விளக்கெண்ணெய் தயாரிப்பு :-
*விளக்கெண்ணெய் தயாரிப்பு : பாரம்பரிய முறைப்படி அதன் பயன்களும் விளக்கெண்ணெய் விஷமா ? அம்ருதமா ? விளக்கெண்ணெய் உள்பிரயோகம் விஷமா ? அம்ருதமா ? நவீன உலகம் ஆமணக்கு விதையை உலகத்தில் மிக சிறந்த விஷம் உள்ள விதையாக அறிவிக்கிறது. அதில் ரெசின் என்கிற விஷம் – முழு விதை வடிவில் எடுத்து கொண்டால் மரணத்தை கூட வர வைக்கும் என்று பயமுறுத்துகிறது. ஆனால் அந்த விதையில் இருந்து தயாரிக்கபடுகிற எண்ணையை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கழகம் (The Food and Drung Administration - FDA), `விளக்கெண்ணெய் பொதுவாகப் பாதுகாப்பானது’ (GRAS - Grossly recognized as Safe) எனச் சான்று தந்துள்ளது. பின்னர் விளகெண்ணையில் எது விஷம் ? எது அம்ருதம் ? இன்றைய நவீன விஞ்ஞான அறிவியல் படி ஆமணக்கு விதையை இயந்திரங்கள் மூலம் அழுத்தி பிழியும் முறை எந்த அளவுக்கு உள்ளே பயன்படுத்த தகுந்தது என்று சொல்ல முடியாது –பல Toxic விஷ சத்துக்கள் அதிலே இருக்கவும் வாய்ப்புகள் உள்ளது –இந்த வகையில் தயாரிக்கபடும் விளக்கெண்ணெய் வெளி பிரயோகத்திற்கு வேண்டுமானால் பாதுகாப்பானதாக இருக்கலாம் –உள்ளே பயன் படுத்து பற்றி நாம் தான் முடிவு செய்து கொள்ள வேண்டும...