சக்கரைநோய்_உள்ளவர்களுக்கு…#வீட்டு_வைத்திய_முறைகள்…
#சக்கரைநோய்_உள்ளவர்களுக்கு…
#வீட்டு_வைத்திய_முறைகள்…❓❗
❓சர்க்கரை கட்டுப்பாட்டில் வராமல் இருப்பதற்கான சில காரணங்கள். 😲😳
😳 1, ரத்தத்தில் கொழுப்பின்
(LDL & TGL) அளவு அதிகரித்தால் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.
😳 2, கல்லீரல் மற்றும் மண்ணீரலின் செயல்பாடு சரியாக இல்லாமல் இருந்தால் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.
😳 3, சிறுநீரில் அல்புமின் கசிவு இருந்தால் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.
😳 4, சிறுநீரில் கிருமிகள் இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.
😳 5, தொடர்ந்து சளி இருமல் இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.
😳 6, குடலில் அமில சுரப்பு அதிகம் இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.
😳 7, தூக்கமின்மை இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.
😳 8, மன உளைச்சல் மன அழுத்தம் இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.
😳 9, தைராய்டு பிரச்சினை இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.
😳 10, சிறுநீரகம் பாதிப்பு இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.
😳 11, மலசிக்கல் பாதிப்பு இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.
😳 12, உடல் உழைப்பு இல்லை என்றாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.
😳 13, கணையத்தின் செயல்திறநில்
ஏற்றதாழ்வு இருந்தாலும்
சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.
😳 14, செரிமான பிறச்சனை இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.
😳 15, மன அழுத்தம் இருந்தாலும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.
😳 16, சிறுநீரகத்தின் செயல்பாடு சரியாக இல்லையென்றாலும்
சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்காது.
#சுகர்னு_docter_கிட்ட
#போராங்க…
சுகர்னு docter கிட்ட போராங்க
அவரும் செக் பண்ணிட்டு 1 mg tablet கொடுக்கிறார்.
ஒரு வருஷம் கழிச்சு சுகர் எரிடுச்சுனு 2 mg tablet கொடுக்கிறார்.
மறுபடியும் சுகர் எரிடுச்சுனு ரெண்டு combination tablet கொடுக்கிறார்.
மறுபடியும் சுகர் எரிடுச்சுனு இன்சுலின் போட சொல்லுறார்.
அப்புறம் சுகர் கூட BP சேர்ந்திடுச்சுனு PRESSURE மாத்திரை போட சொல்லுறார்.
அப்புறம் கொலஸ்ட்ரால் சேர்ந்திடுச்சுனு அதுக்கு ஒரு மாத்திரை போட சொல்லுறார்.
அப்புறம் கால்ல புண்ணு வந்திடுச்சுனு காலை வெட்டி எடுக்க சொல்லுறான்.
காலை வெட்டி எடுத்ததும் ஒரு வருஷத்துல உயிர் போய்டுது.
இதுல எந்த இடத்துலயும் அவன்……
DOCTER ரை திட்டுறது இல்லை.
தான் சாப்பிடற டேப்லெட் மேல சந்தேகம் வரல.
மாத்திரை சாப்பிட்டும் நோய் அதிகமாகிட்டே.... போகுதேனு அவன் யோசிக்களை.
ஒரு நோய் வந்து அப்புறம் மூணு நோய் ஆகிடுச்சேனு அவன் சிந்திக்கவில்லை.
வாரம் 300 ரூபாய்க்கு மாத்திரை சாப்பிட்டா போதும்னு நம்புறான்.
TABLET சாப்பிட்டா கிட்னி FAILURE ஆகும்னு அந்த அட்டையில் ஓரமா எழுதி இருக்கிறதை அவன் படிக்கிறது இல்லை.
அந்த மாத்திரையோட பக்க விளைவை பத்தி அவன் படிக்கிறது இல்லை.
வீட்டுல இருக்கிற பொருட்களை வெச்சே இதை சரி செய்யலாம்னு ஒருத்தன் சொன்னா, அவனை கிறுக்கன்னு சொல்லுவான்.
