Posts

Showing posts from January, 2021

தியானம் செய்வது எப்படி :-

#தியானம் செய்ய விரும்பும் சாதகன் ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தேர்வு செய்தல் வேண்டும்.  தன் வீட்டில் ஓர் அறையை அல்லது ஓர் இடத்தை இதற்கெனத் தேர்வு செய்து அந்த இடத்தில் தியானம் செய்தல் வேண்டும்.  வேறு எந்தக் காரியமும் அந்த அறையில் செய்யலாகாது. அதாவது அந்த அறை தியான அறையாக மட்டும்தான் இருக்க வேண்டும்.  அந்த அறையைத் தினமும் சுத்தம் செய்து தூப தீபங்கள் காட்டி இட்ட தெய்வத்திற்குப் புட்ப பரிமளங்கள் சாத்தி நைவேத்தியம் செய்தல் வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அந்த அறைக்குள் நுழைந்தால் நாம் பேரானந்தம் அடையவும் மிக விரைவாக தியானத்தில் ஈடுபடவும் யோக சக்திகளைப் பெறவும் ஏதுவாகயிருக்கும். #தினமும் குறிப்பிட்ட நேரத்தில் தியானம் செய்வது அவசியம் முடிந்தவரை பிரம்ம முகூர்த்தம் எனப்படும் காலை 3 மணிமுதல் 6 மணிவரை தியானம் செய்தல் நன்று. மாலையில் அந்தி வேளையில் தியானம் செய்வதும் நல்லது. 🙏🔥🧘⚜️🌳🔱🪔🥥🌹🙏 அமரும் முறை:- 🙏🙏🙏 #தியானத்தின் போது நாம் கிழக்கு முகமாகப் பார்த்து அமர்வது நல்லது.  #வடக்கு முகமாகவும் வடகிழக்கு முகமாகவும் அமர்ந்து தியானம் செய்யலாம்.  #தியானத்தின் போது முடிந்தவரை ...

செய்வினை தோஷத்தை விரட்டும் பரிகாரம் :

செய்வினை தோஷத்தை விரட்டும் பரிகாரம் செய்வினை காரணமாக தொழில் நஷ்டம், வறுமை, பிள்ளைகள் கல்வி மந்தம், கடன் தொல்லை போன்றவை ஏற்படலாம். செய்வினை பாதிப்புக்கு குல தெய்வக் குற்றமும் காரணமாக இருக்கலாம். செல்வம் வரும் போது குல தெய்வத்தை மறந்து விடுவதே இதற்குக் காரணம் எனவே குடும்பத்தோடு குல தெய்வத்தை மூன்று பவுர்ணமிக்கு நேரில் சென்று வழிபட்டு வந்தால் ஒருவர் செய்த செய்வினை உங்களை பாதிக்காது. ஒரு சனிக்கிழமையில் உங்கள் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவிலுக்குச் சென்று அங்குள்ள நவகிரகங்களுக்கு தேங்காய்-9, நாட்டு வாழைப்பழகம்- 18, கொட்டைப்பாக்கு-18, வெற்றிலை -18, கதம்பப்பூ- ஒன்பது முழம். பூஜைப் பொருட்களைக் கொண்டு வழிபாடு செய்தால், உங்களுக்குக் கெடுதல் செய்ய வைக்கப்பட்ட செய்வினை நீங்கும். செய்வினை தோஷத்தை விரட்டும் மற்றொரு பரிகாரம் வருமாறு:- முதலில் குலதெய்வத்துக்குக் காணிக்கை எடுத்து வைக்க வேண்டும். 27 எலுமிச்சைப் பழம் எடுத்து, அதனைச் சாறுபிழிந்து ஒரு பாத்திரத்தில் எடுக்க வேண்டும். (சாறோடு தேவையான அளவு தண்ணீர் கலந்து வைத்துக் கொள்ளலாம்) பிழியப்பட்ட சாறை, உங்கள் வீட்டைச் சுற்றியும், வியாபார இடத்தைச் சுற்றி...

குணங்கள் வாஸ்து :

