றால், அது புதன் + ராகு சேர்க்கை ஆகும். இதுவே பிரம்மாண்ட புத்தி யோகம் எனப்படும். 

புதன் என்பவர் புத்திகாரகன். 
ராகு என்பவர் பிரம்மாண்ட படுத்துபவர் யோககாரகன், போககாரகன், மாயகாரகன். 

ராகு மற்றும் கேது அனைத்து கிரகங்களுக்கும் எதிரி. 

இரண்டு கிரகங்களின் சேர்க்கை தங்களது குணங்களை பரிமாறிக் கொள்ளும் புதன் + ராகு ஆகிய, இருவருக்கும் பரஸ்பர நாடி தொடர்பு ஏற்பட்டால் கீழ்கண்ட பலன்களை தருகிறார்கள்: - 

1. நல்ல ஞாபகதிறன், புத்திகூர்மை இருக்கும். 
2. பொய் பேசக்கூடியவர். பேசுவதை பிரம்மாண்டப்படுத்தி பேசுவார். 
3. எழுதும் எழுத்தின் அளவு பெரியதாக இருக்கும். 
4. எழுத்து திறமை இருக்கும். 
5. கழுத்து, நெற்றி, தோல், காது போன்றவற்றில் ஏதாவது கோளாறு / பிரச்சனை இருக்கும்.
6. கணிதத்தில் ஆர்வம் இருக்கும், வித்தியாசமாக யோசிப்பார், நகைச்சுவை உணர்வு மிக்கவர். 
7. பிரம்மாண்ட/ பெரிய அளவில் தொழில் செய்வார். 
8. குசும்பு அதிகமாக இருக்கும். 
9. கல்வியில் தடை இருக்கும். 
10. ஆதாயத்துக்காக நட்பாக பழகுதல். 
11. பேச்சில் வார்த்தை ஜாலம் இருக்கும். 
12. மக்கள் தொடர்பு இருக்கும்.

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-