பாடையில போகுற வரைக்கும்……
நாட்டு மருந்து என்று சொல்ல கூடிய
சித்தா, ஆயூர்வேதம்
வேலைக்கு ஆகாதுனு, ஏதோ நிபுணர் மாதிரியே பேசிட்டு, தானும் செத்தது இல்லாம கூட நாலு பேர கூட்டிட்டு போக ரெடியா இருப்பான்.
♦ நீரழிவுக்கு(சுகர்)
கீழே கூறிய மருந்து சாப்பிடும் முன் கீழே சொல்லப்பட்ட இரத்த பரிசோதனைகளை செய்து கொள்ளவும்.
♦ #சுகர்_பரிசோதனை
1, Sugar
[ உணவுக்கு முன் பரிசோதணை செய்ய வேண்டும். ]
உணவு சாப்பிட்ட இரண்டு மணி நேரம் கழித்து மறுபடியும் Sugar பரிசோதணை செய்ய வேண்டும்.
2, Hba1c.
3, Lipid Profile
HDL
LDL
TGL
4, eGFR
[ Estimation of Glomerular filtration rate ]
3, Creatinine
Urea
Uric Acid
4, Urine for Microalbumin
5, ELECTROLYTE
6, CBC
Esr
6, IgE
கொழுப்பு பரிசோதனையில்
(Lipid Profile)
LDL மற்றும் TGL குறிப்பிட்ட அளவைவிட அதிமாக இருந்தால் சுகர் அளவு இரத்தில் அதிகமாக(இருக்கு)
காட்டும்.
⭕ சர்க்கரை எனும் மதுமேக
நோய் தீர…❓
ஆவாரம்பூ,
நன்னாரிவேர் ,
அதிமதுரம்,
சீந்தில் கொடி
சிறு குறிஞ்சான்,
கறிவேப்பிலை,
கறிமஞ்சள்,
நெல்லிக்காய்,
இலவங்கபட்டை,
கடலழிஞ்சில்,
நில வேம்பு,
நித்ய கல்யாணி,
கடுகு ரோகிணி,
நாவல் கொட்டை,
நாவல்பட்டை,
கீழாநெல்லி ,
வில்வம்,
பன்னீர்பூ,
தண்ணீர் விட்டான்,
நெருஞ்சில்,
வெந்தயம் ,
சிவனார் வேம்பு
ஆகிய வற்றை சம அளவு எடுத்துசுத்தம் செய்து பொடி செய்து கொண்டு காலை மாலை கால் டீஸ்பூன் அளவு சாப்பிட
•• பயன்கள்
மதுமேகம் நீரிழிவு , அரிப்பு ,இரத்த அழுத்தம்,அதிதாகம் கட்டுப்படும்.
♦நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த உற்பத்திக்கு:-
கீழா நெல்லி – 100 கிராம்
மஞ்சள் கரிசாலை – 100 கிராம்
தூதுவளை – 100 கிராம்
கறிவேப்பிலை – 100 கிராம்
திரிபலா – 100 கிராம்
மல்லி இலை சூரணம் – 50 கிராம்
சீரகம் – 50 கிராம்
பிரண்டை – 100 கிராம்
கருஞ்சீரகம் – 50 கிராம்
இவையனைத்தையும் ஒன்றுகலந்து தூள் செய்து தொடர்ந்து சாப்பிட்டுவர, உடலில் இரத்தம், இரத்த ஓட்டம் சீராகி நரம்பு மண்டலம் பலப்படும்.
♦நீரிழிவினால் ஏற்படும் செக்ஸ் குறைபாடு தீரும்.
3 மாதத்தில் நீரிழிவு நீங்க கீழாநெல்லி சூரணம்
கீழாநெல்லி இலை – 100 கிராம்
மஞ்சள் கரிசாலை – 100 கிராம்
ஜாதிக்காய் – 50 கிராம்
ஜாதிபத்திரி – 50 கிராம்
வால் மிளகு – 50 கிராம்
ஏலக்காய் – 50 கிராம்
கிராம்பு – 50 கிராம்
மாசிக்காய் – 50 கிராம்
தாளிசபத்திரி – 50 கிராம்
கசகசா – 50 கிராம்
இவைகளை ஒன்று கலந்து நன்கு அரைத்து சலித்துக் கொள்க.
2 கிராம் வீதம் காலை, மதியம் இருவேளை உணவுக்குப்பின் 3 மாதம் காலம் சாப்பிட நீரிழிவு நீங்கும்.
