இறந்தவர் பொருள்கள் உபயோகிக்கலாமா :-

இறந்தவர் பொருள்கள் உபயோகிக்கலாமா சோதிட ஆய்வு..!

ஆத்மா எனும் சூரியன் தன் கர்மத்துக்கு ஏற்ப உடல் எனும் சந்திரனை தேர்ந்தெடுத்து முன் ஜென்மங்களில் தான் சேர்த்த கர்மத்தின் பலன்களை அனுபவிக்கிறது, உடல் எனும் சந்திரன் உள்ளே பஞ்ச பூதங்களும் அடங்குகிறது, நவ கிரகங்களும் பஞ்சபூதத்தின் வழியே மனிதனின் உடலில் ஆளுமை செலுத்துகிறது, ஒருவரின் உடல் எனும் சந்திரன் வாழும் வரை அவர் அந்த உடலை மறைக்க/அலங்கரிக்க/அந்த உடல் உபயோகிக்க சில பல பொருள்களை சேர்க்கிறார், அவரின் கர்ம பயணம் முடிவுற்றதும் உடல் எனும் சந்தரனில் இருந்து ஆத்மா எனும் சூரியன் பிரிக்கிறான், பின்னர் ஒன்றன்பின் ஒன்றாக பஞ்சபூதங்களும் நவகிரகங்களும் வெளியேறிவிடுகிறது, அவ்வாறு வெளியேறிய பின்னர் அந்த உடல் சனியின் காரகத்தில் ஐக்கியம் அடைகிறது..!

இவ்வாறு ஐக்கியம் அடைந்த உடல் பயன்படுத்திய பொருள்களை எக்காரணம் கொண்டும் வேறு ஒருவர் பயன்படுத்த கூடாது, அவ்வாறான பொருள்கள் அந்த உடலுக்கு செய்ய வேண்டிய ஒரு வருட காரியங்கள் நிறைவு பெற்றதும் எரியூட்டபட (தீயில்) வேண்டும், அவ்வாறு செய்யவில்லை எனில் அந்த உடல் உபயோகித்த பொருளில் அந்த நபரின் ஆசைகள் அடங்கியிருப்பதன் காரணத்தால் அந்த பொருளுக்கு ஆமானுஷ்ய சக்திகள் புகும் வாய்ப்புகளை தந்துவிடும், அதாவது சனியிடம் சேர்ந்த அந்த உடலின் பொருளில் ராகு குடிக்கொள்வார், அந்த நபரின் ஆசைகளை இவரே பறைசாற்றுகிறார், பொதுவாக இந்த ஆசைகள் கண்ணுக்கு தரியாத வடிவில் (ராகு) ஒரு அதிர்வலைகளை உமிழ்ந்துகொண்டே இருக்கும், இந்த அதிர்வலைகள் ஜனன ஜாதகத்தில் சந்திரன் அல்லது புதன் பாதிக்கபட்டவரை எளிதில் தாக்கும், மேலும் ராகு 8 ல் சந்திரனுடன் இணைந்து அல்லது கிரகண தோஷத்தில் இருந்தால் இது மேலும் வலிமை பெரும், மேலும் 8/12 ல் ராகு+சந்திரன்/ராகு+புதன்/ராகு+சனி கிரகண தோஷத்தில் நின்றாலும் இந்த தாக்கம் இருக்கும், மேலும் சனி+மாந்தி/ சந்திரன்+மாந்தி/புதன்+மாந்தி இருந்தாலும் இந்த தாக்கத்தை உணர இயலும், பொதுவாகவே இந்த மாதிரி அதிர்வலைகள் உணர்பவர்கள் வாழும் வீட்டை ஆராய்ந்தால் அதன் காரணம் பிடிபடும்,  இதனால் அந்த பொருள்களை உபயோகிப்பவர்கள் இந்த அதிர்வலையால் ஆட்கொள்ளபட்டு இறந்தவரின் ஆசை மற்றும் குணாதிசயத்தை உணர்வார்கள், இதனால் தான் இறந்தவரின் பொருள்களை வீட்டில் வைத்திருக்க கூடாது என்கிறார்கள், உடனே சில அதிபுத்திசாலிகள் இறந்தவர் வாழ்ந்த வீடும்/வாகனமும் ஒரு பொருள் தானே அதனை என்ன செய்வது என்று கேள்வி எழுப்புவார்கள், இங்கே ஒரு விஷயத்தை சரியாக புரிந்து கொள்ள வேண்டும், இறந்தவர் வாழ்ந்த வீட்டை புதுபித்து+ஹோமம் செய்து உபயோகிக்கலாம் இதனை கண்டிப்பாக இறந்தவரின் வருட காரியம் முடிந்தவுடன் செய்ய வேண்டும், அதே போல் வாகனத்தை நன்றாக சுத்தம் செய்து பூஜை போட்டு உபயோகிக்கலாம் இதன் வழியே அவரின் அதிர்வலைகள் வெளியேற்றபடும், ஆனால் அவர் உபயோகித்த துணி/ஆபரணம்/அலங்கார பொருள்கள் என்றும் உடலோடு ஒன்றிய பொருள்களை இவ்வாறு பயன்படுத்த இயலாது அல்லது கூடாது, ஏனெனில் அதில் அவரது அதிர்வலைகள் நிரம்பி இருக்கும் அதனை வெளியேற்ற இயலாது என்பதை புரிந்து கொள்வது நலம், மேலும் அகால மரணம் அதாவது குறைந்த வயதில் மரணம் அடைவது/கல்யாணம் ஆகாமல் மரணம் அடைவது/விபத்து/நோய்/தற்கொலை போன்றவற்றில் மரணம் அடைவது, போன்ற துர் மரணங்களுக்கு என்று சில கூடுதல் பூஜை வழிமுறைகள் சாஸ்திரத்தில் கூறபட்டுள்ளது அவைகளை கடைபிடித்து மேற்கொள்ள வேண்டும், அகால மரணம் அடைந்தவர் பொருள்களில் அவரின் அதிர்வலைகள் 100% அதிகமாக இருக்கும், ஆகவே அதன் சக்தி அதிகம் என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன், இவ்வாறான மரணம் அடைந்தவர் பொருள்களை நிச்சயம் அழிக்க வேண்டும.

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-