வாடகை வீடு குடி புகுவதற்கான உகந்த நல்ல நாட்கள் :



தாகமார் கழிபானியாடி யோடு தங்குபுரட் டாசிபங் குனியுந் தள்ளிப்
பாகமாய்த் திங்கள்புதன் வியாழம் வெள்ளி பஞ்ச மியுந் திரிதிகைசத் தமியி லேதான்
ஏகமாம் ரோகணியுஞ் சதய மோணம் இயல்பான வுத்திரட் டாதி பூசம்
வேகமா யிடப துலாந் தனுர்மீ னத்தில் மிக்கதொரு வீடுகுடி புகுநா ளாமே.
                                                                                                      -  சோதிட முகூர்த்த சிந்தாமணி

ஜோதிடத்தில்உபய மாதங்கள் என சொல்லப்படும் மார்கழி, ஆனி, ஆடி, புரட்டாசி மாதங்களை தவிர்த்து ஏனைய மாதங்களில்...

சுப கிரகங்களின் கிழமைகள் என சொல்லப்படும் திங்கள், புதன், வியாழன, வெள்ளிக் கிழமைகளில்...

சுப திதிகளான பஞ்சமி, திரிதியை, சப்தமி திதிகளில் உள்ள நாட்களில்...

சதயம், ரோகிணி, சதயம், திருவோணம், உத்திரட்டாதி,  பூசம் ஆகிய முழு நட்சத்திரங்கள் உள்ள நாட்களில்..

ரிஷபம், துலாம், தனுசு, மீனம் லக்கினமாக அமைந்த நேரங்களில் 

ஒருவர் .வாடகை வீட்டுக்கு குடியேற சிறந்த நாட்களாகும்


உற்றசித் திரையுமா வணிவை காசி ஓங்குங்கார்த் திகையுமற் பசிதை மாதம்
மற்றதிங்கள் புந்திகுரு வெள்ளி வாரம் வந்திடுபஞ் சமிதுதிகை திருதி கையும்
பெற்றேகா தசிதசமி திதியினோடு பிறங்குமசு பதியும் ரோ கணியும் பூசம்
ஒற்றுமையாம் உத்திரட் டாதி தன்னோ டுளமகிழும் மிருகசீ ரிடமுநன்றே.

மிகையிலாச் சோதியஸ்த மனுஷமூலம் மிக்கநலம் சதையம்ரே வதியுமோணம்
தகையிலா யிடபமொடு மிதுன சிம்மம் தனுசு மீனங்கன்னி யிந்தராசி
வகையாக யிந்நாளில் முகூர்த்தம் வைத்து மரண யோ கங்கரிநாள் மற்றநாளும்
பகையாகுங் குருசுங்க னஸ்தமானம் பார்த்துநீ கிரகப் பிர வேசஞ் செய்யே.
                                                                                                -சோதிட முகூர்த்த சிந்தாமணி

சித்திரை , ஆவணி, வைகாசி, கார்த்திகை, ஐப்பசி, மாதங்களில்

திங்கள் புதன், வியாழன், வெள்ளிக் கிழமைகளில்...

பஞ்சமி, துதியை, திருதியை, ஏகாதசி, தசமி திதிகளில்..

அசுபதி, ரோகிணி, பூசம், உத்திரட்டாதி, மிருகசிரீட , சுவாதி, அஸ்தம், அனுஷம், மூலம், சதயம், ரேவதி, திருவோணம் நட்சத்திரங்களில்..

ரிஷபம், மிதுன, சிம்ம, தனுசு மீனம், கன்னி லக்கினங்களில்.....

மரணயோகங்கள், கரிநாள், நாட்பகை, குரு மற்றும் சுக்கிரன் அஸ்தமன மூடம் இல்லாத நாட்களில்கிரக பிரவேச முகூர்த்தம் வைத்து குடி புக வேண்டும்

Comments

Popular posts from this blog

இயற்கை ro water :-

நுரையீரல் பலம் பெற:-

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்:-