♦ நீரிழிவு நோயில் இளைத்த உடலை தேற்ற நவதானிய சத்து மாவு
திரிபலா என்பது கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் மூன்றும் கலந்த சூரணமாகும்.
திரிபலா சூரணம் ஒருகிலோ அளவில் பாத்திரத்தில் எடுத்து, அதில் 5 லிட்டர் தண்ணீர் ஊற்றி கஷாயம் செய்யவும். தண்ணீர் பாதியாக சுண்டி வரும் சமயத்தில் கசாயத்தை இறக்கி ஆறவிட வேண்டும்.
இத்துடன்..
சுத்தம் செய்த கொள்ளு – 100 கிராம்
கோதுமை – 100 கிராம்
பச்சைப்பயறு – 100 கிராம்
உளுந்து – 100 கிராம்
கொண்டைக் கடலை – 100 கிராம்
எள் – 100 கிராம்
பச்சரிசி – 100 கிராம்
காராமணி – 100 கிராம்
துவரை – 100 கிராம்
இவைகளை ஒன்றுகலந்து ஆறிய திரிபலா கஷாயத்துடன் சேர்த்து, ஓர் இரவு முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள் காலையில் வெய்யிலில் நன்கு காயவைத்து, அரைத்து, மாவை சலித்துப் பத்திரப்படுத்தவும்.
இதில் இரண்டு கிராம் அளவில் தேனுடன் அல்லது 50 கிராம் மாவை தண்ணீர் கரைத்துக் காய்ச்சி கஞ்சியாகவோ அல்லது களியாகவோ செய்து சாப்பிடலாம். இதனால் நீரிவினால் இளைத்த உடல் செழிக்கும்.
♦ஆவாரம்பூ கஷாயம்
√ தேவையானவை:
ஆவாரம்பூ - 100 கிராம்,
சுக்கு - ஒரு துண்டு,
ஏலக்காய் - 20,
உலர்ந்த வல்லாரை இலை - 100 கிராம்,
சோம்பு - ஒரு டீஸ்பூன்.
* செய்முறை:
மேற்சொன்ன அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து, ஒன்றிரண்டாகப் பொடித்து வைத்துக்கொள்ளவும். தேவையானபோது அதில் கையளவு எடுத்து, அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி கால் லிட்டராக ஆகும் வரை சுண்டக் காய்ச்சவும். அதை வடிகட்டி, தேவையான அளவு பனை வெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக் குடிக்கலாம்.
√√ மருத்துவப் பயன்:
சர்க்கரை நோய்க்கு கைகண்ட மருந்து. சிறுநீர்க் கோளாறுகளை நிவர்த்தி செய்யும். இதய நோய், வாய்ப்புண், சரும நோய்களைப் போக்கும் ஆற்றல்கொண்டது. உஷ்ணத்தைக் குறைத்து உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும்.
♦ ஆரைக்கீரைசூப்
√ தேவையான
பொருட்கள்:
ஆரைக் கீரை – 1 கைப்பிடி
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி இலை – சிறிதளவு
சின்ன வெங்காயம் – 5
பூண்டுப்பல் – 3
மிளகு – 5
சீரகம் – 1 ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன்
இஞ்சி – 1 சிறு துண்டு
உப்பு – தேவையான அளவு
இவற்றைச் சேர்த்து நன்கு நீரில் கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வரலாம்.
சர்க்கரை நோயின் பாதிப்புக்கு ஆளானவர்கள், வாரம் இருமுறை ஆரைக் கீரை சூப் அருந்தி வந்தால் உடல் சோர்வு, மயக்கம், கை, கால் நடுக்கம் நீங்கும். அடிக்கடி சிறுநீர் வெளியேறுவது குறையும். மலச்சிக்கல் தீரும். அசீரணக் கோளாறுகள் நீங்கும்.
சரும நோய்கள் ஏதும் அணுகாது. பித்தத்தைத் தணிப்பதால் கண்பார்வை நரம்புகள் வலுவடையும். பெண்களுக்கு உண்டாகும் சூலக நோய்களைத் தடுக்கும். வயிற்றுப் பூச்சிகளை நீக்குவதுடன், வயிற்றுப் புண்களையும் ஆற்றும்.