ஒருவர் எச்சிலை மற்றொருவர் சாப்பிட்டால் அவர்களுடைய குணங்கள் வாசனைகளாக நமக்கு வரும் .  அது போல ஒருவர் செருப்பை மற்றொருவர் போட்டாலோ, இல்லை துணி மணியை உபயோகித்தாலோ, இல்லை ஒருவர் படுக்கையில் அடுத்தவர் படுத்தாலோ, இல்லை ஒருவர் மாலையை இன்னொருவர் சூட்டிக்கொண்டாலோ, ஒருவர் பாத்திரத்தை இன்னொருவர் உபயோகித்தாலோ, ஒருவர் உள்ளங்கையை இன்னொருவர் உள்ளங்கையால் தொட்டாலோ, அவர்கள் குணங்கள் வாசனைகளாக நமக்கு வரும் . திருமணத்தின் பிறகு இருவருடைய மனமும் ஒத்து போக வேண்டும், சண்டை போட கூடாது என்பதால் இருவேறு குடும்பங்களில் இருந்து வந்த இவர்களுடைய குணங்களும் வாசனைகளும் இருவருக்கும் ஒன்றாக வேண்டும். அதற்க்கு தான் திருமண சடங்குகளில் ஒருவர் மாலையை இன்னொருவருக்கு போடுதல் , ஒருவர் எச்சில் செய்த தட்டில் இன்னொருவர் சாப்பிடுதல் , இருவர் உள்ளங்கையையும் சேர்த்து பாணிக்கிரஹணம் என்று பிடித்தல் , ஒருவர் காலை இன்னொருவர் தொடுதல் , ஒருவர் கட்டிக்கொண்டிருக்கும் துணியை இன்னொருவர் துணியுடன் முடி போடுதல் , என்று இருவருடைய வாசனைகள் , குணங்களை பரிமாறி கொள்ளும் சடங்குகளாக வைத்து இருக்கின்றனர் . அதனால் மனமும் குணமும் வாசனைகளும் ஒத்துப்...

27 நட்சத்திரங்களுக்கு தாராபலன் அறிய உதவும் அட்டவணை:

Image
27 நட்சத்திரங்களுக்கு தாராபலன் அறிய உதவும் அட்டவணை.  #உதாரணமாக  1.அசுவனி நட்சத்திர நட்சத்திரத்தில் பிறந்தவருக்கு 2 எனும் எண்ணான பரணி சம்பத்தாரரையாகும்  அதே போல  16. விசாக நட்சத்திரத்தில் பிறந்தவருக்கு  17 -அனுசம் சம்பத்தாரை  19- மூலம் சேமத்தாரை இது எளிதாக புரியும் என்று நம்புகிறேன்.  அவரவர் பிறந்த நட்சத்திரத்திற்கு 2,4,6,8,9 நன்மை செய்யத்தக்க நட்சத்திரங்களாகும் எண்கள் நட்சத்திர பெயரை குறிக்கிறது  1.அசுவனி 2.பரணி 3.கிருத்திகை  இப்படியே கவனிக்கவும் 

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு:

1.பச்சரிசி அதிகமானால்- சோகை நோய் 2.அச்சுவெல்லம் அதிகமானால் _ அஜீரணம்  3.பலகாரம் அதிகமானால் - வயிற்று வலி 4. இஞ்சி அதிகமானால் - மென் குரலும் இறுக்கமாகும் 5.பழைய சோறு, கஞ்சி அதிகமானால் - வாயு, வயிற்று பொறுமல் ஏற்பட்டு கை கால்வலிக்கும்  6. தேங்காய் அதிகமானால் - சளி, பித்தம், வறட்டு இருமல் உண்டாகும்  7.மாங்காய் அதிகமானால் - வயிறு கட்டும் சளி வளரும், இடுப்புவலிவரும். பித்தம் அதிகமாகும்.  8.கோதுமையைசூட்டு உடம்புள்ளவர்கள் அதிகம உண்டால் - வயிறு வீங்கும், குடல் இரையும், பித்தம் அதிகமாகும்  9.பாதாம் பருப்பு அதிகமானால் - வாய் சுவை மாறும் பித்த அதிகமாகும். வயிறு மந்தமாகும். 10.முற்றிய முருங்கை சாப்பிட - வாயு சளி உண்டாகும்  11.எருமைப்பால் அதிகம் குடிக்க - கிட்னி கல், அறிவு மங்கும்  12.மிளகு - உடம்பில் சக்தி இல்லாதவர்கள். அதிகம் உண்டால் வெப்பம் உண்டாகும்.  13.மிளகாய் அதிகமானால் -வெப்பமுண்டாகும், சளி அதிகரிக்கும், விந்து கெடும்.  14.காபி அதிகமானால் - கை நடுங்கும் பித்தம் அதிகமாகும். கண்ணெரியும், நெஞ்சு உலரும் ஆண்மை கெடும். 15.டீ அதிகமானால் - உடல் நடுங்கும் ...

