Posts

Showing posts from July, 2018

பிரம்மாண்ட புத்தி யோகம் - பிருகு நந்தி நாடி

பிரம்மாண்ட புத்தி யோகம் - பிருகு நந்தி நாடி  ------------------------------ ------------------------------ ------  பிருகு நந்தி நாடி முறையில், கிரக காரகங்களை வைத்துப் பலன் ஆராயப்படுகிறது.  யோகம் என்பது கிரகங்களின் சேர்க்கை / ஒரு கிரகமும் மற்றொரு கிரஹத்திற்கும் உள்ள சேர்க்கையை குறிக்கும். யோகம் என்பது நல்ல பலன்களை மட்டுமே கொடுக்கும் என்று எடுத்துக்கொள்ளல் ஆகாது.  ராசிக்கட்டத்தில் புதன் நின்ற ராசிக்கு 1-5-9 அல்லது 2ல் ராகு நின்றால், அது புதன் + ராகு சேர்க்கை ஆகும். இதுவே பிரம்மாண்ட புத்தி யோகம் எனப்படும்.  புதன் என்பவர் புத்திகாரகன்.  ராகு என்பவர் பிரம்மாண்ட படுத்துபவர் யோககாரகன், போககாரகன், மாயகாரகன்.  ராகு மற்றும் கேது அனைத்து கிரகங்களுக்கும் எதிரி.  இரண்டு கிரகங்களின் சேர்க்கை தங்களது குணங்களை பரிமாறிக் கொள்ளும் புதன் + ராகு ஆகிய, இருவருக்கும் பரஸ்பர நாடி தொடர்பு ஏற்பட்டால் கீழ்கண்ட பலன்களை தருகிறார்கள்: -  1. நல்ல ஞாபகதிறன், புத்திகூர்மை இருக்கும்.  2. பொய் பேசக்கூடியவர். பேசுவதை பிரம்மாண்டப்படுத்தி பேசுவார்.  3. எழுதும் எழுத்தின்...

கலப்பு எண்ணெய் தீபம்

🌼கலப்பு எண்ணெய் தீபம் 🌼கலப்பு எண்ணெய் தீபம் - 🌼 தீமையும் நன்மையும் 🌼1, ஐந்து எண்ணெய். மூன்று எண்ணெய் கூட்டி விளக்கேற்றினால் நல்லது என்று வரும் செய்திகளை நம்பி அப்படியே தவறு செய்யும் அப்பாவி மக்கள் கவனத்திற்கு அறிக,              🌼எப்பொழுதுமே ஒரு எண்ணெய்யுடன் இன்னொரு எண்ணெய் சேர்ந்து எரியக்கூடாது  🌼அதர்வன  மாந்திரிகத்தில் அசுப நிகழ்வுகளை தன் விரோதிக்கு ஏற்படுத்த தந்திரமாக கையாண்ட முறைதான் கூட்டு எண்ணெய் தீப வழிபாடாகும் . அதே போல் தன் குறைதீரவும். கடுமையான பிரச்சினைகள் விலகவும் பல எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றும் வழக்கமும் இருந்தது, இந்த வழக்கம்தான் இன்று தவறாக கையாளப்படுகிறது,  🌼விளக்கமாக அறிவீராக,  🌼பௌர்ணமி கழித்து வரும் அஷ்டமி தேய்பிறை அஷ்டமி என்று அனைவருக்கும் தெரிந்ததுதான், இந்த அஷ்டமி கார்த்திகை மாதத்தில் வரும் போது பஞ்ச எண்ணெய் தீபம் கால பைரவருக்கு ஏற்ற வேண்டும்,  🌼இதற்கு பஞ்ச (5) தீபம் என்று பெயர், 5 வகை எண்ணெய் கொண்டு ஏற்றப்பட வேண்டும், 5 தனி தனி அகல் எடுத்துக் கொண்டு ஒரு அகலில் நல்லெண்ணெய். இன்னொரு அகலில் இலுப்ப எண்...

குப்பைமேனி

குப்பைமேனி...... மூலிகைகள் என்றால் ஏதோ பெரிய மலைக்காடுகளில் காணப்படுவது என பலர் நினைக்கலாம். மலைக்காடுகளிலும் மூலிகைகள் வளர்கின்றன. அதேபோல் நம் வீட்டருகே, சாலை ஓரங்களிலும், வீதிகளிலும், தோட்டங்களிலும் வயல் வரப்புகளிலும் ஏராளமன மூலிகைகள் வளர்கின்றன. நாம் களைகள் என்று ஒதுக்கும் புல், பூண்டு, செடி, கொடிகள் அனைத்தும் மாபெரும் மருத்துவத் தன்மை கொண்டவை. மூலிகைகள் ஒவ்வொன்றுக்கும் தனித் தன்மையான மருத்துவக் குணங்கள் உள்ளன. அவற்றில் கற்ப மூலிகைகள் என பல மூலிகைகள் உள்ளன. அதில் குப்பைமேனியும் ஒன்று. குப்பைமேனி பூண்டு இனத்தைச் சார்ந்தது. இவை தோட்டங்களிலும், சாலை ஓரங்களிலும் வளர்ந்திருப்பதைக் காணலாம். இது இந்தியா முழுவதும் வளரும் செடியாகும். குப்பைமேனியை மார்ஜலமோகினி என வடமொழி நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் தமிழில் கூறப்பட்டது போல் குப்பைமேனியின் மருத்துவப் பயன்கள் குறிப்பிடப்படவில்லை.மாற்றடுக்கில் அமைந்த பல அளவுகளில் உள்ள இலைகளையும், இலைக்காம்பு இடுக்கிலமைந்த பூக்களையும் கொண்டது. இதற்கு அரி மஞ்சரி, பூனைவணங்கி, மேனி என்ற பல பெயர்கள் உண்டு. Tamil - Kuppaimeni English - Indian acalypha Telug...