♦ திரிபாலா மிளகு சூரணம்
√ தேவையானவை
கடுக்காய் 100 கி
(விதை நீக்கியது)
நெல்லிக்காய் 100 கி
(விதை நீக்கியது)
தான்றிக்காய் 100 கி
(விதை நீக்கியது)
மிளகு 100 கி
சீரகம் 100 கி
அனைத்தைவும் ஒன்றாக சேர்த்து மிசினில் அரைத்து காலை,மாலை உணக்குபின் 1 டீஸ்பூன் சுடான வெண்ணீரில் கலந்து குடித்து வரவும்.
சுகர்(சர்க்கரை வியாதி)
சமநிலைக்கு வரும் வரை. வந்தவுடன் ஆங்கில மருந்தை படிப்படியாக குறைத்து வரவும்.
♦ கோதுமை கஞ்சி
√ தேவையான
பொருட்கள்:
1 - கோதுமை 100 கிராம்
2 - பார்லி 100 கிராம்
3 -100 கிராம்
கருஞ்ஜீரகம்.
★தயாரிக்கும் முறை:
5 கப் தண்ணீரில் மேலே உள்ள அனைத்து பொருட்களையும் போட்டு கொள்ளுங்கள்
அதை 10 நிமிடம் கொதிக்க வைத்துவிட்டு அடுப்பை அணைத்து விடவும்.
அதை தானாகவே குளிர்விக்கவும்.
குளிர்ந்தபின் வடிகட்டி விட்டு அந்த நீரை ஒரு கண்ணாடி பாட்டிலில் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்.
√ பயன்படுத்தும் முறை:
ஒவ்வொரு நாளும் வெரும் வயிற்றில் அதிகாலையில் இந்த தண்ணீரை ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்துக் சாப்பிடுங்கள் பிரகு அறை மணி நேரத்துக்கு எதுவும் சாப்பிட வேண்டாம்
இதை 7நாட்களுக்கு தொடர்ந்து உட்கொள்ளவும்.
அடுத்த வாரம் அதையே மீண்டும் ஆனால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தொடர்ந்து உட்கொள்ளவும்.
இந்த சிகிச்சையால் 2 வாரங்களில் நீங்கள் சாதாரணமாகி விடுவீர்கள். நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு மாற்றத்தை உணர்வீர்கள்.
♦வெண்டைக்காய்
இஞ்சி ஜூஸ்
√ தேவையான
பொருட்கள்:
வெண்டைக்காய் – 1/2 கப் (நறுக்கியது)
இஞ்சி ஜூஸ் – 2 டேபிள் ஸ்பூன்
மிக்ஸியில் வெண்டைக்காய் மற்றும் இஞ்சி சாறு சேர்த்து, அத்துடன் சிறிது நீர் சேர்த்து நன்கு அரைத்து, வடிகட்டினால் ஜூஸ் தயார். இந்த ஜூஸை தினமும் காலையில் உணவு உண்பதற்கு முன் குடிக்க வேண்டும். இப்படி ஒரு மாதம் தொடர்ந்து குடித்தால், சர்க்கரை நோயின் தீவிரம் குறைந்துவிடும்.
♦ சர்க்கரை நோய் புன்னை குணபடுத்த…
நித்திய கல்யாணி செடி அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது. நித்திய கல்யாணி சர்க்கரை அளவை குறைக்க கூடிய தன்மை உடையது. புற்றுநோய்க்கு மருந்தாக அமைகிறது. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கவல்லது. புண்களை விரைவில் ஆற்றும் தன்மை கொண்டது. நித்திய கல்யாணி பூவை பயன்படுத்தி சர்க்கரை நோயாளிகளுக்கான மருந்து தயாரிக்கலாம்.
♦ மருந்துo1
★ தேவையான பொருட்கள்:
நித்திய கல்யாணி பூக்கள் = 5 முதல் 10
சீரகம் கால் ஸ்பூன்
5 முதல் 10
நித்திய கல்யாணி பூக்களை எடுக்கவும்.
இதனுடன் கால் ஸ்பூன் சீரகம் சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர சர்க்கரையின் அளவு குறையும். ரத்த அழுத்தம் சீராகும். நாள்பட்ட புண்கள் சீக்கிரம் ஆறும்.
