புனர்பூ தோஷம் :
புனர்பூ தோஷம் :
_________________
_________________
புனர்பூ தோஷம் என்பது ஒரு அவயோகமாகும். ஒரு பெண்ணுக்கும், பையனுக்கும் பொருத்தம் பார்த்து, திருமணம் முடிவாகி வரும் வேளையில் மாப்பிள்ளை வீட்டாரோ, பெண் வீட்டாரோ திடீரென வேறு இடத்தில் திருமணம் பேசி திருமணத்தை முடித்து விடுவர். சிலர் காதலை வீட்டில் சொல்லாமல் வைத்திருந்து திருமண தேதி நிச்சயமாகும் நேரத்தில் பெண்ணோ, மாப்பிள்ளையோ தான் ஏற்கனவே காதலித்த பெண்ணையோ, பையனையோ திடீரென திருமணம் செய்து கொள்வர். இதனால் பெண்ணோ, மாப்பிள்ளையோ பாதிக்கப்படுவர்.
சந்திரன், சனி போன்ற கிரகங்களின் பொருந்தாத சேர்க்கையால் இது போல பாதிப்பான விஷயங்கள் நடந்து விடுகிறது. இதை ஜாதக ரீதியாக புனர்பூ தோஷம் என்று சொல்வார்கள்.
உங்கள் சுய ஜாதகத்தில் புனர்பூ தோஷம் உள்ளதா என தகுந்த ஜோதிடரை கலந்து ஆலோசித்தால் தெரிய வரும்.
இதற்கு குலதெய்வத்திற்கு விரதம் இருந்து – முடிகாணிக்கை, படையல் செலுத்தி வழிபாடு செய்யலாம். தொடர்ச்சியாக மூன்று பௌர்ணமி தினங்களில் விரதம் இருந்து திருவண்ணாமலை கிரிவலம் சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்து மும்மூன்று முறையாக ஒன்பது துறவிகளுக்கு வஸ்திர தானம் செய்து வந்தால், உடனடியாக பொருத்தமான வரன் அமையும்.
தோஷ விதிவிலக்கு :
சனி, சந்திரன் இடையே சூரியன் சேர்க்கை பெற்றாலும், சனி, சந்திரனை சூரியன் தன் பார்வையில் வைத்திருந்தாலும் தோஷ நிவர்த்தி ஆகும், நன்றி
Comments
Post a Comment