பயண சாஸ்திரம் :
பயண சாஸ்திரம் : பயணத்தின் போது நட்சத்திரங்கள் திதிகள் கிழமைகள் இவற்றில் ஏற்படக் கூடிய அமைப்புகளை கொண்டு நல்ல நேரத்தை கணித்து பயணத்தை சரியான திசையில் மேற்கொள்ள அந்த பயணம் வெற்றி அடையும் என முகூர்த்த நூல்கள் சொல்கின்றன. அவற்றில் ஒன்று யோகினி நிற்கும் நிலையாகும்... கால விதான பத்ததி/மாலை எனும் நூலில்...யோகினி நிற்கும் நிலையை திதி சூலம் என்ற தலைப்பில் கூறுகிறார்கள். பிரதமை -நவமி திதிகளில் ....கிழக்கே சூலம் த்விதியை - தசமி திதிகளில் ..வடக்கே சூலம் த்ருதியை- ஏகாதசி திதிகளில்..தென் கிழக்கில் சூலம் சதுர்த்தி-துவாதசி திதிகளில்..தென் மேற்கில் சூலம் பஞ்சமி- திரயோதசி திதிகளில்..தெற்கே சூலம். சஷ்டி- சதுர்தசி திதிகளில்..மேற்கில் சூலம் எனவும்...சூலம்உள்ள திசையில் பயணம் செய்வது சுபம்அல்ல ..தீமை ஏற்படலாம் என சொல்லுகிறார்கள். இதில் வட கிழக்கு, வட மேற்கு திசைகளுக்கான சூல திதிகள் சொல்லப்படவில்லை..அதாவது சப்தமி அட்டமி அமாவாசை பௌர்ணமி திதிகளுக்கான சூலங்கள் சொல்லப்படவில்லை. கிழமைகளைகளை கொண்டு சூலம் சொல்வதை போல....திதிகளை கொண்டு யோகினியை நிலையை கூறுகிறோம்...இது சம்பந்தமாக முகூர்த்த...