♦மருந்து o2
★ தேவையான பொருட்கள்:
நித்திய கல்யாணி பூக்கள், 10 பூ
கருஞ்சீரகம்
கால் ஸ்பூன்
நித்திய கல்யாணி பூக்கள் 10 வரை எடுக்கவும்.
இதனுடன் கால் ஸ்பூன் கருஞ்சீரகம் சேர்க்கவும். ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர சீல் பிடித்த புண்கள், ஆறாத புண்கள் விரைவில் குணமாகும். புற்றுநோயாளிகள் இந்த தேனீரை எடுக்கலாம். பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட கருஞ்சீரகம் உடலினுள் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் புண்களை ஆற்றும்.
♦ நித்திய கல்யாணி இலையை பயன்படுத்தி புண்களை ஆற்றும் மருந்து தயாரிக்கலாம்.
★ தேவையான பொருட்கள்:
தேங்காய் எண்ணெய்,
2 பங்கு
நித்திய கல்யாணி இலை.
தேவையான அளவு
ஒரு பாத்திரத்தில்
2 பங்கு தேங்காய் எண்ணெய் எடுத்தால், ஒரு பங்கு நித்திய கல்யாணி இலை பசை
அரைத்து சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை ஆறவைத்து வடிகட்டி புண்கள் மேலே பூசுவதால் நல்ல பலன் கிடைக்கும்.
சீல் பிடித்த, புரையோடிய மற்றும் ரத்தம் கசிகின்ற புண்கள் விரைவில் குணமாகும்.
★ தேவையான பொருட்கள்:
தேங்காய் எண்ணெய்
100 மில்லி
சிகப்பு அரளிப்பூ
ஒரு கைபிடி அளவு
தேங்காய் எண்ணெயில் ஒரு கைபிடி அளவு சிகப்பு அரளிப் பூவை போட்டு ஒரு கண்ணாடி பாட்டிலில் 3-5 நாள் வெயிலில் வைக்கவும்
நன்றாக சாரு எண்ணெயில் இறங்கிவிடும் .பிறகு ஒரு மெல்லிய துணியில் வடிகட்டி பூவை பிழிந்து எடுத்துவிடவும் .
இப்போது பாட்டிலில் எண்ணெய்யை பத்திரமாக வைத்துக்கொண்டு மேல் பூச்சாக உபயோகப்படுத்தவும் .நாள்பட்ட பெரிய புண்ணையும் எந்நிலையில் ஆற்றிடும் தன்மை வாய்ந்தது.
இது கடுமையான விஷம் ,மிகவும் கவனமாக மேல் பூச்சாக மட்டும் உபயோகப்படுத்தவும் .குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.
♦ சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு
பாத எரிச்சல் குணமடைய மிக எளிய கை வைத்தியம்
1, குறிப்பு
பழங்காலத்தில் நாம் மருதாணியை அதிகம் பயன்படுத்துவதுண்டு. அதை இப்போதும் பயன்படுத்தினால் பாத எரிச்சல் குறையும். மருதாணியில் எலுமிச்சை சாறு சேர்ந்து நன்கு அரைத்து அதை பாதத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து பாதத்தை சுத்தம் செய்து வந்தால் பாத எரிச்சல் குறையும்.
2, குறிப்பு
சுத்தமான சட்டியில் எட்டிப்பழத்தை வெதுப்பி பின் அதை தரையில் கொட்டி வெது வெதுப்பான சூட்டோடு இருக்கும் பொழுது பாதத்தில் மிதித்து பின் பாதத்தை சுத்தம் செய்தால் பாத எரிச்சல் குறையும்.
3, குறிப்பு
சோற்றுக்கற்றாழையில் உள்ள சோற்றை பாதத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்து சுத்தம் செய்தால் பாத எரிச்சல் குறையும், பாத வெடிப்பு குணமாகும்.
4, குறிப்பு
இரவு உறங்கும் முன்பு வெந்நீரில் சிறுது உப்பு கலந்து அதில் 10 நிமிடங்கள் காலை ஊற வைத்து பின் சுத்தமான நீரில் கால்களை சுத்தம் செய்து, நன்கு துடைத்து விட்டு பின் சுத்தமான தேங்காய் எண்ணையை காலில் தடவுவதன் மூலம் கால் எரிச்சல் குறையும்.