எந்தெந்த மாதத்தில் என்ன பயிர்கள் செய்யலாம் விவரங்கள்:

#சித்திரை: 1. உளுந்து 2. நிலக்கடலை 3. தினை 4 எள்  5.சோளம்  6.நாட்டுக்கம்பு  7.துவரை 8. வெங்காயம் 9. சேனைக்கிழங்கு #வைகாசி : 1. எள் 2. உளுந்து 3. முருங்கை 4. சூரியகாந்தி 5. நிலக்கடலை 6. சாமை 7. ராகி 8. பனிவரகு 9. கருத்தக்கார் 10. ரஸ்தாளி வாழை 11. ஆனைக்கொம்பன் வெண்டை 12. சின்ன வெங்காயம் 13. வெண்டை 14. புதினா 15. சேப்பங்கிழங்கு 16. மஞ்சள் #ஆனி: 1. உளுந்து 2. மஞ்சள்  3. நிலக்கடலை 4. செம்பருத்தி  5. வெண்டை 6. எள்  7. மா 8. சின்ன வெங்காயம் 9. சாமை 10. கொடி பீன்ஸ்  #ஆடி: 1. சோளம் 2. ராகி 3. கம்பு 4. துவரை 5. நாட்டுப் பருத்தி 6. வாழை 11. நிலக்கடலை 12. செடிமுருங்கை 13. உளுந்து 14. பாசிப்பயறு 15. சூரியகாந்தி 16. காவளிக் கிழங்கு 17. எலுமிச்சை  18. மிளகாய் 19. குதிரைவாலி  20. வரகு 21. தினை 22. சாமை 23. நேந்திரன் வாழை 24. சேனைக்கிழங்கு 25. பப்பாளி 26. செம்பருத்தி  27. வெண்டை 28. மாப்பிள்ளைச் சம்பா 29. மா 30. மல்லிகை  31. சின்ன வெங்காயம் 32. நாட்டுக்கம்பு 33. நாடன் வாழை 34. கொய்யா  35. கோவைக்காய்  36. வெண்டை 37. கத்திரி 38. தக்காளி 39. ...

கண் திருஷ்டி பரிகாரங்கள்

  கண் பார்வையால் ஏற்படும் தோஷத்தை ‘திருஷ்டி’ என்பார்கள். ‘திருஷ்டி’ என்பதற்கு ‘பார்வை’ என்று பொருள். “கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது” என்பது பழமொழி. பார்வையை, சுப பார்வை, அசுப பார்வை என வகைப்படுத்தலாம். சித்தர்கள், ஞானிகள், ஆன்மிகவாதிகளின் பார்வை பலம் நிறைந்தது. அவர்களின் பார்வை படுபவர்களுக்கு சுப பலன் கிடைக்கும். சிலருடைய பார்வை தீய சக்தியை ஏற்படுத்தும். கண் திருஷ்டி என்பது பொறாமை, கெட்ட எண்ணங்களின் தொடர்ச்சியான தாக்குதலால் ஏற்படக்கூடியது. அதனால் எற்படும் பாதிப்பு, சிலருக்கு சிறியதாகவும், பலருக்கு தொடர்ச்சியான பின் விளைவுகளையும் தரும். கண் திருஷ்டி யாரை எளிதில் தாக்கும்?, யாரை தாக்காது? என்பதை ஜோதிட ரீதியான காரணங்களைக் கொண்டு பார்க்கலாம். * ஒருவரது ஜாதகத்தில் லக்னம் மற்றும் லக்னாதிபதி வலிமையாக இருந்தால், அவரை கண் திருஷ்டி எளிதில் பாதிக்காது. * லக்னம், ஐந்து, ஒன்பதாம் இடத்தில் மாந்தி இருந்தால், அந்த நபர்களை கண் திருஷ்டி எளிதில் பாதிக்கும். * லக்னாதிபதி 6, 8, 12-ல் மறைந்திருந்தால், அவர்களுக்கு கண் திருஷ்டி பாதிப்பு நீண்ட காலத்திற்கு இருக்கும். சிலருக்கு செய்வினையாக மாறவும் வாய்ப...

வாடகை வீடு குடி புகுவதற்கான உகந்த நல்ல நாட்கள் :

தாகமார் கழிபானியாடி யோடு தங்குபுரட் டாசிபங் குனியுந் தள்ளிப் பாகமாய்த் திங்கள்புதன் வியாழம் வெள்ளி பஞ்ச மியுந் திரிதிகைசத் தமியி லேதான் ஏகமாம் ரோகணியுஞ் சதய மோணம் இயல்பான வுத்திரட் டாதி பூசம் வேகமா யிடப துலாந் தனுர்மீ னத்தில் மிக்கதொரு வீடுகுடி புகுநா ளாமே.                                                                                                       -  சோதிட முகூர்த்த சிந்தாமணி ஜோதிடத்தில்உபய மாதங்கள் என சொல்லப்படும் மார்கழி, ஆனி, ஆடி, புரட்டாசி மாதங்களை தவிர்த்து ஏனைய மாதங்களில்... சுப கிரகங்களின் கிழமைகள் என சொல்லப்படும் திங்கள், புதன், வியாழன, வெள்ளிக் கிழமைகளில்... சுப திதிகளான பஞ்சமி, திரிதியை, சப்தமி திதிகளில் உள்ள நாட்களில்... சதயம், ரோகிணி, சதயம், திருவோணம், உத்திரட்டாதி,  பூசம் ஆகிய முழு நட்சத்திரங்கள் உள்ள நா...

