தாரா பலன் :
தாரா பலன்:-
============================
ஜென்ம தாரை
-----------------------------
 1,10,19 நட்சத்திரங்கள் ஜென்ம தாரை ஆகும். இதை கேடயமாக, ஆயுதமாக பயன்படுத்தலாம்.
சம்பத்து தாரை
-----------------------------
 ஜன்ம நட்சத்திரத்தில் இருந்து  2 ,11 ,20 வது நட்சத்திரம். இது ஒருவருக்கு சகல சம்பத்துகளையும்(வளங்களையும்) தரக்கூடியது.
சேம தாரை
-----------------------
 ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து 4,13, 22 வது நட்சத்திரம் . இது நல்வாழ்வு , உடல்நலம் ,காரியசித்தி ஆகியவை தரும்.
சாதகதாரை 
-------------------------
ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து 6, 15, 24 வது நட்சத்திரம் சாதக தாரை ஆகும். இது தோஷங்களைப் போக்கி சாதகமான சூழ்நிலையை உருவாக்கித் தரும்.
 பரமமித்ர தாரை
-----------------------------
 ஜன்ம நட்சத்திரத்தில் இருந்து 9,18, 27 வது
நட்சத்திரம். இது மிகவும் நன்மை தரும், வழிகாட்டியாகவும் உதவும்.
 மேற்கண்ட தாரை பலன்களை பெற, அதற்குண்டான நட்சத்திர வடிவங்கள் பயன்படுத்தி வெற்றிபெறலாம்.
உதாரணம்:
-------------------
 ஒருவரின் ஜென்ம நட்சத்திரம் அஸ்வினி என்றால், பரணி நட்சத்திர வடிவமான சங்கு, முக்கோணம் பயன்படுத்தி சர்வ சம்பத்தையும் பெறலாம்.
Comments
Post a Comment