மேலே கூறிய குறிப்புகளோடு சக்கரை அளவை எப்போதும் கட்டுக்குள் வைத்துக்கொள்வதன் மூலம் பாத எரிச்சலை எளிதில் கட்டுப்படுத்தலாம்.
♦ சக்கரை நோய் உள்ளவர்களுக்கு………
×× சாப்பிட கூடாதவை
நுங்கு
சர்க்கரை
சாக்லெட்
கரும்பு
ஜஸ் கிரீம்
பால்கட்டி (பன்னீர்)
மாம்பழம்
சீத்தாபழம்
பலாப்பழம்
சப்போட்டா
வாழைப்பழம்
காம்பளான்
திரட்டுபால்
குளுகோஸ்
சேப்பங்கிழங்கு
உருளைகிழங்கு
சக்கரைவள்ளி கிழங்கு
உலர்ந்த திராட்சை
குளிர் பானங்கள்
√√ அளவோடு சாப்பிடலாம்
அரிசி
அவல்
ஓட்ஸ்
சோளம்
கேழ்வரகு
கோதுமை
பார்லி அரிசி
வேர்க்கடலை
பாதாம் பருப்பு
முந்திரிபருப்பு
மக்காச்சோளம்
√√√ அளவில்லாமல் √√√ சாப்பிடலாம்
கீரைகள்
தக்காளி
காராமணி
வாழைத்தண்டு
வாழைப்பூ
பாகற்காய்
சுரைக்காய்
பீர்க்கங்காய்
வெங்காயம்
கத்தரிக்காய்
பூசணிக்காய்
அவரைக்காய்
பப்பாளிக்காய்
கோவைக்காய்
வெள்ளரிக்காய்
வெண்டைக்காய்
முருங்கைக்காய்
கொத்தவரங்காய்
சீமைகத்தரிக்காய்
முட்டைகோஸ்
வெள்ளை முள்ளங்கி.
♦நீரழிவுச்சூரணம்
பொடி: 01
இரத்தத்தில் உள்ள சக்கரை அளவை பொறுத்து இன்சுலின் ஊசி அல்லது மாத்திரை பயன்படுத்தினாலும் இச்சூரணத்தை பயன்படுத்தலாம். சூரணம் எடுத்துக்கொள்ள பத்தியம் தேவையில்லை . மற்றும் பக்கவிளைவுகள் இல்லை.
√√ தேவையானவை
1. வெண்தாமரை பூ பொடி -50கிராம்
2. செம்பருத்தி பூ பொடி -50கிராம்
3. ரோஜா பூ பொடி -50கிராம்
4. ஆவாரம் பூ பொடி -100கிராம்
5. சீந்தில் கொடி பொடி -100கிராம்
6. துளசி பொடி -50கிராம்
7. சிறுகுறிஞ்சான் பொடி -50கிராம்
8. நித்திய கல்யாணி வேர் பொடி -50கிராம்
9. சிறு நெருஞ்சில் பொடி -50கிராம்
10. வில்வம் இலை பொடி -50கிராம்
11. மஞ்சள் கரிசலாங்கண்ணி பொடி -50கிராம்
12. கீழாநெல்லி பொடி -50கிராம்
13. மருதம்பட்டை பொடி -50கிராம்
14. மாவிலங்கப்பட்டை பொடி -50கிராம்
15. நாவல் கொட்டை பொடி -50கிராம்
16.கடுக்காய்
17.தான்றிக்காய்
18.நெல்லிக்காய்
மேற்கண்ட பொடிகள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு ஒன்றாக கலந்து வைத்துக் கொண்டு
காலை மாலை இருவேளையும் 5 கிராம்
இந்த சூரணத்துக்கு நிராக சம அளவு மிளகு,சீரகம் சேர்த்து சூடான வெண்ணீரில் கலந்து
சாப்பிட்டு வர சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்கு உள்ளேயே இருக்கும்.
