ஆலயங்களில்_நாதசுரம்_வாசிக்கவேண்டியமுறைகள் :-
காலைச்சந்தி, உச்சிக்காலம் முதலிய கால பூஜைகள் நடக்கும் பொழுது, அந்தந்தத் தல நியமப்படிக் குறிப்பிட்ட நேரத்தில் கீழே குறிப்பிட்ட ராகங்களில் அமைந்த பாடல்களையும், காலபூஜை முடிவில் கற்பூர தீபாராதனையின்போது, தேவாரம், திருப்புகழ் முதலியவற்றையும் இசைக்க வேண்டும். இரவு அர்த்தஜாம பூஜையில், ஆனந்தபைரவி, நீலாம்பரி, கேதாரகெளளை, புன்னாகவராளி ஆகிய ராகங்களை இசைக்க வேண்டும். பூஜை முடிந்து பள்ளியறைக் கதவு சாத்தியதும், பள்ளியறைக் கதவுப் பாட்டை இசைக்க வேண்டும். (கூடவே வாய்ப்பாட்டும் பாடலாம்)
#காலை 4.00 - 6.00 : பூபாளம், பெளளி, மலயமாருதம், வலஜி, நாதநாமக்கிரியா, மாயாமாளவ கெளளை.
#காலை 6.00 - 8.00 : பிலஹரி, கேதாரம், கெளளிபந்து, ஜகன்மோஹினி, சுத்த தன்யாசி.
#காலை 8.00 - 10.00 : தன்யாஸி, அஸாவேரி, ஸாவேரி, ஆரபி, தேவகாந்தாரி, தேவமனோஹரி.
#காலை 10.00 - 12.00 : ஸுருட்டி, ஸ்ரீராகம், மத்தியமாவதி, மணிரங்கு, பிருந்தாவன ஸாரங்கா, தர்பார்.
#பகல் 12.00 - 2.00 : சுத்த பங்காளா, பூர்ண சந்திரிகா, கோகில திலகம், முகாரி, கெளடமல்ஹாரி.
#பகல் 2.00 - 4.00 நாட்டைக்குறிஞ்சி, உஸேனி, ரவிச்சந்திரிகா, வர்த்தனி, ஹம்ஸானந்தி, மந்தாரி.
#மாலை 4.00 - 6.00 பூர்வி கல்யாணி, பந்துவராளி, வஸந்தா, லலிதா, ஸரஸ்வதி, சீலாங்கி, கல்யாணி.
#மாலை 6.00 - 8.00 சங்கராபரணம், பைரவி, கரஹரப்பிரியா, நாராயணி, ஹம்ஸத்வனி. கெளளை.
#இரவு 8.00 - 10.00 காம்போதி, ஷண்முகப்ரியா, தோடி, நடபைரவி, ஹரிகாம்போதி, கமாஸ், ரஞ்ஜனி.
#இரவு 10.00 - 12.00 ஸிம்மேந்திர மத்யமம், சாருகேசி, கீரவாணி, ரீதி கெளளை, ஆனந்தபைரவி, நீலாம்பரி, யதுகுலகாம்போதி.
#இரவு 12.00 - 2.00 அடாணா, கேதார கெளளை, பேகடா, ஸாமா, வராளி, தர்மாவதி.
#இரவு 2.00 - #அதிகாலை 4.00 ஹேமாவதி, ஹிந்தோளம், கர்நாடக தேவகாந்தாரி, தசாவளி, பாகேஸ்வரி, மோஹனம்.
[மதியம் 12:00 முதல் 04:00 மணி வரையும், இரவு 09:00 மணிக்கும் நடைசாத்தும் வழக்கம் இருந்தாலும், விழாக்காலங்களில் கோயிலை விட்டு சுவாமி / அம்பாள் உற்சவர் வடிவில் பரிவாரங்களுடன் வீதியுலா வரும்போது, விழாக்கால நடைமுறைகள் (Festival mode) அனுசரிக்கப்படும் போது இந்த அட்டவணை தானாகவே வழக்கத்திற்கு வந்துவிடும்.]
விழாக்கால வீதிஉலாக்களில் கோயிலின் உள்ளும், வெளியிலும் மங்கள வாத்தியங்கள் இசைக்கவேண்டிய முறைகள் :
#மண்டகப்படி_தீபாராதனை :
1. தளிகை எடுத்துவர - மிஸ்ர மல்லாரி
2. தீபாரதனை நேரம் - தேவாரம், திருப்புகழ்.
#புறப்பாடு :
1. புறப்பாட்டிற்கு முன் - நாட்டை
2. புறப்பாடு ஆனதும் - யாகசாலைவரை - திருபுடைதாளம் தவிர, மற்றத் தாளங்களில் அமைந்த மல்லாரிகள்.
யாகசாலை தீபாராதனை நேரம் - ஒத்து, நாதசுரம், மிருதங்கம் மாத்திரம்.
யாகசாலை முதல் கோபுரவாயில் வரை - திருபுடைதாள மல்லாரி.
கோபுரவாயில் முதல் தேரடிவரை - இதர மல்லாரிகளும் வர்ணங்களும்.
தேரடியிலிருந்து தெற்கு ரதவீதி பாதி வரை - ராகம்.
தெற்கு ரதவீதி பாதி முதல் மேல ரதவீதி பாதி வரை - ராகம், பல்லவி.
மேல ரதவீதி பாதி முதல் ஈசான்ய மூலை வரை - கீர்த்தனைகள்.
ஈசான்ய மூலை முதல் தேரடி வரை - தேவாரம், திருப்புகழ்.
தேரடி முதல் கோயில் பிரகாரம் வரை - நட்டுமுட்டு, சின்னமேளம் ( அல்லது முகவீணை )
கோயிலுக்குள் - துரிதகால திருபுடை தாள மல்லாரிகள்.
தட்டு சுற்று நேரம் - தேவாரம், திருப்புகழ்.
யதாஸ்தானத்திற்கு எழுந்தருளும்போது - எச்சரிக்கை.
விழாக்காலங்களில், கொடி ஏற்றும் போதும், கொடி இறங்கும் போதும், #நவ_சந்திகளில் இசைக்க வேண்டிய பண்/ராக முறைகள் :
#பிரம_சந்தி - மத்தி - பைரவி.
#இந்திர_சந்தி - கிழக்கு - குர்ஜரீ.
#அக்கினி_சந்தி - தென்கிழக்கு - நாட்டை.
#யம_சந்தி - தெற்கு - தசாக்ஷரீ.
#நிருதி_சந்தி - தென்மேற்கு - குண்டக்கிரியா
#வருண_சந்தி - மேற்கு - வராளி.
#வாயு_சந்தி - வடமேற்கு - வேளாவளி.
#குபேர_சந்தி - வடக்கு - ராம்கலீ.
#ஈசான_சந்தி - வட கிழக்கு - பிலஹரி.
Comments
Post a Comment