Posts

Showing posts from July, 2016

திருவிளக்கு பூஜையும் அதன் பலன்களும் -

திருவிளக்கு பூஜையும் அதன் பலன்களும் - மங்கலப் பொருளாம் விளக்கிதுவே மாதர் ஏற்றும் விளக்கிதுவே விளக்கில் ஏற்றும் ஜோதியினால் விளங்காப் பொருளும் துலங்கிடுமே விளக...

புண்ணியம் வேண்டுமா?

Image
புண்ணியம் வேண்டுமா? ஒரு நல்ல காரியத்துக்கு உதவி செய்வது புண்ணியம். கோவில் கும்பாபிஷேகம், திருப்பணி போன்ற காரியங்களுக்கு நம்மால் என்ன கொடுக்க முடியுமோ அதைக் கொடுத்து, புண்ணியத்தை சம்பாதித்துக் கொள்ள வேண்டும். உன்னுடைய தர்மமாக, ஒரு செங்கல் கொடுத்தாலும், அந்த செங்கல், அந்த ஆலயத்தில், எத்தனை வருஷங்கள் உள்ளதோ, அத்தனை ஆயிரம் வருஷங்கள் கைலாசத்திலோ, வைகுண்டத்திலோ வாசம் செய்யலாம். ஒரு ஏழையின் கல்யாணத்துக்கு உதவுவதும், சிவபூஜை செய்யும் ஒருவருக்கு பூஜைக்கு வேண்டிய பூவோ, பழமோ, கற்பூரமோ ஏ தாவது ஒன்றை கொடுத்தாலும் புண்ணியம் உண்டாகும். ஒரு அந்தணர், தெருவில் எதையோ தேடிக் கொண்டிருந்தார். அவர் நெடுநேரம் தேடுவதைப் பார்த்த ஒருவர், ஐயா... என்ன தேடுகிறீர்கள்? என்று கேட்டார். சிவ பூஜைக்கு, வாழைப்பழம் வாங்குவதற்காக, ஓரணா வைத்திருந்தேன். அது கீழே விழுந்து விட்டது. அதைத்தேடிக் கொண்டிருக்கிறேன்... என்றார். பரவாயில்லை பூஜைக்கும் நாழியாகிவிட்டது; நான் ஓரணா தருகிறேன். வாழைப்பழம் வாங்கி, பூஜையை முடித்துக் கொள்ளுங்கள்...என்று சொல்லி, ஓரணாவைக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார். (அந்தக் காலத்தில் ஓரணாவுக்கு நாலு...

நட்சத்திர தாரா பலன் நட்சத்திர தசா & புத்தி காட்டும் அட்டவணை.

Image
அசுவினி மகம் மூலம் இவற்றில் பிறந்தவர்களுக்கான நட்சத்திர தாரா பலன் நட்சத்திர தசா & புத்தி காட்டும் அட்டவணை. அசுவினியில் பிறந்த ஒருவருக்கு தற்போது சந்திர தசாவில் சுக்ர புத்தி என்றால் அது ரோகிணி நட்சத்திர ஷேமத்தாரா பலன் கொடுக்கும் , பூரம் நட்சத்திர சம்பத் தாரா பலன் கொண்ட சுக்ர புத்தி என்று எடுத்துக்கொள்ள வேண்டும். மகத்தில் பிறந்த ஒருவருக்கு தற்போது சூரிய தசா என்றால் அது உத்ர நட்சத்திர விபத் தாரா பலன் கொடுக்கும் சூரிய தசா என்று எடுத்துக்கொள்ள வேண்டும். அதே சூரிய தசாவில் சந்திர ப ுத்தி என்றால் அது ஷேமத்தாரை பலன் கொடுக்கும் ஹஸ்த நட்சத்திர சந்திர புத்தி என்று எடுத்துக்கொள்ள வேண்டும். மூலத்தில் பிறந்த ஒருவருக்கு சுக்ர தசா என்றால் அது சம்பத் தாரா பலன் கொடுக்கும் பூராட நட்சத்திர சுக்ர தசா என்று எடுத்துக்கொள்ள வேண்டும். அதே சுக்ர தசாவில் ராகு புத்தி என்றால் அது சாதக தாரா பலன் கொடுக்கும் சதயம் நட்சத்திர ராகு புத்தி என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.