சுபகாரியம் எந்த நட்சத்திரத்தில் செய்யலாம் ?

1, அசுவினி நட்சத்திரத்தில் சூரியனை வணங்கிவிட்டு தன்னை விட உயர்ந்தவர்களை ,உயர் அதிகாரிகளை சந்தித்தால் காரியம் மிகச் சுலபமாக முடியும் . 2, மிருகசீரிடம் நட்சத்திரத்தில் சிவனை வணங்கி விட்டு வாகனம் வாங்கினால் விருத்தியாகும் . 3, அஸ்தம் நட்சத்திரத்தில் அம்பாளை வணங்கி விட்டு பெண் பார்க்கச் சென்றால் திருமணம் உடனடியாக நிச்சயமாகும்.கிருஷ்ண பகவான் இதே நட்சத்திரத்தில் அம்பாளை வணங்கி விட்டு சத்யபாமாவை பெண் பார்க்க சென்றாராம்.இதனாலயே சத்யபாமாவை தடங்கலின்றி மணந்தாராம் . 4, அனுஷம் நட்சத்திரத்தில் சிவனுக்கு அர்ச்சனை செய்துவிட்டு இரும்பு இயந்திரங்கள் ,தளவாடச் சாமான்கள் முதலியவை வாங்கினால் தொழில் நன்கு வளர்ச்சியுறும் . 5, திருவோணம் நட்சத்திரத்தில் பெருமாளை வணங்கிவிட்டு வெளிநாட்டுப் பயணம் செய்தால் வெற்றியுடன் திரும்பலாம் .நிலம் வாங்குவதற்கும் இது பொருந்தும் . 6, அவிட்டம் நட்சத்திரத்தில் முருகப்பெருமானை வணங்கிவிட்டு வெளியில் சென்றால் விபத்துக்கள் நேராது .அவ்வாறு ஏற்பட்டால் காயமின்றி தப்பிக்கலாம் . 7, பூசம் நட்சத்திரத்தில் பெருமாளை வணங்கி வந்தால் தீராத வியாதிகள் தீரும் .அறுவை சிகிச்சை செய்வதற்கும் ,டாக்டரை ...

வீட்டு கட்டும் யோகமும் , கிரகபிரவேசம் செய்ய உகந்த வாஸ்து காலமும்.

பொதுவாக பெரும்பாலானோரின் கனவு "வாழ்க்கையில் சொந்த வீடொன்றாவது வாங்கனும். சிறுமையாக சேர்த்தேனும் வங்கிக்கடன் வாங்கியேனும் வீட்டை கட்டனும்" என்பது தான்.  ஜோதிட ரீதியாக அவ்வமைப்பு உண்டா என்பதை பின்வருமாறு ஆராயலாம், லக்ன ராசிகளின் நான்காம் அதிபதி வீட்டை குறிக்கும். (சுகஸ்தானம்) அதன் அதிபதி சுகாதிபதி ஆவார். வீட்டுக்கு காரகராக செவ்வாயும், நிலத்திற்கு காரகனாக புதனும் செயற்படுவர்கள்.  * லக்ன ராசிக்கு நான்காம் அதிபதி ஆட்சி உச்சமாகியோ,  * கேந்திர கோணத்தில் அமர்ந்தாலோ,  * குரு, சுக்கிரன், பௌர்ணமி சந்திரன் முதலான சுபர் பார்வையில் அமர்ந்தாலோ, சேர்க்கை பெற்றாலோ,  * செவ்வாய் ஆட்சி உச்சமாகி / கேந்திர கோணத்தில் / சுபர் தொடர்பில் இருந்தாலும் வீட்டு யோகம் உண்டாகும். * புதன் ஆட்சி உச்சமாகி / கேந்திர கோணத்தில்/ சுபர் தொடர்பில் இருந்தால் காணி யோகமும் உண்டாகும்.  * நான்காம் அதிபதி பகை நீசம் அஸ்தங்கமோ அடையாமல் நட்பு வீட்டில் நின்றாலும் சொந்த வீட்டில் வசிக்கும் நிலை உண்டாகும். * 4ம் அதிபதி / செவ்வாய் அதிக பலமோ சுபத்துவமோ அடைந்தால் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் அமையும். குறிப்பு: இந்த ...