இறந்தவர் பொருள்கள் உபயோகிக்கலாமா :-
இறந்தவர் பொருள்கள் உபயோகிக்கலாமா சோதிட ஆய்வு..! ஆத்மா எனும் சூரியன் தன் கர்மத்துக்கு ஏற்ப உடல் எனும் சந்திரனை தேர்ந்தெடுத்து முன் ஜென்மங்களில் தான் சேர்த்த கர்மத்தின் பலன்களை அனுபவிக்கிறது, உடல் எனும் சந்திரன் உள்ளே பஞ்ச பூதங்களும் அடங்குகிறது, நவ கிரகங்களும் பஞ்சபூதத்தின் வழியே மனிதனின் உடலில் ஆளுமை செலுத்துகிறது, ஒருவரின் உடல் எனும் சந்திரன் வாழும் வரை அவர் அந்த உடலை மறைக்க/அலங்கரிக்க/அந்த உடல் உபயோகிக்க சில பல பொருள்களை சேர்க்கிறார், அவரின் கர்ம பயணம் முடிவுற்றதும் உடல் எனும் சந்தரனில் இருந்து ஆத்மா எனும் சூரியன் பிரிக்கிறான், பின்னர் ஒன்றன்பின் ஒன்றாக பஞ்சபூதங்களும் நவகிரகங்களும் வெளியேறிவிடுகிறது, அவ்வாறு வெளியேறிய பின்னர் அந்த உடல் சனியின் காரகத்தில் ஐக்கியம் அடைகிறது..! இவ்வாறு ஐக்கியம் அடைந்த உடல் பயன்படுத்திய பொருள்களை எக்காரணம் கொண்டும் வேறு ஒருவர் பயன்படுத்த கூடாது, அவ்வாறான பொருள்கள் அந்த உடலுக்கு செய்ய வேண்டிய ஒரு வருட காரியங்கள் நிறைவு பெற்றதும் எரியூட்டபட (தீயில்) வேண்டும், அவ்வாறு செய்யவில்லை எனில் அந்த உடல் உபயோகித்த பொருளில் அந்த நபரின் ஆசைகள் அடங்கியிருப்பதன் காரணத்த...