♦நீரழிவுச்சூரணம்
பொடி: 02
√√ தேவையானவை
கருங்காலிப்பட்டை – 50 கிராம்
மருதம்பட்டை – 50 கிராம்
ஆலம்பட்டை – 50 கிராம்
அரசம்பட்டை – 50 கிராம்
ஆவாரம்பட்டை – 50 கிராம்
வெந்தயம் – 25 கிராம்
நாவல் கொட்டை – 25 கிராம்
வில்வ ஓடு – 25 கிராம்
மாதுளை ஓடு – 25 கிராம்
மாம்பருப்பு – 25 கிராம்
இவை அனைத்தையும் காயவைத்து ஒன்றாகக் கலந்து தூள் செய்து கொள்ளவும். இதில் காலை, மாலை இரு வேளையும் 2 முதல் 5 கிராம் வரை சாப்பிட்டு வர சர்க்கரையின் அளவு இயல்பான நிலைக்கு வரும்.
காலை & இரவு திரிபாலா சூரணம் 3 கிராம் சூடான வெண்ணீருடன் உணவு உண்ட அரை மணி நேரம் கழித்து சாப்பிட்டுவரவும்.
♦ நீரிழிவு சூரணம்
தேவையான பொருள்கள்:
வேப்பம் பருப்பு = 10 கிராம்
நாவற்பருப்பு = 40 கிராம்
வெண்துளசி = 20 கிராம்
கருந்துளசி = 20 கிராம்
சிவகரந்தை முழுச்செடி = 40 கிராம்
சுக்கு = 10 கிராம்
மிளகு = 10 கிராம்
ஏலக்காய் = 10 கிராம்
ஜாதிக்காய் = 10 கிராம்
பசும்பால் = 100 மி.லி
இளநீர் = 100 மி.லி
செய்முறை:
வேப்பம் பழத்தை ஒரு பாத்திரத்தில் ஊற விட்டு கையால் பிசைந்து சதைப்பற்றை நீக்கி விட்டு கொட்டைகளை எடுத்து மண் பானையில் போட்டு தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற விடவும். பின்பு கொட்டைகளை எடுத்து மரத்துண்டின் மேல் வைத்து உடைத்து மேல் தோலை நீக்கி விட்டு உள்ளிருக்கும் பருப்பை மட்டும் எடுத்து கொள்ளவும்.
நாவற் பழத்தை தண்ணீர் ஊற்றி ஊற வைத்து பின் கையால் பிசைந்து சதைப்பற்றை நீக்கி விட்டு கொட்டைகளை எடுத்து மண் பானையில் போட்டு தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற விட்டு எடுக்கவும்.
பின்பு கொட்டைகளை எடுத்து மரத்துண்டின் மேல் வைத்து உடைத்து மேல் தோலை நீக்கி விட்டு உள்ளிருக்கும் பருப்பை மட்டும் எடுத்து கொள்ளவும்.
வெண்துளசி, கருந்துளசி இரண்டையும் தனித்தனியாக பிரித்து நிழலில் உலர்த்தவும்.
சிவகரந்தை முழுச்செடியை தூய நீரில் கழுவி நிழலில் உலர்த்தவும்.
சுக்கை தோல் நீக்கி கொள்ளவும்.
மிளகை இளம் வறுவலாக வறுத்து கொள்ளவும்.
ஏலக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு 100 மி.லி தண்ணீர் ஊற்றி சுண்டும் அளவுக்கு காய்ச்சி பின் நிழலில் உலர்த்தவும்.
ஜாதிக்காயை சிறு துண்டுகளாக வெட்டி போட்டு 100 மி.லி பசும்பால் ஊற்றி பால் சுண்டும் வரை நன்கு காய்ச்சி பின் அதை எடுத்து தூய நீரில் கழுவவும். மீண்டும் மண் பானையில் போட்டு 200 மி.லி இளநீர் ஊற்றி இளநீர் சுண்டும் வரை நன்கு காய்ச்சி இறக்கி நிழலில் உலர்த்தவும்.
எல்லா மருந்துகளையும் ஈரமில்லாமல் நன்கு உலர்த்தி உரலில் போட்டு நன்றாக இடித்து ஒரு தட்டில் போட்டு 6 மணி நேரம் மூடி வைக்கவும். பிறகு எடுத்து மீண்டும் உரலில் போட்டு இடித்து மெல்லிய துணியால் சலித்து வைத்து கொள்ளவும்.
இந்த சூரணத்தை காலை, மாலை சாப்பிட்டு வெந்நீர் அருந்தி வந்தால் நீரிழிவு குறையும்.
