10ம் பாவகம்
...........................................
10ம் பாவகத்தை பற்றிய ஓர் சிறு ஆய்வு .
இந்த 10ம் பாவக விஷயங்கள் அணைவருக்கும் தெரிந்த விஷயங்கள் என்றாலும் , என்ணுள் அனுபவத்தில் கண்ட விஷயங்களை பகிர்ந்து கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.
பொதுவாக .
10ம் பாவகம் ஜீவன ஸ்தானம் .இந்த 10 மிட அதிபதியை வைத்து ,என்ன தொழில் ஜாதகருக்கு ஊழ்வினை கர்மாவால் அமையும் என்பதை பற்றிய ஆய்வு.
காலபுருஷ தத்துவப் படி 10 வது ராசியான மகரம் தொழில் சார்ந்த ஜீவனத்திற்க்கு உண்டான ராசி.
இந்த ராசி.,
திதி .
நாம யோகம் ,
கரணம் ,
கிரகங்களால் பாதிக்கப்பட்டால் ஜீவன ஸ்தானம் பலம் இழந்து வாழ்க்கையில் அவதியுற நேறும் .
என் என்றால்,
கால புருஷனுக்கு 10 மிடமான மகரம் . ஊழ்வினை கர்ம ஸ்தானம் ஆகும்.
முன்னோர்கள் செய்த பாப , புண்ணிய கர்ம வினை பயனே இந்த 10ம் பாவகம் எடுத்துரைக்கும் .
10ம் பாவகத்தின் காரகத்தன்மை
1 , கர்மஸ்தானம் ,
2 ,ஜீவன ஸ்தானம்,
3 , ஆயுள் ஸ்தானம் ,
முன்னோர்களின் பாப , புண்ணிய கணக்கிற்க்கு ஏற்றார் போல் செயல்படுவது கர்மா
அந்த கர்மாவின் வாயிலாக நமக்கு கிடைப்பது தொழில் மூலமாக நமக்கு கிடைக்கும் வருமானத்தால் நாம் அடையும் ஜீவனம்.
ஜீவனத்தின் வாயிலாக ஒருவருடைய ஆயுளும் நிர்ணயிக்கப்படுகிறது.
அதனால் தான் மகர ராசியில் தனகார கிரகமான குரு நீச்சம் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
கால புருஷ ராசி 10ம் ராசி திதி சூன்யம் மற்றும் நாம யோகம் ,கரண கிரகங்களால் பாதிப்பு அடையக்கூடாது.
(உ. ம்)
திதிகளில் ,
பிரதமை ,
திரிதியை ,
துவாதசி ஆகிய திதிகளில் ,
குறிப்பாக தேய்பிறை திதிகளில் பிறந்தவர்களுக்கு ஜீவன ஸ்தானம் பாதிப்படையும்.
நாம யோகங்களில் ,
விஷ் கம்பம் ,
கண்டம் ,
பரிகம் , ஆகிய நாம யோகங்களில் பிறந்தாலும் ,
ஷோபனம் ,
ஹர்ஷணம் ,
சுபம் ,
ஆகிய நாம யோகங்களில் பிறந்தாலும் ,
10ம் பாவகமான ஜீவன ஸ்தானத்திற்க்கு பங்கமே.
உங்களில் கேள்வி எழலாம்.
ஊழ்வினை பாவ நாம யோகங்களான விஷ்கம்பம் ,
கண்டம் ,பரிகம் ஆகிய நாம யோகங்களுக்கு சனி பகவான் தானே யோகி ,
அப்படி இருக்கையில் எப்படி சனி பகவான் ஜீவனத்தை கெடுப்பான் என்ற கேள்வி எழும்.
அது போல்,
சுப நாம யோகமான
ஷோபனம் ,
ஹர்ஷணம் ,
சுபம் ஆகிய நாம யோகங்கள் ஜீவனத்தையும் கெடுக்கும்.
எப்படி என்றால் ,
மேலே சொல்லப்பட்ட திதியில் பிறந்து ,
மகர ராசி அதிபதியான சனி பகவான் தான் உச்சம் பெற்ற சுவாதி நட்சத்திர லிருந்து , விருச்சிக ராசியான அனுசம் நட்சத்திரம் வரை
ஜனனத்தில் சூரியன் பயணிக்கும் காலத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவனம் போராட்டமே.
அதே போல்
கெளலவ கணத்தில் பிறத்தவர்களும் ,
சகுனி கரணத்தில் பிறந்தவர்களுக்கும் ஜீவன அதிபதியான சனி பகவான் லக்னத்திற்க்கு அப பாவகம் என்று சொல்லப்பட்டுகின்ற ,
3 , 6 , 8 ,12 ல் இருந்தாலும் ஜீவன பாதிப்பே.
மேலும் மகரத்தில் அதிக பாவ கிரகங்கள் சூழ்ந்தாலும் ஜீவன பங்கமே.
மேலும் ,
10 மிடம் யோகமாகவும் , அதிஷ்டமாகவும் மாற்றும் தன்மை 10ம் பாவகத்திற்க்கு 5ம் பாவகமான 2ம் பாவகம்.
Comments
Post a Comment