நல்ல குழந்தைகள் பெற உகந்த ஜோதிட குறிப்புகள் :-
நல்ல குழந்தைகள் பெற உகந்த ஜோதிட குறிப்புகள்
தம்பதிகள் உத்தமமான நல்ல வாரிசுகளைப் பெற்றுக்கொள்ள "சாராவளி,காலப்ரகாசிகை போன்ற நூல்களை ஆராய்ந்த போது மலைப்பாக இருந்தது,
முன்னோர்கள் சிறப்பான வழியைத் தெளிவாகவே காட்டி இருந்தனர்,அதை எவ்விதம் சுருக்கி தருவது என்ற தடுமாற்றமே
தாமதமாக ஆகி விட்டது, இனி பதிவிற்கு போவோம்,
உலகில் சிறப்பு வாய்ந்த மன்னர்கள்,மந்திரிகள்,தலைமை பதவி பெற்றவர்கள்,அறிஞர்கள்,ககல்விமான்கள்,கலைகளில் சிறந்து புகழ் பெற்றவர்கள் ஜாதகங்களையெல்லாம் ஆராய்ந்து பார்க்கும் போது, நல்ல கிரக சேர்க்கைகள்,யோக அமைப்புகள்,பாவ பலங்கள்,கிரக நிலைகள் அவர்களது ஜாதகத்தில் விரவி நிற்பதை பார்க்கலாம்,
இதிலிருந்து என்னத் தெரிகிறது? ஒரு நல்ல கிரக நிலை,சூழல்களில் ஜனிக்கும் குழந்தை
உயர்நிலையை அடைகிறது என்பது உண்மையாகிறது,எனவே அத்தகைய கிரக சூழல்கள் ஏற்படும் காலங்களில் குழந்தை பிறக்கும்படி கரு தரித்தால்,அந்த குழந்தை உயர்நிலை எய்தி பெயர் பெறும்,
அரசவையில் உள்ள ஜோதிடர்கள் அரசகுடும்பத்திற்கு இந்த கலையை பயன்படுத்தினர்,என்பது வரலாறு உண்மை,
அதற்கு சரியான நட்சத்திரங்கள் 17.
ரோகினி,உத்தரம்,அஸ்தம்,சுவாதி,அனுசம்,மூலம்,உத்ராடம்,திருவோணம்,சதயம்,உத்தரட்டாதி, ரேவதி- இவை சிறப்பு,
அசுவினி,மிருகசீரிடம்,புனர்பூசம்,சித்திரை,அவிட்டம்-இவை மத்திமம்,
கிழமைகள்-திங்கள்,புதன்,வியாழன் வெள்ளி,
திதிகளில்-அமாவாசை,பௌர்ணமி, அட்டமி,நவமி,சதுர்த்தி,சதுர்த்தசி, துவாதசி திதிகளை தவிர்த்து பிற திதிகள் உத்தமமானவை,
ஜென்ம நட்சத்திரத்திலிருந்து 10,19, வது நட்சத்திரத்தையும் தவிர்க்கவேண்டும்,
அன்று சந்திரன் சுப ராசியில் இருகக வேண்டும்- ரிஷபம்,மிதுனம்,கடகம்,சிம்மம்,கன்னி,கன்னி,துலாம்,மீனம், மீதி ராசியை தவிர்க்க,
மாதவிடாய் ஆன தேதியிலிருந்து#16வது நாளில் கரு தரிக்கும் குழந்தை உலகப்புகழ் பெறும்,
#8,10,12,13,14 வது நாளில் கரு தரிக்கும் குழந்தை நல்ல குழந்தையாகும்,
சூரியன்,சந்திரன்,சுக்கிரன்,செவ்வாய் ஆட்சி பெற்றும்,குரு லக்னத்திலோ திரிகோணத்திலோ இருக்கும் காலத்தில் கருதரிக்கும் குழந்தை உலகை ஆளும்,
சந்திரன் பாவ கிரகங்களுக்கு மத்தியில் இல்லாமலும்,பாவ கிரகங்கள் பார்வைபடாமலும் இருக்க வேண்டும்,சூரியனுக்கும் அவ்விதமே,ஏனென்றால் தாய்,தந்தை நிலையும் முக்கியமே,
இந்த விதி முறைகளை கடை பிடித்தாலே
நன்மக்களைப் பெற்று இன்புறலாம்,
Comments
Post a Comment