உபயோகிக்கும் முறை:
1 தேக்கரண்டி அளவு காலையில் சாப்பிட்டு பின் வெந்நீர் அருந்தவும். மாலை அரை தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வெந்நீர் அருந்தி வந்தால் நீரிழிவு குறையும்.
♦முக்கிய குறிப்பு
வாழ்நாள் முழுவதும்
செரிமானம் மற்றும் மலசிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.
இதை ஆங்கில மருந்துடன் சேர்த்து எடுத்து கொண்டு வரவும்.
கீழ் காணும் பரிசோதனையை செய்து படிப்படியாக ஆங்கில மருந்தை குறைத்து கொள்ளளாம்.
♦முக்கிய குறிப்பு
மூன்று மாததுக்கு ஒரு முறை கீழே உள்ள பரிசோதனை செய்து கொள்ளவும்.
♦#சுகர்பரிசோதனை♦
1, Sugar
[ உணவுக்கு முன் பரிசோதணை செய்ய வேண்டும். ]
உணவு சாப்பிட்ட இரண்டு மணி நேரம் கழித்து மறுபடியும் Sugar பரிசோதணை செய்ய வேண்டும்.
2, Hba1c.
3, Lipid Profile
HDL
LDL
TGL
4, eGFR
[ Estimation of Glomerular filtration rate ]
3, Creatinine
Urea
Uric Acid
4, Urine for Microalbumin
5, ELECTROLYTE
6, CBC
Esr
6, IgE
கொழுப்பு பரிசோதனையில்
(Lipid Profile)
LDL மற்றும் TGL குறிப்பிட்ட அளவைவிட அதிமாக இருந்தால் சுகர் அளவு இரத்தில் அதிகமாக(இருக்கு)
காட்டும்.
#மேலும்_சில_வைத்திய_குறிப்பு
★சர்க்கரை வியாதிக்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு விழுங்க வேண்டும்.
★சர்க்கரை வியாதிக்கு முருங்கை கீரை கண் கண்ட மருந்து, வாரம் 2 அல்லது 3 முறை சாப்பிடலாம்.
★பாகற்காயை கழுவி, வட்டவட்டமாக நறுக்கி விதையை நீக்கி, நிழலில் காய வைத்து, மிக்ஸியில் அடித்து பொடியாக்கி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு தினமும் 1 தேக்கரண்டி சாப்பிட்டால் சர்க்கரை நோய் குணமாகும்.
★குறிஞ்சாக் கீரையும் சர்க்கரை வியாதிக்கு நல்ல மருந்தாகும்.
★ காய்ச்சி ஆறின (அல்லது வெது வெதுப்பான) தண்ணி ஒரு சிட்டிகை நைஸாக பொடிச்ச பட்டைத்தூள் (சமையல்ல வாசனைக்குப் பயன்படுத்தறபட்டைதான்) போட்டுக் கலந்து வச்சு , காலையில் வெறும் வயித்தில் குடிக்கலாம். இது ரத்த சர்க்கரை அளவைச் சீராக்கும்.
★ வெந்தயத்தை ராத்திரியேஊறவச்சு, காலையில் அதை ஒரு கிளாஸ் மோரில் கலந்து வெறும் வயித்தில் குடிச்சாலும் நல்லது.
★ பாகற்காய், வாழைத்தண்டு, வெள்ளைப் பூசணி இவற்றில் ஏதாவது ஒரு துண்டு எடுத்து பச்சையாகவோ வேகவச்சோ அரைச்சு அந்தத் தண்ணியைக் காலையில் குடிக்கலாம். ஆனா, இது குடிச்சா, 2 மணி நேரத்துக்கு அப்புறம்தான் காபி,டீ குடிக்கணும். அது முடியாதவங்க, வாழைத் தண்டு அல்லது பூசணியை பச்சையா தயிர் பச்சடி பண்ணி சாப்பிடலாம்.
★குறிப்பு
சர்க்கரை நோய் தீவிரமாக பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு மேற்கண்ட மூலிகை மருந்துகள் உடனடி தீர்வை தராது. மூலிகை மருந்துகள் நிதானமாக மட்டுமே அவற்றின் பலனைக் கொடுக்கும்.
Comments
Post a Comment