தியானம் செய்வது எப்படி :-
#தியானம் செய்ய விரும்பும் சாதகன் ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தேர்வு செய்தல் வேண்டும்.
தன் வீட்டில் ஓர் அறையை அல்லது ஓர் இடத்தை இதற்கெனத் தேர்வு செய்து அந்த இடத்தில் தியானம் செய்தல் வேண்டும்.
வேறு எந்தக் காரியமும் அந்த அறையில் செய்யலாகாது. அதாவது அந்த அறை தியான அறையாக மட்டும்தான் இருக்க வேண்டும்.
அந்த அறையைத் தினமும் சுத்தம் செய்து தூப தீபங்கள் காட்டி இட்ட தெய்வத்திற்குப் புட்ப பரிமளங்கள் சாத்தி நைவேத்தியம் செய்தல் வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அந்த அறைக்குள் நுழைந்தால் நாம் பேரானந்தம் அடையவும் மிக விரைவாக தியானத்தில் ஈடுபடவும் யோக சக்திகளைப் பெறவும் ஏதுவாகயிருக்கும்.
#தினமும் குறிப்பிட்ட நேரத்தில் தியானம் செய்வது அவசியம் முடிந்தவரை பிரம்ம முகூர்த்தம் எனப்படும் காலை 3 மணிமுதல் 6 மணிவரை தியானம் செய்தல் நன்று. மாலையில் அந்தி வேளையில் தியானம் செய்வதும் நல்லது.
🙏🔥🧘⚜️🌳🔱🪔🥥🌹🙏
அமரும் முறை:- 🙏🙏🙏
#தியானத்தின் போது நாம் கிழக்கு முகமாகப் பார்த்து அமர்வது நல்லது.
#வடக்கு முகமாகவும் வடகிழக்கு முகமாகவும் அமர்ந்து தியானம் செய்யலாம்.
#தியானத்தின் போது முடிந்தவரை இடையே எழுந்து வேறு காரியங்கள் செய்து மறுபடியும் தியானம் செய்தல் கூடாது.
#குறைந்தது 20 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை தொடர்ந்து தியானம் செய்தல் அவசியம்.
#மற்றவர்கள் இடையூறு செய்யாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம்.
#ஸ்ரீமத் பகவத்கீதையில் 6-ஆம் அத்தியாயத்தில் 11-ஆவது சுலோகத்தில் ஒரு சாதகன் தியானம் செய்ய வேண்டிய இடம் எப்படி இருக்க வேண்டும் என்று பின்வருமாறு கூறுகிறார்.
#தியானம் செய்ய வேண்டிய இடம் சுத்தமாக இருக்க வேண்டும். மிக உயரமாகவோ, அதிக தாழ்வாகவோ இருக்கக் கூடாது, உறுதியாக இருத்தல் வேண்டும். துணி, மான்தோல், தர்ப்பை இவைகளைக் கொண்ட ஆஸனத்தை நன்கமைத்துக் கொண்ட ஆஸனத்தில் அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்தி, மனம் இந்திரியங்கள் இவைகளின் செயலை அடக்கி, சித்த சுத்தியின் பொருட்டு யோகம் பயிலுக. தேகம், தலை, கழுத்து இவைகளை நேராக அசையாது வைத்துக் கொண்டு மூக்கு நுனியைப் பார்ப்பது போலிருந்து வெளி விஷயங்களைப் பாராதிருத்தல் வேண்டும் என கூறப்படுகிறது .
ஓம் நமச்சிவாய
Comments
Post a Comment