பரிகாரம் !!!

பரிகாரம் !!!
மிக சக்தி வாய்ந்த மிக சுலபமான இந்த பரிகாரம். இதை வாரம் ஒரு முறை செய்யலாம். நல்ல பலன் தெரியும்-நாள், கிழமை,திசை போன்ற எதுவும் பார்க்க தேவை இல்லை. தாந்த்ரீக முறைப்படி சில காரணங்கள் இருப்பினும் அறிவியல் ரீதியாகவும் இதன் பலன் நிச்சயம்.
ஆகவே செய்து பலன் அடையுங்கள். மேலும் இவை மேலை நாடுகளில் தங்கள் உடலில் புகுந்துள்ள தீய சக்திகள், மற்றவர் கண் பார்வையால் நமக்கு ஏற்படும் அசதி, காரியத்தடை துரதிர்ஷ்டம் போன்றவைகளை போக்க உபயோகிப்பது வழக்கம்.
டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ் எனப்படும் பெரிய மளிகை கடைகளில் சைனீஸ் வினீகர் அல்லது ரைஸ் வினீகர் என கேட்டு வாங்கவும். அதை ஒரு பாத்திரத்தில் / வாணலியில் இட்டு நன்கு கொதித்து புகை வர ஆரம்பித்ததும் அந்த புகையை வீட்டின் / வியாபார இடத்தின் அனைத்து மூலைகளில் அறை முழுதும் காட்டி விட்டு பின்பு அந்த அறைகளில் ஒரு நல்லெண்ணெய் விளக்கேற்றி வைத்து அதில் ஒரு டையமன்ட் கற்கண்டு மற்றும் கிராம்பு போட்டு வைக்கவும்.உங்களுக்கு நல்லனவற்றை அளிக்கும் படி பிரபஞ்சத்தை வேண்டி கொள்ளவும்.
பின்பு தீபம் எறிந்து முடிந்ததும், விளக்குகளை எடுத்து வைத்து விடலாம்-அவ்வளவே. செய்த நாள் இரவு கொதிக்கும் நீரில் ரைஸ் வினீகர் விட்டு அந்த புகையை சுவாசித்து கொண்டே குளிக்கவும்.
இந்த முறை உங்கள் உடல் மற்றும் நீங்கள் இருக்கும் வீடு-இரண்டிலுமே உள்ள தீய மற்றும் எதிர் மறை சக்திகளை விரட்டும்-வாரம் ஒரு முறை கூட செய்யலாம். செய்து பயன் அடையுங்கள்.

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-