காரிய சித்தி நட்சத்திர சூட்சுமம்

காரிய சித்தி நட்சத்திர சூட்சுமம்  =================================== உங்கள் நட்சத்திரத்தில் இருந்து எண்ணி 4 ,13 , 22 வது நட்சத்திரத்தில் பிறந்த பெரியவர்களின் காலில் விழுந்து அல்லது நல்வார்த்தைகள் பெற்று எதாவது புதிய காரியங்கள் செய்ய கிளம்பினால், அந்த காரியம் வெற்றி பெறும். உதாரணமாக, உங்கள் ஜென்ம நட்சத்திரம் பூரம் எனில் அதன்  4 ,13 , 22 வது நட்சத்திரங்கள் முறையே சித்திரை, அவிட்டம் அல்லது மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்த பெரியவர்களிடம் ஆசி பெறுதல் காரிய சித்தி கொடுக்கும். காரிய சித்தி தரும் நட்சத்திரங்கள் ===================================  அஸ்வினி, மூலம், மகம் - ரோகினி, அஸ்தம், திருவோணம்  பரணி, பூராடம், பூரம் - மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் கார்த்திகை, உத்திரம், உத்ராடம்   - திருவாதிரை, ஸ்வாதி, சதயம்  ரோகினி, அஸ்தம், திருவோணம்  - புனர்பூசம், விசாகம், பூரட்டாதி மிருகசீரிடம், அவிட்டம், சித்திரை - பூசம், அனுஷம், உத்திரட்டாதி திருவாதிரை, சதயம், ஸ்வாதி   - ஆயில்யம், கேட்டை, ரேவதி புனர்பூசம், விசாகம், பூரட்டாதி  - மகம், மூலம், அஸ்வின...

நில சம்மந்தப்பட்ட தகராறு யாருக்கு ஏற்படும்?

நில சம்மந்தப்பட்ட தகராறு யாருக்கு ஏற்படும்? -------------------------------------- பிருகு நந்தி நாடி முறையில், கிரக காரகங்களை வைத்துப் பலன் ஆராயப்படுகிறது.  புதன் = அளவிடப்பட்ட நிலத்தை குறிக்கும் செவ்வாய் = கரடு, முரடான நிலப்பகுதியை குறிக்கும்  கேது = சிக்கல்கள், வழக்குகள், தகராறு, பிரிவினை, கருத்துவேறுபாடு போன்றவற்றை ஏற்படுத்தும் கிரகம் பரஸ்பர எதிரி கிரகங்கள்  --------------------- # பொதுவாக, ராகு மற்றும் கேது அனைத்து கிரகங்களுக்கும் எதிரி # சனி, செவ்வாய் # புதன், செவ்வாய்  ராசிக்கட்டத்தில் புதன், செவ்வாய் நின்ற ராசிக்கு 1-5-9 அல்லது 2ல் கேது நின்றால், அது புதன் + கேது / செவ்வாய் + கேது சேர்க்கை ஆகும். ராசிக்கட்டத்தில் புதன் நின்ற ராசிக்கு 1-5-9 அல்லது 2ல் செவ்வாய் நின்றால், அது செவ்வாய் + புதன் சேர்க்கை ஆகும். ராசிக்கட்டத்தில் செவ்வாய் நின்ற ராசிக்கு 1-5-9 அல்லது 2ல் சனி நின்றால், அது  சனி + செவ்வாய் சேர்க்கை ஆகும். மேற்கூறிய கிரகங்கள் சேர்க்கை இருப்பின் நிலம் சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு புதன் + கேது = அளவிடப்பட்ட நிலத்தினால் வழக்குகள்...

பெயர் ரகசியம்

வெற்றி பெற வைக்கும் பெயரை ரகசியம்  ============================================= உங்கள் நட்சத்திரத்தில் இருந்து 4 , 13 , 22 வது நட்சத்திரத்தில் பிறந்த மஹான் அல்லது அந்த நட்சத்திரத்தின் அதிதேவதை பெயரை இணைத்து கொள்வது உங்களுக்கு காரிய சித்தி அளிக்கும். உதாரணமாக ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர் எனில் அவரது நான்காவது நட்சத்திரமான கார்த்திகையின் அதிதேவதை அக்னி. அக்னியின் இன்னொரு பெயர் தனஞ்சயா, சுஷ்மா அல்லது வாணி என்பதாகும். இந்த பெயர்களை தனது இயற்பெயருடன் இணைப்பதால் அல்லது இதே பெயரை தனது பெயராக கொண்டால் காரிய சித்தி பெறலாம் அல்லது கார்த்திகை குறிக்கும் கார்த்திக் அல்லது கார்த்திகா என்ற பெயரை கூட வைத்து கொள்ளலாம். நட்சத்திரம் தேவதைகள்  =========================== அசுவினி - கலைவாணி  பரணி  - துர்கை கார்த்திகை  - அக்னி ரோகிணி  - பிரம்மா மிருகசீரிடம் - சோமன்  திருவாதிரை - சிவன்  புனர்பூசம் - அதிதி (தேவ மாதா)  பூசம் - பிரகஸ்பதி (குரு) ஆயில்யம்  - ஆதிசேஷன் மகம் - லட்சுமி / லலிதா  பூரம் - பார்வதி உத்திரம் - சூரியன் அஸ்தம் - அய்யப்பன்  சித்தி...